பத்துக்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு.. அந்த இடத்துல போய் உன் காதலைச் சொல்லு...!

By SATEESH KUMAR S

திருமண உறவு என்பது பல காலத்திற்கு நிலைத்து நீடிக்க வேண்டிய ஒன்று. எந்த ஒரு விஷயத்தையும் இடம், பொருள், ஏவல், பார்த்து துவக்குவதே சிறப்பு. சாதாரண விஷயத்திற்கே இடம், பொருள், ஏவல் முக்கியமெனில், ஆண்டாண்டு காலம் நீடிக்க வேண்டிய திருமண பந்தத்தை தொடங்குவதில் "இடத்தின்" முக்கியத்துவம் காணலாம்.

நீங்கள் எவரையேனும் உங்கள் வாழ்க்கை துணையாகி கொள்ளக்கூடிய தகுதி உடையவராக உணரும் போது, என்றும் மறக்க முடியாத நாளான காதலர் தினத்தன்று, நீங்கள் உங்கள் அணுகுமுறையில் நிச்சயம் இரண்டு விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். முதலாவது உங்கள் காதலை சரியான முறையில் முன் மொழிய வேண்டும். இரண்டாவது சிறந்த சுய விளக்கம் வழங்குதல். நீங்கள் சரியான முறையில் உங்களை வெளிப்படுத்தும் போது, அது இயல்பாகவே, மற்றவரின் இதய இணைப்பை தொடும்.

சுவாரஸ்யமான வேறு: ரொமான்ஸிற்கு பேர்போன இந்தியாவில் உள்ள இடங்கள்!!!

மேலும் உங்கள் சுய விபரங்களை சிறந்த முறையில் விளக்கத்துடன் வழங்கும் போது, உங்கள் துணைவர் இயல்பாகவே அதற்குரிய பரிசீலனையை வழங்குவார்.

திருமணத்தை முன்மொழிவதில் "இடம்" என்பதன் அவசியம் தான் என்ன?

திருமணம் என்பது மனப்பூர்வமான உறவு. அத்தகைய சிறப்பான வாழ்நாள் உறவுக்கான தொடக்கத்தை, தொடங்கப்பட வேண்டிய இடத்தின் முக்கியத்துவம் அறிந்து அவசியம் என்று கருதியே அடிக்கோடிட்டு "இடம்" என்று கூறிகிறோம். ஒருவர் தனிப்பட்ட முறையில் தனது சுய-விளக்கத்தை வழங்குவதன் மூலம் தனது காதலுக்கான அழைப்பை தன் துணைவருடன் நீடிக்க செய்வது எந்த "இடத்தில்" என்று முடிவு செய்வது அந்நபரின் விருப்பத்தை சார்ந்தது.

அவசியம் படிக்க வேண்டியவை: வரலாற்று சிறப்புமிக்க 8 காதல் கதைகள்!!!

இக்கட்டான சூழ்நிலையில் திருமண அழைப்புகளை முன்மொழியும் போது, அவரின் சம்மதம் உடனடியாக கிடைக்காமல் போகலாம். எனவே இந்த காதலர் தினத்தன்று திருமணத்தை முன்மொழிவதற்கான சரியான "இடத்தை" அடையும் முன்பே அதற்கான அதிக திட்டமிடல்களும், அது குறித்த சிந்தனைகளும் அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெழுகுவர்த்தி ஒளியில் இரவு விருந்து

மெழுகுவர்த்தி ஒளியில் இரவு விருந்து

இது உங்கள் துணைவர் எந்த வகையான நபர் என்பதை பொறுத்தது. உங்கள் துணைவர் தனது நேரத்தை சில நண்பர்களுடன் செலவிட விரும்பினால், நீங்கள் அவரை மெழுகுவர்த்தி ஒளியுடன் கூடிய இரவு விருந்துக்கு அழைக்கலாம். ஒரு சிறந்த உணவு விடுதியில் உங்கள் இருவருக்குமான, இடத்தை முன்பதிவு செய்து, இருவரும் இணைந்து நேரம் செலவிட அவருக்கு அழைப்பு விடுங்கள்.

அலுவலகம்

அலுவலகம்

திருமணத்தை முன்மொழிய அலுவலகம் சிறந்த இடமாகும் உங்கள் துணைவர் உங்களுடன் பணிபுரியும் அலுவலக தோழராக அமைந்து விட்டால் நீங்கள் இருவரும் உங்கள் விருப்பங்களை ரகசியமாக வளர்க்கலாம்.உங்களது மற்ற பணியாளர்கள் இதை நிச்சயம் அறிந்திருப்பார்.எனினும் இது அனைவரும் அறிந்த ரகசியமாகவே தொடரும்.

கடற்கரை

கடற்கரை

கடற்கரை ஒரு அற்புதமான இடமாகும். நீங்கள் இருவரும் உங்களது தனிப்பட்ட சிறப்பான தருணங்களை கூட்டத்தினர் நிறைந்துள்ள இடத்தில் பகிர்ந்து கொள்ளலாம். அவர் உங்களுடனான உறவை நதியுடன் ஒப்பிட்டு நதி கடலில் சேர்வதை போல அவர் உங்களுடன் ஒரு அற்புத சங்கமத்தில் இணைந்து விட்டார் என்று நிச்சயம் உணர்வார். இந்நிகழ்வினை நீங்கள் இருவரும் உங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ள கூடிய தனித்துவம் நிறைந்த விழாவாகுங்கள்.

நீண்ட தூரம் உலா செல்லுங்கள்

நீண்ட தூரம் உலா செல்லுங்கள்

இருவரும் சில நேரம் அமைதியை தொடர்ந்த பின்னர், உங்களுடைய நேசத்திற்குரிய நீண்ட கால கனவினை அவரிடம் முன்மொழிய நேரம் வந்து விட்டது என்று நீங்கள் உணரும் போது, அவரை ஒரு நீண்ட தூர உலா சென்று வர அழையுங்கள். நீங்கள் வண்டி ஓட்டி கொண்டிருக்கும் போது அவரது கரத்தினை மெதுவாக பற்றி மேன்மையாக முத்தமிடுங்கள். "அன்பே, உனது கையை எப்போதும் நான் பற்றியிருக்க என்னை அனுமதிப்பாயா"? என்ற நேரடியான கேள்வியை மென்மையாக கேளுங்கள்.

உணர்ச்சிமிக்க விருந்து

உணர்ச்சிமிக்க விருந்து

உங்கள் காதலி ஒரு வேடிக்கை விளையாட்டு பிரியரா? ஆம் எனில் உங்கள் நண்பர்கள் அனைவரையும் ஒரு வேடிக்கை விளையாட்டு நிறைந்த விருந்துக்கு அழையுங்கள். உங்கள் ஆண் நண்பர்கள் மற்றும் பெண் நண்பர்கள் என அனைவரது முன்னிலையிலும், உங்கள் துணைவரிடம் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.

சுற்றுலா இடம்

சுற்றுலா இடம்

சுற்றுலா செல்ல எண்ணற்ற இடங்கள் உள்ளன. அந்த இடம் சிறந்த காடுகள் மலைப்பிரதேசம் சூழ்ந்த அற்புதமான இடமாக இருக்கட்டும். நீங்கள் இருவரும் உங்கள் உறவுகளுடன் சுற்றுலா செல்லுங்கள். உங்கள் திருமணத்திற்கான திட்டத்தை முன்மொழிந்து, கவிதை எழுதி அதை அனைவரது முன்னிலையில் பாடலாக பாடலாம். அந்த பாடலில் உங்கள் காதலின் சாராம்சம் நிரம்பி வழியட்டும். அனைவரும் கேட்டு ஆனந்தம் கொள்ளட்டும். உங்கள் காதலி கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகட்டும். மேலும் அவர் உங்களை தன்னவராக உங்களை ஏற்று கொள்ளட்டும்.

தோட்டம் அல்லது பூங்கா

தோட்டம் அல்லது பூங்கா

தோட்டம் அல்லது பூங்காவின் நீண்ட இருக்கையில் அமர்ந்துள்ள காதலர்களின் அற்புதமான படத்தை பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் இருவருக்கும் இதையே சிறு இடைவெளி இருக்கும். இந்த காட்சியில் உங்களையும் உங்கள் துணைவரையும் பொருத்தி அதே போல நீண்ட இருக்கையில் அமர்ந்து காதலை முன்மொழிவதாக கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் உங்கள் உணர்வுகளை வெளிபபடுத்தும்போது, உங்கள் காதலி தனது நாணத்தினை வெளிப்படுத்தி தான் முகத்தை மறைத்து கொள்வார். உடனடியாக உங்கள் இருவருக்கும் இதையே இருந்த அந்த இடைவெளி மறைந்து அவர் உங்கள் தோள்களில் சாய்ந்து கொள்வார். சொர்க்கலோக சங்கமத்தில் சங்கமித்து விட்ட நித்தியத்துவம் பெற்ற இரு காதலர்களை போல உங்களை நீங்கள் உணர்வீர்கள்.

புனித ஸ்தலம்

புனித ஸ்தலம்

நீங்கள் பக்தி மிகுந்த நபர் எனில் உங்களின் நம்பிக்கை நிறைந்துள்ள புனித ஸ்தலத்தில் உங்கள் காதலை வெளிப்படுத்தலாம். அது கோயிலாகவோ, அல்லது சர்ச்சாகவோ அல்லது வேறு ஏதேனும் புனித ஸ்தலமாகவோ இருக்கலாம். உங்கள் துணைவரை கடவுளின் முன்னிலையில் அழைத்து செல்லுங்கள். உங்கள் காதலை ஒரு மோதிரத்துடன் முன்மொழியுங்கள்.அவர் நிச்சயம் உங்கள் மீது நூறு சதவீத நம்பிக்கை கொள்வார்.

நீண்டு விரித்திருக்கும் திறந்த வானின் கீழே

நீண்டு விரித்திருக்கும் திறந்த வானின் கீழே

நீங்கள் உங்கள் மார்பின் மீது கை வைத்து, மண்டியிட்டு அன்பே, எண்ணிய திருமணம் செய்து கொள்வாயா? என்று கேளுங்கள். அவர் என்றும் மாறாத அன்புடன் தன்னை பொறுமை நிறைந்த பூமி தாயாக கருதி புன்னகை புரிவார். இப்போது பூமியின் மீது என்றும் மாறாத அன்பை பொழியும் வானமாக நீங்கள் ஏற்றுக்கொள்ள பட்டு விட்டீர்கள்.

குடும்ப விழா

குடும்ப விழா

உங்களது குடும்ப வைபவத்திற்கு உங்கள் காதலிக்கு அழைப்பு விடுத்து உங்கள் வீட்டுக்கு அழைக்கலாம். உங்கள் பெற்றோர் தாராள எண்ணம் கொண்டவராக இருப்பின், நீங்கள் அவர்கள் முன்னிலையிலேயே உங்கள் உறவை வெளிப்படுத்தி முறைப்படுத்துவது சிறந்தது. உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள நபரை சந்திக்கும் வாய்ப்பு உங்கள் குடும்ப நபர்களுக்கும் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion