பிரிந்திருக்கும் காதலில் இருக்கும் பிரியமான இன்பங்கள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

பிரிந்திருக்கும் தருணம் தான் காதலில் இருக்கும் இரு இதயங்களை மிக நெருக்கமடைய செய்கிறது. பெரும்பாலான சினிமாக்களில் நாம் கேட்ட வசனம் இது. "ஒண்ணா இருக்கும் போது இல்லாத லவ்வு, இப்போ எங்க இருந்து வந்துச்சாம்." நிறைய மக்கள் என்ன நினைகின்றனர் எனில் நெருங்கி இருந்தால் தான் காதல் நன்கு மலரும் என்று. இது முற்றிலும் தவறான எண்ணம்.

நம் வாழ்வில் நம்மை அறியாது சில தருணங்களை கடந்து வந்திருப்போம். உதாரணத்திற்கு, நீங்கள் எங்காவது அலுவல் வேலையாக இரண்டு நாட்கள் வெளியூர் சென்று திரும்பும் போது உங்களது அன்பு காதலியிடமோ, அல்லது பாசமான மனைவியிடமோ சில மாற்றங்கள் காண இயலும்.

உங்களுக்கு பிடித்த உணவு பரிமாறப்படும், அன்றைய நாளில் டிவி ரிமோட் முதல் வீட்டின் அனைத்து ரிமோட்டுகளும் உங்களுக்கு ஏற்றவாறு இயங்கும். ஆனால் பெரும்பாலும் ஆண்கள் பயணக் களைப்பில் இதை அவ்வளவு சரியாக கண்டுணர மாட்டார்கள். சரி வாருங்கள், பிரிந்திருக்கும் காதலில் இருக்கும் பிரியமான இன்பங்கள் பற்றி இனி அறியலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுதந்திரம்

சுதந்திரம்

இணைந்திருக்கும் போது ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்கிறோம் என்ற பெயரில் நாம் நமக்கான சுதந்திரத்தை இழந்து தான் வாழ்கிறோம். மனதினுள் புளுக்கத்தோடு வெளியில் மட்டும் சிலாகித்துக் கொண்டிருப்போம். ஆனால், தூரம் கடந்து இருந்தாலும் நம் காதல் முழு சுதந்திரத்தோடு பயணிக்கும். காதல் மென்மேலும் அதிகரிக்கக் கூடும்.

திட்டமிடுதல்

திட்டமிடுதல்

ஒன்றாக இருக்கும் போது, நாம் பல சமயங்களில் திட்டமிடுதலைப் பற்றி யோசிப்பதே இல்லை. ஆனால் தூரம் தள்ளி இருக்கும் போது, நம் வாழ்க்கையிலும், எதிர்காலம் மேலும் ஏற்படும் பயம் நமக்கு திட்டமிடுதலின் முக்கியத்துவத்தை உணர்த்தும். இத்தகைய பயம் நல்லதே ஆகும்.

மிகுதியான அன்பு

மிகுதியான அன்பு

ஒரு சில நேரம் இந்த வசனத்தை நீங்கள் உங்களது மனைவியிடம் இருந்தோ அல்ல காதலியிடம் இருந்தோ நிஜ வாழ்க்கையில் கேட்டிருக்க நிறைய வாய்ப்புண்டு, "பக்கத்துல இருக்கும் போது இல்லாத லவ்வு, இப்ப எங்க இருந்து வந்துச்சாம்?" ஆமாம், பொதுவாகவே ஆண்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் அருகில் இருக்கும் எதுவும் நம்மை விட்டு போய்விடாது என்ற நம்பிக்கை. ஆனால் அதை அவர்கள் தூரம் செல்லும் போது தான் உணர்கின்றனர். ஊர் திரும்பியதும் மிகுதியான காதலை பரிசாக கொண்டு வந்து சேர்க்கின்றனர்.

விலைமதிப்பற்ற தருணம்

விலைமதிப்பற்ற தருணம்

நாம் நீண்ட நாள் கழித்து நம் காதலுக்கு உரியவரை காணும் போது நமக்குள் ஏற்படும் அந்த அன்பின் மிகுதி மற்றும் செல்லமான தருணங்கள் எத்தனை விலைக்கொடுத்தாலும் கிடைக்காத ஒன்றாகும்.

 நேரம் போதாது

நேரம் போதாது

நீண்ட இடைவேளைக்கு பின்பு நீங்கள் ஒன்று சேரும் அந்த நாளுக்கு இருபத்தி நாலு மணிநேரம் போதாது. ஷாப்பிங், டின்னர், சினிமா என எல்லாம் முடித்து படுக்கைக்கு செல்லும் வரை அனைத்திற்குமே நேரம் பற்றாக்குறையாக தான் இருக்கும். மீண்டும் இந்த தருணதிற்காக நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தவம் இருப்பீர்கள்.

சண்டைகள் குறையும்

சண்டைகள் குறையும்

பொதுவாக பல சமயங்களில் வேண்டாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி தாமாகவே சண்டைகளை வார்த்தை கொடுத்து வாங்கிக் கொள்வோம். ஆனால், இந்த தொலைதூர காதலில் அவைக்கு இடமே கிடையாது. நீங்கள் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் காதலும், அக்கறையும், அன்பும் மட்டுமே எதிரொலிக்கும். இதனால் வேண்டாத சண்டைகளும், மன வருத்தங்களும் ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக குறையும்.

உண்மையான காதல் வெளிப்படும்.

உண்மையான காதல் வெளிப்படும்.

தினசரி பார்த்து காதலிப்பவர்கள் தினம் தினம் தாம் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் அன்பை வெளிப்படுத்துவதை விடை அதிகம் மேக்-அப்'பை தான் வெளிப்படுத்துவர். ஆனால். தொலைதூரக் காதல் கதையில் முற்றிலும் உண்மையான காதல் மட்டுமே வெளிப்படும். பிரிந்த நாட்களில் தேக்கி வைத்திருந்த அன்பும், பாசமும் ஒட்டுமொத்தமாய் வெளிக்காட்டிட மட்டுமே நேரம் இருக்குமே தவிர மேக்-கப் செய்திட ஓர் நொடி கூட இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Awesome Benefits Of Long Distance Relationship

Long distance relationships are more beautiful and have its own benefits. Take a look.
Story first published: Thursday, February 5, 2015, 15:50 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter