Latest Updates
-
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்..
தம்பதிகள் ஒருவொருக்கொருவர் கூறிக் கொள்ளும் பொதுவான பொய்கள்!!!
ஒரு உறவு எப்போதும் பளிச்சென தெளிவாக இருப்பதில்லை. தம்பதிகளுக்குள் சண்டைகளுக்கும். தவறான புரிதல்களும் அவ்வப்போது நடைபெறும். இதனால் பொய்கள் உருவாகும். அப்படி ஒரு உறவிற்கு மத்தியில் கூறப்படும் பொய்களில், சில பொதுவான பொய்களை மட்டுமே நாங்கள் உங்களுடன் பகிர போகிறோம். உண்மையில் பார்த்தால் இவ்வகையான பொய்கள் நூற்றிற்கும் மேல் உள்ளது.
மோசமான நிலைமையை சரிகட்ட தம்பதிகள் ஒருவொருக்கொருவர் பொய்களை கூறிக் கொள்வர். இந்த பொதுவான பொய்கள் பல நேரங்களில் தீவிர சண்டைகளை ஏற்படுத்திவிடும். சில நேரங்களில் பிரிவினையை கூட ஏற்படுத்திவிடும். திருமணத்திற்கு பிறகு, குற்றம் கூறுவதை தவிர்க்க, ஆண்கள் தங்கள் மனைவியிடம் பொய் பேசுவார்கள். உங்களுக்கு பொருந்துகிறதா ஆண் நண்பர்களே?
ஆனால் பெண்களோ, மதிய உணவு அருந்துவதில் தான் ஆண்களிடம் பொய் பேசுகின்றனர். பொதுவாகவே பெண்களுக்கு தனியாக உண்ண பிடிப்பதில்லை. அவர்களுடன் ஆண் துணை இருந்தால் அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். இவ்வகையான சூழ்நிலையில், இந்த விருப்பத்தை அவர்களுடைய காதலன் அல்லது கணவன் விரும்ப மாட்டார்கள். அதனால், பெண்களுக்கு இருக்கும் ஒரே தேர்வு பொய் தான் - "நான் இன்று தனியாக சாப்பிட்டேன்".
இதை போல, நீங்கள் ஒரு உறவில் இருக்கும் போதும், திருமணம் வாழ்க்கையில் இருக்கும் போதும், ஒருவொருக்கொருவர் பொதுவான சில பொய்களை கூறிக் கொள்வீர்கள். ஆனால் நாங்கள் கூறப்போகும் சில பொய்கள், பொதுவாக பலராலும் கூறப்படுபவையாகும்.

"அந்த பெண்ணை நான் பார்க்கவில்லை"
ஒரு கடைக்கு செல்கையில் அங்கே நீங்கள் முதலில் பார்ப்பது பிற பெண்களை தான் (உங்கள் காதலி/மனைவி உங்கள் கைகளைப் பற்றி கொண்டிருந்தாலும் கூட). இவ்வகை ஈர்ப்புகள் எப்போதும் சாகாது.

"என் அம்மாவுடன் பேசிக்கொண்டு இருந்தேன்"
அவன் போன் எப்போதும் உபயோகத்தில் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக இது உங்களுக்கு கோபத்தை உண்டாக்கும்; முக்கியமாக அவசர சூழ்நிலையில். ஒரு உறவில், ஆண் பெண்ணிடம் கூறும் பொய்களில் இதுவும் பொதுவான ஒன்றாகும்.

"2 சிகரெட் மட்டுமே பிடித்தேன்"
இன்று எத்தனை சிகரெட் பிடித்தாய் என உங்கள் துணையைப் பார்த்து நீங்கள் கேட்கையில் அவன் சிகரெட் பாக்கெட் மொத்தமும் காலியாகத் தான் இருக்கும். எப்போதும் அவன் வாயில் இருந்து குறைவான எண்ணே வரும். மிகவும் பொதுவான பொய்களுள் இதுவும் ஒன்று.

"நாங்கள் வெறும் நண்பர்களே"
ஒரு உறவில் ஒருவொருக்கொருவர் கூறிக் கொள்ளும் மற்றொரு பொதுவான பொய் இது. இன்னொரு நபருடன் தொடர்பு ஏற்படுகையில் கூறப்படும் பொய் இது.

"என் அம்மா இதை விட நன்றாக சமைப்பார்கள்"
இந்த சூழ்நிலை திருமணத்திற்கு பிறகு வருவதாகும். துரதிர்ஷ்டவசமாக ஆண்கள் நன்றாக சமைக்காததையும் வேண்டுமானாலும் உண்ணுவார்கள்.

"தனியாக சாப்பிட்டேன்"
ஒரு உறவில் இருக்கும் பெண் கூறும் பொதுவான பொய் இது. ஏற்கனவே கூறியதை போல், தனியாக உண்ணுவதை பெண்கள் விரும்ப மாட்டார்கள்.

“உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்"
பெண்களுக்கு திருமணமும், அதற்கு பிறகான வாழ்க்கை பற்றிய எண்ணங்களின் மீது நாட்டம் அதிகம். அது பொய்யான வாக்குறுதியாக இருந்தாலும் கூட, ஒரு உறவில் கூறப்படும் பொதுவான பொய்யாகும் இது.

"குழந்தைகள் பெற்றுக் கொண்டு சந்தோஷமாக வாழ்வோம்"
திருமணம் என்பதை பற்றி பேசிய பிறகு, பெண்ணிடம் ஆண்கள் கூறும் இரண்டாவது பொதுவான பொய் இதுவாகும்.

"இல்லை, நீ குண்டாக இல்லை"
பெண்களுக்கு பாராட்டப்படுவது ரொம்பவும் பிடிக்கும். அதனால் தங்கள் வாயால் பொய் கூறுவதை ஆண்கள் சரியாக செய்வார்கள். ஒரு உறவில் பெண்ணிடம் ஆண் கூறும் மோசமான பொய்யாகும் இது.

"காலையில் தான் குளித்தேன்"
தண்ணீரும் குளியலும் யாருக்கு தான் பிடிக்காது. இருப்பினும் ஆண்கள் இதற்கு விதிவிலக்கு! குளியல் என்றாலே அவர்களுக்கு ஒரு வெறுக்கத்தக்க செயலாகும். அதனை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்.

"2 நிமிடங்களில் வீட்டிற்கு வந்து விடுவேன்"
ஆண்களின் அகராதியில் இரண்டு நிமிடங்கள் என்று எதுவுமே இல்லை. ஆண்கள் பொதுவாக குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்கு வருவதில்லை. காரணம் அவர்கள் அதற்கும் மேல் தாமதமாக தான் வருவார்கள்.

"எனக்கு மேக்-அப் பிடிக்காது"
தங்களின் தழும்புகளை மறைக்க பெண்கள் மேக்-அப் போட விரும்புவார்கள். ஆனால் மேக்-அப் போட பிடிக்காது என சாதிப்பார்கள். தம்பதிகளுக்கு இடையே கூறப்படும் பொதுவான பொய்களில் இதுவும் ஒன்றாகும்.

"குடித்தேனா??? நான் அலுவலகத்தில் இருந்தேன்"
குடித்து விட்டு மாறிய பிறகு ஆண்கள் கூறும் பொதுவான பொய் இது. அதிலும் தான் பாருக்கு செல்லவில்லை என்றும், அலுவலகத்தில் தான் இருந்தேன் என்றும் அடித்து கூறுவார்கள்.



Click it and Unblock the Notifications
