உறவுகள் குறித்து திரைப்படங்கள் சொல்லும் கதை!

By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

கேளிக்கை ஊடகங்களில் தற்போது முதல் இடத்தை வகிப்பது திரைப்படம் தான்! நம் வாழ்க்கையில் திரைப்படங்கள் பாஸிட்டிவ்வாகவும் நெகட்டிவ்வாகவும் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஆடல், பாடல், கொண்டாட்டம், காதல், ஈகோ, மகிழ்ச்சி, சோகம், பயம், சண்டை என்று எல்லா உணர்ச்சிகளையும் கொட்டிக் கொட்டி நம் இயக்குனர்களும் திரைப்படங்களை எடுத்து வருகின்றனர்.

நல்லதோ கெட்டதோ திரைப்படங்களைப் பார்த்துத் தான் கற்றுக் கொள்கிறோம் என்று மக்களும், உண்மையில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ அப்படித் தான் நாங்கள் திரைப்படங்களை எடுக்கிறோம் என்று திரையுலகினரும் கூறி வருவது வழக்கம். எப்படி இருந்தாலும், பெரும்பாலான இன்றைய திரை இயக்குனர்கள் மக்களுக்கு நல்ல விஷயங்களைத் தங்கள் திரைப்படங்கள் மூலம் கூறி வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

திரைப்படங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியதும் அதிகம் உள்ளன. காதல் மற்றும் ஆக்சன் திரைப்படங்களில் இயல்புக்கு மீறிய காட்சிகளைக் காட்டினாலும், குடும்பப் பாங்கான படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருக்கும். 'சம்சாரம் அது மின்சாரம்' போன்ற குடும்பப் படங்களின் மூலம் நாம் தெரிந்தோ தெரியாமலோ உறவுகள் தொடர்பான நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறோம்.

அவ்வாறு திரைப்படங்கள் நமக்குத் தரும் படிப்பினையான அறிவுரைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நல்ல கேரக்டர்கள்

நல்ல கேரக்டர்கள்

ஒரு கதை என்று எடுத்துக் கொண்டால், அதில் பலவிதமான பாத்திரங்களைப் புகுத்துவது திரைப்பட இயக்குனர்களின் வேலை. அவற்றில், நல்ல விதமான கேரக்டர்களை நம் வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் கடமை. நம் இயல்பு வாழ்க்கைக்கும் அவை பொருத்தமாக இருக்க வேண்டும்.

கருத்தான சிந்தனைகள்

கருத்தான சிந்தனைகள்

'இந்தப் படத்துல சூப்பரான ஒரு மெசேஜை வச்சிருக்காங்கடா' என்று சில திரைப்படங்களைப் பார்த்துவிட்டு மக்கள் விமர்சிப்பது வழக்கம். அந்த மெசேஜை எடுத்துச் செல்வதற்காக பலவித இக்கட்டான சூழ்நிலைகளை அதுப்போன்ற படத்தில் இயக்குனர் வைத்திருப்பார். அத்தகைய சூழ்நிலைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை நாம் கற்றுக் கொண்டு, உண்மை வாழ்க்கையில் அதைக் கடைப்பிடிக்கலாம்.

குருட்டுக் காதல்

குருட்டுக் காதல்

எப்போதுமே பெரும்பாலான இளைஞர்களும், இளைஞிகளும் காதல் திரைப்படங்களைப் பார்த்துப் பார்த்தே உண்மை வாழ்க்கையிலும் காதலிக்கிறார்கள். ஆனால் நிறையப் படங்களில் காதலர்கள் குருட்டுத்தனமாக, எந்தவிதமான எதிர்காலச் சிந்தனையும் இன்றி காதலிக்கிறார்கள். இதுப்போன்ற திரைப்படங்களைப் பார்த்து கண்மூடித் தனமாகக் காதலித்து விட்டு பின் கஷ்டப்படக் கூடாது.

நல்ல காதல்

நல்ல காதல்

திரையில், எந்தச் சூழ்நிலையிலும் தன் காதலை விட்டுக் கொடுக்காமல் ஒரு சூப்பர் பவரை ஹீரோ வைத்திருப்பார். அதுப்போன்ற ஒரு தன்னம்பிக்கையான விஷயத்தை திரைப்படங்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன.

உண்மைக் காதல்

உண்மைக் காதல்

இயல்பு வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள முடியாத காதலை எல்லாத் திரைப்படங்களும் சொல்வதில்லை. உண்மைச் சம்பவங்களை வைத்தே சில நல்ல காதல் கதைகளையும் திரைப்படங்கள் நமக்குக் காண்பித்துள்ளன. அதில் கிடைக்கும் அனுபவங்களை நாம் நம் இயல்பு வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நல்ல கொள்கை

நல்ல கொள்கை

திரைப்படங்கள் மூலம் நம் வாழ்க்கையிலும் நாம் நல்ல கொள்கைகளை வகுத்துக் கொள்ளலாம். சில உறவுகளின் சில தன்மைகளைக் குறித்தும் திரைப்படங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. அதை நாம் படிப்பினையாகக் கொண்டு நம் கொள்கைகளை முன்னேற்றிக் கொள்ளலாம்.

முடிவு எடுத்தல்

முடிவு எடுத்தல்

லவ் விஷயத்தில் சில திரைப்படங்கள் எதிர்மறையான சிந்தனைகளை நம்மிடையே தூண்டிவிட வாய்ப்புள்ளது. அதுப்போன்ற சமயங்களில் நம் ஆழ் மனத்தின் உண்மை என்ன சொல்கிறதோ அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Relationship Advice That Movies Give You

There are a lot to learn from cinema. Do you know what are the things movies teach us about love?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter