நீங்கள் இவற்றில் எந்த வகையான காதலில் விழுந்துள்ளீர்கள்?

Posted By:
Subscribe to Boldsky

அனைவருக்குள்ளும் காதல் உணர்வுகள் நிச்சயம் இருக்கும். காதல் இரு மனங்களுக்கிடையே பூக்கும். மேலும் காதல் இருவருக்கிடையே ஒரு நல்ல கெமிஸ்ட்டரி இருந்தால் தான் மலரும் என்று நினைக்கிறோம். எப்போது காதலில் விழுகின்றோமோ, அப்போது ஆரம்பத்தில் மனதிற்குள் அடிக்கடி குழப்பங்கள் நிகழும். இத்தகைய குழப்பங்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

ஏனென்றால் காதலில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சில காமம், ஈர்ப்பு மற்றும் பிணைப்பு போன்றவை. நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ, காதலில் விழுவதற்கு இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றின் மூலமாகத் தான் இருக்கும். இங்கு அந்த மூன்று வகையான காதலைப் பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காமம்

காமம்

முதல் வகையான இந்த காதல் ஒவ்வொருவரின் மனதில் இருக்கும் கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சியை அதிகரிக்கும். அதுவும் மனதில் இருக்கும் உணர்ச்சியை அதிகரிக்கும் வகையில் யார் பழகுகின்றனரோ, அதற்கேற்றாற் போல் மனதில் காதலுணர்ச்சியானது அதிகரிக்கும். இந்த உணர்ச்சி ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் தான். அதிலும் டெஸ்ட்ரொஜன் (ஆண்) மற்றும் ஈஸ்ட்ரோஜன் (பெண்) என்னும் ஹார்மோன்கள் தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவையே காம உணர்ச்சிகளைத் தூண்டி, வெளிப்படுத்த உதவுகிறது.

காமம்

காமம்

குறிப்பாக எப்போது ஒருவரை உங்களுக்குப் பிடிக்கிறதோ, அப்போது உடனே இந்த வகையான காதலில் நுழைந்துவிடுவீர்கள். நிறைய மக்கள் காதலில் காமமும் ஒரு பகுதி என்று நினைத்து, வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் தான் அதனை காதலின் இரண்டாம் நிலைக்கு கொண்டு சென்று விடுகின்றனர். சொல்லப்போனால், இன்றைய மார்டன் உலகில், உடல்ரீதியான காதலும் ஒரு அடிப்படையாக, ட்ரெண்ட் ஆக உள்ளது.

ஈர்ப்பு

ஈர்ப்பு

இந்த காதலும் முதல் வகையைப் போன்றது தான். ஆனால் ஒருவித்தியாசம் என்னவென்றால். இந்த வகை காதல் ஒருவரின் வெளிப்புறத் தோற்றம், அழகு, பேச்சு போன்றவற்றால் ஈர்க்கப்படுகிறது. இவ்வாறு ஏற்படும் ஈர்ப்பு, தன்னை ஈர்ப்பவரிடம் எதையும் சரியாக பேச முடியாதவாறு செய்யும்.

ஈர்ப்பு

ஈர்ப்பு

நிறைய பேருக்கு காதல் வந்துவிட்டால், எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத நிலையில் இருப்பார்கள் தெரியுமா? இதற்கு அட்ரினல் என்னும் ஹார்மோன் தான் காரணம். இந்த ஹார்மோன் தான் மனதின் நிலையை பாதித்து, பொறுமையிழக்க வைத்து, சரியாக தூங்க முடியாமல், சாப்பிட முடியாமல் செய்யும். மேலும் இந்த ஹார்மோன், தன் வாழ்வில் இவ்வளவு ஒரு அழகான மனிதனை பெற வைத்ததை நினைத்து, அவர்களின் நினைப்பைத் தவிர, எந்த ஒரு செயலிலும் முழுமையான ஈடுபாட்டை செலுத்த முடியாதவாறு செய்யும்.

பிணைப்பு

பிணைப்பு

இந்த வகையான காதல் இருவரின் மனம் அல்லது உடல்ரீதியான ஒருங்கிணைப்பாக இருக்கலாம். இந்த ஒருகிணைப்பினால், இருவருக்கிடையே காதல் அல்லது அன்பு மலர்வதோடு, இருமனங்களின் எண்ணங்கள் ஒன்றாக செயல்பட்டு, அதனால் ஈர்க்கப்படும் போது, இருவருக்கிடையேயும் ஒருவித பிணைப்பு அதிகரிக்கும். இந்த பிணைப்புகள் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ இருக்கலாம். இவ்வாறான பிணைப்பு ஏற்படும் போது, நீங்கள் உங்கள் துணையுடன் பெரும்பாலான நேரம் இருக்க வேண்டுமென்று தோன்றும். இதன் மூலமாகவே காதலானது மலரும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The 3 Phases Of Falling In Love

There are three phases to falling in love. Take a look...
 
Story first published: Saturday, December 6, 2014, 17:51 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter