Latest Updates
-
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
காதலனுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க சில வழிகள்!!!
எப்போதும் காரணமில்லாத வாக்குவாதம், இதயம் உடையுமாறான சண்டைகள், இரவு முழுவதும் தூங்காமல் அழுகை, மெசேஜ் அல்லது போன் வராதா என்ற எதிர்பார்ப்பு! மேற்கூறிய அனைத்தும் காதலிக்கும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். உறவுகளுக்குள் சண்டைகள் வருவது சாதாரணம் தான். அப்படி சண்டைகள் வந்தால் தான் உறவுகளானது ஆரோக்கியமாக இருகிகும். இருப்பினும் வாக்குவாதங்களும், சண்டைகளும் எப்போதுமே இருந்தால், அது அந்த உறவுக்கே கேடு விளைக்கும்.
இப்படி நீங்கள் உங்கள் துணையுடன் எப்போதும் வாக்குவாதம் மேற்கொண்டு, சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் உடனே அதனை நிறுத்துங்கள். இல்லாவிட்டால், உங்கள் உறவு விரைவில் முறிந்துவிடும். பொதுவாக பெண்கள் தான் எப்போதும் வாக்குவாதத்தில் அதிகம் இறங்குவார்கள். ஏனெனில் பெண்களுக்கு கற்பனைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் கொஞ்சம் அதிகம். ஆனால் அது தான் காதலிக்கும் பெண்களிடம் இருக்கும் மிகவும் கெட்ட பழக்கம்.
ஆண்கள் தனக்கு துணையாக வரும் பெண்ணிடம் எதிர்பார்க்கும் குணங்கள்!!!
ஆம், எப்படியெனில் பெண்கள் கோபம் வந்தால், எதையும் சிந்திக்காமல் விவாதம் செய்வதுடன், கோபத்தின் போது மிகவும் மோசமாக நடந்து கொள்வார்கள். இதனால் அந்த உறவில் விரிசல் ஏற்பட்டு, இருவரும் பிரிய நேரிடுகிறது. எனவே இந்த சூழ்நிலையை தவிர்க்க, பெண்கள் தங்களுக்கு கோபம் வந்தாலோ அல்லது காதலன் மீது வருத்தம் இருந்தாலோ, அப்போது கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடாமல், அதனை எப்படி நிறுத்துவது என்று யோசிக்க வேண்டும்.
இங்கு காதலடன் ஏற்படும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வெளிப்படுத்த தாமதப்படுத்த வேண்டாம்
நிறைய பெண்கள் தங்களுக்குள் காதலனால் ஏற்பட்ட வேதனை மற்றும் மனதில் தோன்றுவதை அவர்களிடம் வெளிப்படையாக பேசாமல், உடனே முகத்தை தொங்கவிட்டு, அவர்களிடம் பேசாமல் போய்விடுவார்கள். பின் ஒரு கட்டத்தில் இது ஒரு பெரிய சண்டையாக வெடித்து, இருவருக்கும் மனதில் பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தி, பெரும் தொல்லையாக அமைந்துவிடும். எனவே எந்த ஒரு மன வருத்தம் ஏற்பட்டாலும், அப்போதே காதலனிடம் பேசியோ அல்லது வெளிப்படுத்தி விடுவது நல்லது.

ஆண்களுக்கு சொல்லாமல் புரியாது
ஆண்களுக்கு எதுவும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளும் சக்தி இல்லை. அதிலும் காதலிக்கு ஏதாவது வருத்தம் இருந்தால் கூட, அது அவர்களுக்கு சொல்லாமல் புரியாது. எனவே அதனைப் புரிந்து கொண்டு, அவர்கள் மீது உங்களுக்கு வருத்தம் இருந்தால், அதை வெளிப்படையாக சொல்லுங்கள்.

சண்டை போடாமல் எப்படி வெளிப்படுத்துவது
சில நேரங்களில் பெண்களால் தங்களது கஷ்டம் மற்றும் வருத்தத்தை சண்டை போடாமல் வெளிப்படுத்த முடியாது. ஏனெனில் சில ஆண்கள் தமது காதலியின் உணர்ச்சியை புரிந்து கொள்ளாமல் எதையாவது செய்துவிட்டு, பின் அதனை காதலியானவள் தவறு என்று சுட்டிக் காட்டி கேட்கும் போது தான், அதனைப் புரிந்து கொண்டு பின் வருத்தப்படுவார்கள். எனவே உங்கள் காதலன் எதையாவது தவறாக செய்தால், அதனை அவர்களுக்கு சொல்லி, பின் அதற்கான தீர்வை அவர்களிடமே கேட்டு, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேளுங்கள்.

முக்கியமாக தவிர்க்க வேண்டியவை
* எவ்வளவு கோபம் இருந்தாலும், குரலை எப்போதும் உயர்த்தி பேசாமல், எப்போதும் சாதாரணமாக பேசுங்கள்.
* சண்டைகள் எத்தனை வந்தாலும், பழைய கதைகளைப் பற்றி பேசி, தற்போதைய சண்டையை பெரிதாக்காதீர்கள்.
* இருவருக்கிடையே உள்ள சண்டையை சரிசெய்ய மூன்றாம் நபரை ஈடுபடுத்தாதீர்கள்.
* குறிப்பாக படுக்கும் போது பிரச்சனைகளை பற்றி விவாதிக்காதீர்கள். இதனால் பிரச்சனை எப்போதும் நீங்காது.

உறவை வலுப்படுத்துங்கள்
எத்தனை முறை சண்டை போட்டாலும், காதலன் ஆசையாக உங்களிடம் வரும் போது, அவர்களை புறக்கணிக்காதீர்கள். ஏனெனில் சண்டையை, செல்லக் கொஞ்சல்கள் மூலமும் சரிசெய்ய முடியும். எனவே சண்டை வந்தால், மனதில் எப்போதும் வைத்துக் கொள்ளாமல், காதலனுடன் நேரத்தை செலவழித்து, அவர்களுடன் சந்தோஷமாக பேசி, அவர்களுக்கு உங்கள் அன்பை வெளிக்காட்டினால், காதலன் எப்போதும் உங்களை விட்டு செல்லமாட்டார்கள்.



Click it and Unblock the Notifications