For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணத்திற்கு முன் லிவ்-இன் வாழ்க்கை வாழ்வதால் ஏற்படும் தீமைகள்!!!

By Maha
|

தற்போது பெரும்பாலானோர் திருமணத்திற்கு முன்பு லிவ்-இன் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். மேலும் லிவ்-இன் வாழ்க்கை வாழ்வது சிறந்தது என்று நினைக்கின்றனர். ஆனால் லிவ்-இன் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும் போது நன்றாக இருக்குமே தவிர, நாட்கள் போக போக அதுவே போர் அடித்துவிடும். அதுமட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பொதுவாக லிவ்-இன் வாழ்க்கையை மேற்கொள்ளும் பழக்கமானது வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவிற்கு வந்தது. இது நம் நாட்டின் கலாச்சாரமோ, பழக்கவழக்கமோ கிடையாது. எனவே இந்த வாழ்க்கை முறையை பின்பற்றினால், நிச்சயம் கடுமையான மன வேதனையை சந்திக்கக்கூடும். இங்கு திருமணத்திற்கு முன் லிவ்-இன் வாழ்க்கைய வாழ்வதால் ஏற்படும் தீமைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதுப்போன்று வேறு: உங்கள் உறவில் இருப்பது காதலா காமமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உற்சாகம் குறையும்

உற்சாகம் குறையும்

லிவ்-இன் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சூப்பராக இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, இருவருக்குள் இருந்த ஒருவித உற்சாகமானது குறைந்துவிடும். இதனால் சில சமயங்களில் திருமணத்தின் போது இருக்க வேண்டிய உற்சாகம் கூட குறைந்துவிடும்.

பணப்பிரச்சனைகள் ஏற்படும்

பணப்பிரச்சனைகள் ஏற்படும்

இதுவரை இருவருக்குள் இல்லாத பணப்பிரச்சனைகள் லிவ்-இன் வாழ்க்கையின் போது ஏற்படக்கூடும். இதனை பலர் மறுத்தாலும், ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையை சந்திக்கக்கூடும்.

சுதந்திரம் இருக்காது

சுதந்திரம் இருக்காது

லிவ்-இன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்த பின்னர், நண்பர்களுடன் நேரத்தை செலவழிக்க முடியாது. ஒருவேளை அப்படி நண்பர்களுடன் சென்று, தாமதமாக வந்தால், உங்களுக்கு தேவையில்லாத கேள்விகள் எழும். இதனால் இருவருக்குள் மோதல் அதிகரிக்கும்.

சண்டைகள் அதிகரிக்கும்

சண்டைகள் அதிகரிக்கும்

திருமணத்திற்கு முன்னரே லிவ்-இன் வாழ்க்கையை மேற்கொண்டால், இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பதன் மூலம், இருவருக்குள் அன்பானது அளவுக்கு அதிகமாகிவிடும். இப்படி ஒரு உறவில் அன்பானது அளவுக்கு அதிகமாக இருந்தால், சண்டைகள் அதிகரித்து, நாளடைவில் பிரிவுகள் கூட ஏற்படக்கூடும்.

சந்தேகம் எழும்

சந்தேகம் எழும்

லிவ்-இன் வாழ்க்கை வாழ்வதினால் ஏற்படும் தீமைகளில் முக்கியமானது தான் இது. ஏனெனில் திருமணத்திற்கு முன் லிவ்-இன் வாழ்க்கையை வாழும் போது, துணையின் அனைத்து நடவடிக்கைகளும் தெரியும். அப்போது ஒருவேளை நடவடிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலே சந்தேகம் எழ ஆரம்பித்து, பின் அது பெரிய சண்டையாகி, திருமணத்திற்கு முன்னரே பிரியக்கூடும்.

இதுப்போன்று வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cons Of A Live-In Relationship

Here are some reasons why living together before marriage is not a good idea. If you are planning to, take a look at this relationship advice.
 
Desktop Bottom Promotion