For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தன் மகளிடம் ஒவ்வொரு தாயும் கூற வேண்டிய 8 திருமண ரகசியங்கள்!!!

By Ashok CR
|

திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான அத்தியாயம் ஆகும். ஒவ்வொரு பெண்ணும் ஆயிரம் கனவுகளோடு அந்த புது வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைப்பாள். புது வாழ்க்கை, புது சூழ்நிலை, புது மனிதர்கள் என மற்றொரு உலகத்திற்கு பயம் மற்றும் பதற்றத்துடன் தான் ஒவ்வொரு பெண்ணும் நுழைகிறாள். அப்படி நுழையும் போது அவர்களுக்கு பல்வேறு அனுபவங்கள் கிடைப்பது வாஸ்தவம் தான்; அது நல்லதாகவும் இருக்கும், கெட்டதாகவும் இருக்கும்.

சரி, இப்படி திருமண வாழ்க்கைக்குள் நுழையும் பெண்ணுக்கு பெரிய பரிசாக அமைவது எது என்பது உங்களுக்கு தெரியுமா? அது தான் அந்த பெண் தன் தாயிடம் பெறும் அறிவுரைகள். அவளின் தாயும் ஒரு காலத்தில் திருமணமானவர் தானே. இந்த வாழ்க்கையில் அவர் பெற்ற அனுபவங்களை தான் தன் பெண்ணுக்கு சொல்லிக் கொடுப்பார். அது காதல் திருமணமோ அல்லது வீட்டில் பார்த்து செய்யப்படும் திருமணமோ, அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதோ அல்லது பூமியில் நிச்சயிக்கப்பட்டதோ, உங்கள் தாயின் வழிகாட்டல்கள் உங்களின் புது வாழ்க்கையை இன்னும் எளிதாக்கும்.

இதனால் உங்கள் கணவன் மற்றும் மாமனார் மாமியாரிடம் நற்பெயரையும் பெறலாம். சரி, தன் மகளிடம் ஒவ்வொரு தாயும் கூற வேண்டிய 8 திருமண ரகசியங்களைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரியான காரணங்களுக்காக ஒரு உறவில் நுழைந்து, அதில் நீடிக்க வேண்டும்

சரியான காரணங்களுக்காக ஒரு உறவில் நுழைந்து, அதில் நீடிக்க வேண்டும்

உண்மையான காதல் என்பது பாசம், சுயநலமின்மை, நன்றி மற்றும் அதனுடன் சுலபமாக பயணிப்பதே என்ற பாடத்தை தன் மகளுக்கு ஒரு தாய் கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த குணங்கள் எல்லாம் உங்கள் உறவில் ஒரு அங்கமாக இல்லையென்றால், உங்கள் பாதையை திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. தனியாக வாழ பயம் அல்லது சமுதாய அழுத்தங்களால் நாம் திருமணம் செய்து கொள்ள கூடாது. உண்மையான காதலோடு மட்டுமே அந்த சம்பந்தத்தை அவள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

காதலை சோதிக்க கூடாது

காதலை சோதிக்க கூடாது

நீங்கள் யாரையாவது காதலித்தால் அவர்களை நெருப்பின் மீது நடக்க வைப்பீர்களா? ஒருவரின் காதலை சோதிப்பதும் கிட்டத்தட்ட அதே போலத் தான். ஒரு வகையில் இது ஒருவரின் சொந்த பயத்தையும் பாதுகாப்பின்மையையும் வெளிப்படுத்துகிறது. தன் கணவன் மீது, தன் கணவனுடனான உறவின் மீது, தன் மீதே நிபந்தனையற்ற காதலை கொண்டிருக்க வேண்டும் என தன் மகளுக்கு தாய் கற்று கொடுக்க வேண்டும். இதனால் ஆரோக்கியமான உறவுமுறைக்கு இது அவளை தயார்படுத்தும். உங்கள் வாழ்க்கையை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்வதை எண்ணும் போது உங்களுக்கு கண்டிப்பாக பயம் ஏற்படும். ஆனாலும் கூட அது தானே உங்களுக்கு பல வெகுமதிகளை அளிக்க போகிறது.

காதல் என்பது ஆழ்மனதில் இருந்து வரட்டும்

காதல் என்பது ஆழ்மனதில் இருந்து வரட்டும்

உங்களை நீங்கள் காதலிக்காத வரையில், மற்றவர்களை உங்களால் காதலிக்கவோ மதிக்கவோ முடியாது. திருமணத்திற்கு பிறகு, நீங்கள் உங்கள் மாமனார் மாமியாருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழவில்லை என்றாலும் கூட, அவர்களுடான உறவு மற்றும் மற்றவர்களுடனான உறவு மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. பிறருக்காக நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கும். சில நேரம் உங்கள் ஆசைகளை உள்ளடக்கி இதனை செய்ய வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படும். கவலை வேண்டாம். காதல் என்பது உங்கள் ஆழ்மனதில் இருந்து வந்தால், அதனால் நீங்கள் செலுத்தும் அன்பு வற்றாத ஜீவநதியாக விளங்கும்.

சுவாசிப்பதற்கு அவகாசமும்.. காதலும்..

சுவாசிப்பதற்கு அவகாசமும்.. காதலும்..

ஒவ்வொரு உறவு மலர்வதற்கும் நேரமும் தனிநபருக்குரிய அவகாசமும் தேவைப்படும். அதனால் தன் கணவனுக்கு மூச்சு விடுவதற்கு அவகாசம் அளிக்க தன் மகளுக்கு ஒரு தாய் நினைவூட்ட வேண்டும். அளவுக்கு அதிகமான பொசசிவ்னெஸ், பொறாமை, ஏன் ஆர்வத்தை கூட அடக்க வேண்டும். மதிப்பீடு செய்யும் குணத்தையும் கொண்டிருக்க கூடாது. மிக முக்கியமாக, தன் விருப்பங்கள், பொழுதுபோக்குகள், நண்பர்களுடன் நேரத்தை செலவிடுதல், தனிமையாக இருப்பது போன்றவைகளையும் அந்த பெண் தொடர வேண்டும். ரொமான்டிக்கான காதலுக்கு ஏகப்பட்ட வசதிகள் உள்ளது.

ஆத்மாவிற்கு உணவு

ஆத்மாவிற்கு உணவு

சுய மரியாதை மற்றும் தன்னம்பிக்கை வளமையாக உள்ள உணவை ஒரு தாய் தன் மகளுக்கு அளிக்க வேண்டும். இது போதும் என நீங்கள் நினைத்தால், காதலிக்கப்படுவதற்கு நீங்கள் எதையும் மாற்றிக் கொள்ள தேவையில்லை. தன் ஆசையை தன் மனைவியின் மீது கட்டாயப்படுத்தினால், அவன் அவளுக்கானவன் அல்ல என்பதை உங்கள் மகளுக்கு சொல்லிக் கொடுங்கள். உங்களை நீங்களே நம்பவில்லை என்றால், வேறு யார் உங்களை நம்புவார்கள்.

வெறும் சுகத்திற்காக மட்டுமல்ல உங்கள் உடல்

வெறும் சுகத்திற்காக மட்டுமல்ல உங்கள் உடல்

தங்கள் உடலை காதலிக்க சொல்லி தாய் தன் மகள்ளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். சுய மரியாதை பற்றிய மற்றொரு முக்கியமான பாடம் இது. உங்கள் உடலுக்கு சுகம் தேவைப்படும். ஆனால் அதற்காக அதன் குறிக்கோள் காமமல்ல. இதை உங்கள் மகளுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கவில்லை என்றால் வேறு யார் சொல்லிக் கொடுப்பார்கள்? தன் உடலை மட்டும் தன் கணவன் விரும்பக் கூடாது. மாறாக அவளின் அன்பு மற்றும் அரவணைப்பையும் விரும்ப வேண்டும்.

திருமணம் என்பது வெட்டி விட அல்ல; விட்டு கொடுக்க

திருமணம் என்பது வெட்டி விட அல்ல; விட்டு கொடுக்க

திருமணமான முதல் சில மாதங்களில் அதிக சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, அது வீட்டில் பார்த்து நடத்தி வைத்து திருமணம் என்றால். இப்படிப்பட்ட திருமணத்தில் கணவனை குடும்பத்தார் தேர்ந்தெடுப்பார்கள். கணவனின் நல்லது கெட்டது என அனைத்தையும் அந்த பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலைகளில், முதலில் தன்னை ஒத்துப்போக செய்து, பின் தன் சொந்த குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற, தன் மகளுக்கு தாய் கற்றுக் கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால் அவள் தன் கணவனின் குறைபாடுகளையும் சுலபமாக ஏற்றுக் கொள்வார். யாருமே முழுமையாக ஒழுங்கானாவர்கள் அல்ல என்பதையும் புரிந்து கொள்வாள். திருமண வாழ்க்கை என்பது விட்டுக் கொடுப்பதே தவிர வெட்டி விடுவதல்ல.

உங்கள் கனவு கதையை எழுதிடுங்கள்

உங்கள் கனவு கதையை எழுதிடுங்கள்

"வெண்ணிற குதிரையில் கிட்டார் வாசித்துக் கொண்டே கனவுலக ராஜகுமாரன் உங்களை நோக்கி வருகிறான்....", அவ்வளவு தான், அதற்குள் யாரோ உங்களை எழுப்பி உங்கள் கனவை கலைத்து விட்டிருப்பார்கள். தன் வாழ்க்கையை சிண்ட்ரலா அல்லது ரப்பன்ஸல் போல் கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என உங்கள் மகளுக்கு அறிவுரை கூறுங்கள். உண்மையான காதல் மிகவும் கஷ்டமானது. அது பல ரூபங்களில் வரும். ஆனால் சந்தோஷமான உறவிற்கான முக்கிய அம்சங்களை நீங்கள் புரிந்து கொண்டால், உங்கள் சொந்த கனவு கதையை எழுதுவது ஒன்றும் அவ்வளவு கஷ்டம் கிடையாது.

சந்தோஷமான, ஆரோக்கியமான, நீடித்து நிலைக்கும் திருமண வாழ்க்கைக்கான ரகசியங்கள் தான் உங்கள் தாயிடமிருந்து நீங்கள் பெறும் பெரிய பரிசாகும். அதனை கற்றுக் கொண்டு வாழ்க்கையை இனிமையாக்கி கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Marriage Secrets Every Mother Must Tell Her Daughter

Love or arranged, matches are made in heaven, and if it is mommy dear who is guiding you through, the new phase in your life will become much simpler. Also, you are sure to earn some brownie points with your husband and your in-laws as well! Here are 8 marriage secrets that every mother should share with her daughter.
Desktop Bottom Promotion