Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும்
தம்பதியர்களுக்கான குளிர் கால இரவுக்கேற்ற சில காதல் ஐடியாக்கள்!
குளுமை பொருந்திய குளிர்கால இரவு, ஒரு அதிர்வை ஏற்படுத்தி, ஒரு பெரிய தாக்கத்தையும் இரவு நேர நெருப்பின் இடையில் ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களின் காதல், உங்கள் வாழ்விலும், உங்கள் உறவுகளிலும் ஒரு நல்ல மாற்றத்தை தோற்றுவிக்கும்.
உங்களுடைய பரபரப்பான வாழ்க்கைச் சூழல், உங்கள் காதல் வாழ்க்கையை, பெரும்பாலும் தடை செய்கிறது. உங்களுடைய வேலையே உங்களின் நேரத்தையும், கவனத்தையும் முழுவதுமாக ஆட்கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோடையும் தாண்டி, உழைத்து நீங்கள் உங்கள் தொழிலில் நிறைவு பெற முடிகிறது.
இதுப்போன்று வேறு சில: முதல் முறை டேட்டிங் போறீங்களா? இதோ சில டிப்ஸ்...
இதனால் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் செலவழிக்கும் நேரம் குறைகிறது. இதனால் அவர்களுக்கிடையே உள்ள உறவுகள் நொறுங்குகின்றன. மேலும், தேவையற்ற மன வருத்தங்களும், தொல்லைகளும் உருவாகின்றன. எனவே, குளிர்ச்சியான இந்த குளிர் கால தொடக்கத்தில், சில இரவு நேர காதல் ஐடியாக்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் காதல் வாழ்க்கையை சீரமைத்து மீண்டும் சேரலாம். இது உங்கள் மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும்.

நீங்கள் உங்கள் குளிர்காலத்திற்கான காதல் ஐடியாக்களை தேடும் போது, பாரம்பரியமான பழைய ஐடியாக்களை சார்ந்து இருக்க கூடாது. உங்களுடைய மகிழ்ச்சியான காதல் வாழ்க்கையில், உங்களுக்கு புதிதாக தோன்றக்கூடிய ஐடியாக்களையும், ஆக்கப்பூவமான கருத்துக்களையும் உபயோகித்தால், காதலும், நேசமும் உடனே பற்றிக் கொள்ளும். குளிர் கால இரவுக்கேற்ற காதல் ஐடியாக்களை வாசித்து, நீங்கள் உபயோகித்துக் கொள்ளுங்கள்
தம்பதியர்களுக்கான குளிர் காலத்திற்கேற்ற காதல் ஐடியாக்களை இங்கே காணலாம்.
நெருப்பு மூட்டிக் கொள்ளுங்கள்
குளுமை பொருந்திய நடுங்கக் கூடிய இந்த இரவில், நெருப்பை மூட்டிக் கொண்டு அதை சுற்றி, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வசதியாக அமர்ந்து இருந்தால் உங்களுடைய காதல் இரவு அழகாக ஆரம்பமாகும். ஒரு அழகான இரவு உணவை திட்ட மிட்டு, நெருப்பு மூட்டி சுகமாக குளிர்க்காய முன்னேற்பாட்டுடன் திட்டமிடுங்கள்.
சினிமாவிற்கு செல்லுங்கள்
இந்த குளிர் கால காதல் ஐடியாக்களில் மிகவும் சிறந்தது, சினிமாவுக்கு செல்லுதல். ஆமாம், இது முற்றிலும் பழைய ஐடியா தான். ஆனால் இது தம்பதியர்களின் காதலை கனியச் செய்யும் சிறந்த ஐடியா. தங்கள் வேலையிலிருந்து விலகி, ஒருவருக்கொருவர் கைக்குள்ளேயே இருப்பதற்கு இது ஒரு சிறந்த ஐடியா.
காபி ஷாப்புக்கு செல்லுங்கள்
நீங்கள் உங்களுடைய துணையுடன் ஒருவருக்கொருவர் கரம் பிடித்து நடந்து மகிழ்ந்துள்ளீர்களா? இல்லையெனில், உங்கள் துணையை ஒரு சூடான காபி குடிக்க அழைத்துச் செல்லுங்கள். இது உங்களுக்கு குளிர் காலத்திற்கேற்ற சிறந்த காதல் ஐடியாவாக அமையும்.
சவாலான நேரம்
குளிர் கால இரவில் ஏற்படும் சளி போன்ற தொல்லைகளை தவிர்க்க வீட்டிற்குள்ளேயே விளையாடும் விளையாட்டுக்களை தொடங்க வேண்டும். வீட்டிற்குள்ளேயே உங்களுடைய வாழ்க்கை துணையுடன் (அவன் அல்லது அவள்) இதமான சூழ்நிலையில் அமர்ந்து, ப்ளே ஸ்டேசனை பொருத்தி விளையாடலாம்.
நினைவு சின்னங்களை பாருங்கள்
நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையுடன் சேர்ந்து முன்னமே சென்ற புகைப் படங்களையும், வீடியோக்களையும் இருவரும் பாருங்கள். இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் உங்களை அந்த நாட்களுக்கு கொண்டு சென்று, உங்கள் மனதில் காதலை மலரச் செய்யும். இதுவும் குளிர்காலத்திற்க்கான சிறந்த காதல் ஐடியா.
வெளியே சென்று தங்குங்கள்
குளிர்காலத்தில் குளிரில் வெளியே சென்று தங்குவது மிகவும் கடினமானது. ஆனால் ஒரு வகையில் பார்த்தால், இது உங்களுக்கு மிகவும் புதிதான அனுபவமாக இருக்கும். இது உங்களுக்கான சிறந்த குளிர் காலத்திற்கான காதல் ஐடியாவாக இருக்கும். வசதியாக ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டு, விண்மீன்களை எண்ணிக் கொண்டு, வானம் எல்லையில்லாமல் பரந்திருப்பதைப் போல, ஒருவருக்கொருவர் எல்லை இல்லாமல் காதல் செய்யுங்கள்.
பொதுவான ஆடல் அரங்கங்களுக்கு செல்லுங்கள்
நீங்கள் துணிவுடன் இருப்பவராக இருந்தால், ரோலர் கோஸ்டர் ரைடுக்கு உங்கள் துணையுடன் செல்லுங்கள். இது உங்கள் துணையுடன் நீங்கள் உலகை பற்றிய கவலையின்றி, அருகில் அமர்ந்து மகிழ்ச்சியாக இருக்க உகந்ததாக இருக்கும். இது குளிர் கால காதல் ஐடியாக்களில் சிறந்ததாகும்.



Click it and Unblock the Notifications
