உறவுகளில் அளவுக்கு அதிகமாக பகிர்வதால் ஏற்படும் விளைவுகள்!!!

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

உங்கள் துணை உங்களைப் பற்றி சற்று அதிகமாகவே தெரிந்து வைத்துள்ளார் என்ற உணர்வை நீங்கள் பெறுகிறீர்களா? அப்படியானால் உங்கள் உறவில் நீங்கள் அளவுக்கு அதிகமாக பகிர்ந்து கொள்கிறீர்கள். ஒரு உறவில் இருக்கும் போது, உங்களைப் பற்றி நீங்கள் அளவுக்கு அதிகமாக பகிர்ந்து கொண்டால் (குறிப்பாக உறவின் ஆரம்ப கட்டத்திலேயே), உங்களை நீங்களே உங்கள் துணையிடம் அம்பலப்படுத்துகிறீர்கள். இதனால் உங்கள் உறவில் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள்.

பல நேரங்களில் அளவுக்கு அதிகமான பகிர்தலால் சண்டைகள் ஏற்பட்டு கருத்து வேறுபாடு உண்டாகும். கடைசியில் உங்கள் உறவு முடிவதற்கு அதுவே காரணமாகியும் விடும். அதனால் தான் ஒரு உறவில் வேகமாக அடியெடுத்து முன்னேற நினைப்பது ஆரோக்கியமானது அல்ல. அனைத்து உறவுகளும் ஆரோக்கியமான வேகத்தில் தான் நகர வேண்டும். அதனை வேகமாக நகர்த்த முயற்சித்தால் எதிர்மறையான தாக்கங்களையும், காயங்களையும் தான் உண்டாக்கும்.

அளவுக்கு அதிகமான பகிர்தல் ஆச்சரியங்களை கொன்று உறவில் இருக்கும் சந்தோஷத்தை எடுத்துவிடும். சொல்லப்போனால் இதனால் உங்கள் உறவில் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். நம்பிக்கையுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் அனைத்தும் திரும்பி எப்படி உங்களை தாக்கும் என்பது உங்களுக்கே தெரியாது. இதனால் உங்கள் மரியாதை போய் உறவின் மீதிருக்கும் நாட்டமும் போய்விடும்.

ஒரு உறவில் அளவுக்கு அதிகமாக பகிர்வதால் ஏற்படும் சில ஆபத்தான தாக்கங்களைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 காயத்தை ஏற்படுத்தும்

காயத்தை ஏற்படுத்தும்

கையில் இருக்கும் சீட்டுக்கள் அனைத்தையும் உங்கள் எதிராளியிடம் காட்டிவிட்டீர்கள். இனி உங்கள் உறவு முழுவதும் நீங்கள் காயத்தோடு தான் இருக்க வேண்டி வரும்.

ஆச்சரியங்களை அழித்து விடும்

ஆச்சரியங்களை அழித்து விடும்

உங்கள் துணையை பற்றிய சில மர்மங்களும், ஆச்சரியங்களும் ஓரளவிற்கு இருந்தால் தான் உங்கள் உறவு சுவாரஸ்யமாக இருக்கும். இருப்பினும் உங்கள் உறவில் நீங்கள் அளவுக்கு அதிகமான பகிர்தலில் ஈடுபடும் போது, தொடங்குவதற்கு முன்னாலேயே நீங்கள் அந்த புதிருக்கான விடையை கண்டுபிடித்து விடுகிறீர்கள்.

சவுக்கால் அடி வாங்குதல்

சவுக்கால் அடி வாங்குதல்

உங்கள் துணைக்கு உங்கள் மீது எப்போதெல்லாம் கோபம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் உங்கள் அந்தரங்க ரகசியத்தை குத்திக் காட்டி உங்களை வார்த்தை என்ற சவுக்கால் விளாசுவார். நீங்கள் ஆதரவற்று போவீர்கள்.

உங்கள் துணையை பயமுறுத்தும்

உங்கள் துணையை பயமுறுத்தும்

உறவில், சீக்கிரத்திலேயே அனைத்தையும் பகிரும் போது, உங்களின் பயங்கரமான கடந்த காலம் உங்கள் துணையை பயமுறுத்தலாம். உங்கள் கடந்த காலத்தை மறந்து உங்களை உங்கள் துணை விரும்புவாரா என்பதை பொறுத்திருந்து பார்த்த பிறகு தான் இவைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கண்டுபிடிப்புகளுக்கு வாய்ப்புகளே இருக்காது

கண்டுபிடிப்புகளுக்கு வாய்ப்புகளே இருக்காது

ஒரு உறவு என்பது ஒருவரை பற்றி மற்றவர் தொடர்ச்சியாக அறிந்து கொள்ளும் செயல்பாடே. ஆனால் நீங்களோ உங்களைப் பற்றிய அனைத்து ரகசியங்களையும் ஒரே நேரத்தில் கூறி விட்டால், உங்களைப் பற்றி காலப்போக்கில் அறிந்து கொள்ளும் சுவாரஸ்யத்தை உங்கள் துணை இழந்து விடுவார்.

சந்தேகங்கள் எழலாம்

சந்தேகங்கள் எழலாம்

உங்களைப் பற்றி உங்கள் துணையிடம் அளவுக்கு அதிகமாக பகிர்கையில் உங்கள் மீது உங்கள் துணைக்கு சந்தேகம் எழலாம். உங்கள் கடந்த காலத்தில் நீங்கள் பல காதல் கதைகளை வைத்திருந்து, இப்போது ஒருவரை மணந்து செட்டில் ஆகியிருக்கலாம். உங்கள் கடந்த கால உறவுகளைப் பற்றி உங்கள் துணையிடம் தெரிவிப்பது வீண் சந்தேகங்களை தான் எழுப்பும்.

பரவும் வதந்திகள்

பரவும் வதந்திகள்

நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் தான் உங்கள் துணையிடம் அனைத்தையும் பகிர்கிறீர்கள். ஆனால் உங்கள் இருவருக்கும் ஒத்து போகாமல் அவர் உங்களை விட்டு பிரிந்து சென்றால் என்ன ஆகும்? உங்களைப் பற்றிய அந்தரங்கங்களை இந்த உலகம் முழுவதும் அவர் பரப்ப வாய்ப்பு உள்ளது.

பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும்

பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும்

உங்களுக்கு எதிராக உங்கள் கடந்த காலத்தை உங்கள் துணை பயன்படுத்தவில்லை என்றாலும் கூட, அப்படி நடந்து விடுமோ என்ற எண்ணம் உங்கள் மனதில் ஓடும். உங்கள் துணை சாதாரணமாக கூறும் விஷயத்தை கூட நீங்கள் அதனுடன் தொடர்பு கொண்டு பார்ப்பீர்கள்.

பேச இன்னும் என்ன இருக்கிறது

பேச இன்னும் என்ன இருக்கிறது

ஒரு புது உறவில் நுழையும் போது, வாய் வலிக்கும் வரை பேச ஆசைப்படுவோம். ஆனால் ஒரே மூச்சாக அனைத்து விஷயங்களையும் பேசி விட்டால், பின் பேசுவதற்கு எதுவுமே இருக்க போவதில்லை. விஷயம் இல்லாத உறவாக மாறி விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Effects Of Over Sharing In Relationships

Do have a feeling that your partner knows a little too much about you for comfort? May be you are prone to over sharing in relationships.