இரண்டு பேரில் வாழ்க்கைத் துணையாக யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? டிப்ஸ் வேணுமா...

By: Boopathi Lakshmanan
Subscribe to Boldsky

வைரமா அல்லது முத்தா? ஜீன்ஸா அல்லது சேலையா? என வந்தால் இமைப்பொழுதுக்குள் முடிவெடுத்து விடுவாள் பெண். ஆனால், இரண்டு நபர்களில் யாரிடம் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளலாம் என்ற கேள்வி வரும் போது, அவளால் வேகமாக முடிவெடுக்க முடியாது.

கண்மூடித்தனமாக முடிவெடுக்க விரும்பினால், பூவா தலையா போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் விளைவாக நீங்கள் திருப்தியடைந்தால், உங்களுக்கு அந்த நபர் தான் தேவை என்று பொருள். அதே நேரம், நீங்கள் மீண்டும் பூவா தலையா போட்டுப் பார்க்க விரும்பினால், மாற்று நபரை அதிகம் விரும்புவீர்கள் என்பதும் நிச்சயம்.

இங்கு தான் உங்களுடைய உணர்வு முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. ஆனால், நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகளில், அந்த இரண்டு நபர்களில் உங்களுக்கு ஏற்ற ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், அவர்களுடைய நன்மை மற்றும் தீமைகளைப் பற்றி கண்டிப்பாக ஆராய்ந்திட வேண்டும்.

நல்ல துணையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் விட்டு விட்ட மற்றொரு நபரின் நல்ல குணாதிசயங்களைப் பற்றி எண்ணி வருத்தப்படும் அனுபவம் கிடைக்காது. மேலும், இது உங்களிடையேயான உறவை மென்மையாக பராமரிக்கவும் மிக அவசியமாக உள்ளது.

உடல்ரீதியான கவர்ச்சியை மட்டுமே கொண்டு உங்களுடைய இணையை தேர்ந்தெடுக்க முயற்சிப்பது நல்லதன்று. ஏனெனில், உறவை நெடுங்காலத்திற்கு இருக்கச் செய்வது வேறு பல காரணிகளாகும்.

எனவே, அடிப்படையான சில குணங்களையும், ஆரோக்கியமான உறவை பராமரிக்கத் தேவையான குறைந்தபட்ச குணங்களையும் கவனிக்கத் துவங்குங்கள். இரு நபர்களுக்கிடையில் தேர்வு செய்யும் போது, வாழ்க்கை முறையில் ஒற்றுமைகளைத் தேடுங்கள். நீங்கள் இரண்டு பேருக்கு நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் போது, சரியான நபரைத் தேர்ந்தெடுக்க உதவும் சில வழிமுறைகளை இங்கே கொடுத்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எது உங்களுக்குத் தேவை?

எது உங்களுக்குத் தேவை?

சரியான துணையிடம் நீங்கள் தேடும் குணங்கள் என்னென்ன என்று முதலில் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். இப்பொழுது அந்த குணங்களை, அந்த இரு நபர்களிடம் உள்ளனவா என்று பாருங்கள். இரு நபர்களுக்கிடையில் மாட்டிக் கொண்டிருக்கும் போது, ஒருவரைத் தேர்ந்தெடுக்க மிகவும் சிறந்த வழிமுறையாக இருப்பது இதுவே. நீங்கள் தேர்ந்தெடுப்பவரின் அனைத்து குணங்களையும் பரிசோதிப்பதை விட, நீங்கள் எதிர்பார்க்கும் குணங்களை மட்டும் கண்டறிந்திட இந்த வழிமுறை உதவும்.

வசதி

வசதி

இது பணத்தைக் குறிப்பதல்ல. இரு நபர்களுக்கிடையில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் போது, யாரிடம் உங்களால் மிகவும் சகஜமாக, அன்யோன்யமாக - ப்ரீயாக இருக்க முடிகிறது என்று பாருங்கள். யாரிடமிருந்தால் உங்களை நீங்களாகவே கவனித்துக் கொள்ள முடியும் என்று கவனியுங்கள். நம்பிக்கை, நேர்மை, அரவணைப்பு, பரிவு, அன்பு, பாதுகாப்பு, காதல் மற்றும் மரியாதை என அனைத்து காரணிகளையும் கவனியுங்கள்.

போதுமான நேரம் வேண்டும்

போதுமான நேரம் வேண்டும்

உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எப்பொழுதும் எடுத்திட வேண்டாம். ஆண்களைப் புரிந்து கொள்ள போதுமான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். போதுமான அளவு நேரத்தை அவர்களுடன் செலவிடுவதன் மூலமாக, அவர்களுடைய விருப்பங்கள், வெறுப்புகள், நீண்டகால உறவின் மீதான அவர்களுடைய கண்ணோட்டம் மற்றும் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் உண்மையான அன்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.

ரேங்க் போடுங்க

ரேங்க் போடுங்க

இரண்டு நபர்களுடைய பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவ் குணங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ரேங்க் கொடுக்கலாம். யாருடைய உறவில் மென்மையும், குறைபாடில்லாமலும் இருக்க முடியும் என்று அவர்களுடைய பாஸிட்டிவ்களை கணக்கு போடவும். அதே நேரம், நெகட்டிவ்களை எக்காரணம் கொண்டும் தவிர்த்திட வேண்டாம் - ஏனெனில் உறவை பராமரிப்பதில் நெகட்டிவ்களுக்கும் பெரும் பங்கு உண்டு. எனவே, சரியான உறவைத் தேர்ந்தெடுக்கும் போது, இரு நபர்களுக்கும் ரேங்க் கொடுத்துப் பாருங்கள்.

குடும்பம்

குடும்பம்

ஒரு கலாச்சாரமிக்க குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்ட நபர் அந்த குடும்பத்தின் கொள்கைகள் மற்றும் மரியாதையையும் தன்னிடம் கொண்டிருப்பார். எனவே, இரு நபர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அவர்களுடைய குடும்பப் பின்னணியை கவனியுங்கள். மேலும், அந்த இருவரில் யார் குடும்பத்தை அதிகம் கவனிக்கிறார்கள் என்றும் பாருங்கள்.

மேற்கண்ட டிப்ஸ்களை முயற்சி செய்யுங்கள் மற்றும் நல்ல முடிவை எடுத்திடுங்கள். உங்களுடைய துணைவரை திருப்தியுடன் தேர்ந்தெடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Awesome Tips To Choose Between Two Guys

Look for some basic qualities, minimum requirements for maintaining a healthy relationship, and the similarity of lifestyle while you have to choose between two guys. Here are some tips that may help you to find the right one if you are torn between two lovers.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter