For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'உங்கள் உறவு முடிந்தது' என்பதை சுட்டிக்காட்டும் 7 அறிகுறிகள்!!!

By Super
|

நீங்கள் நீண்ட தூர உறவில் இருக்கிறீர்களா? அப்படியானால் எல்லாம் சரியாக போய் கொண்டிருக்கிறதா என்பதை நீங்கள் அவ்வளவு எளிதில் சொல்ல முடியாது. சில பல காரணங்களால், ஒரு கட்டத்தில், தம்பதிகள் பிரிந்து தனியாக வாழும் சூழ்நிலை ஏற்படுவது இயற்கையே. நீண்ட நாள் உறவு முடிந்தது என்பதை சுட்டிக்காட்ட சில அறிகுறிகள் உள்ளது.

'கண்கள் பிரியும் போது இதயமும் பிரியும்' என்பது சில தம்பதிகளை பொருத்தவரை உண்மையாக மாறிவிடுகிறது. உங்கள் வாழ்க்கையில் எதையும் தராத ஒரு உறவோடு ஒட்டிக் கொண்டிருப்பதில் எந்தவித பயனும் இல்லை.

அவசியம் படிக்க வேண்டியவை: உறவுகளில் பெண்கள் செய்யும் 11 தவறுகள்!!!

பயனுள்ள உறவுகளுக்கான அறிவுரைகளை பின்பற்றினால், உங்களின் நீண்ட கால உறவு எந்த ஒரு பிரச்சனையும் இன்றி சுமூகமாக நீண்ட நாள் பயணிக்கும். அதற்கு பல நடவடிக்கைகளால் உங்கள் உறவை உயிர்ப்புடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உறவுகள் ஆரோக்கியமாக, நீண்ட காலம் நீடித்திட வழிகளை தேடி முழி பிதுங்குபவர்களுக்கு, இது ஒரு சிறந்த வழியாக திகழும்.

உங்களின் நீண்ட கால உறவு முடிந்தது என்பதை சுட்டிக்காட்டும் முக்கியமான அறிகுறிகளைப் பார்க்கலாமா?

இதுப்போன்று வேறு: காதலனுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க சில வழிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறைவாக பேசுதல்

குறைவாக பேசுதல்

உங்களின் நீண்ட கால உறவு முடிகிறது என்பதற்கான முக்கியமான அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும். ஆம், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதும் தொடர்பு கொள்வதும் குறைந்து கொண்டே வருதல். உங்களிடம் பேசுவதில் உங்கள் துணைக்கு சுவாரசியம் ஏற்படவில்லை என்பதை நீங்கள் உணர்ந்தால், நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் விரும்பிவரை மீண்டும் உங்களிடம் கொண்டு வர சரியான வழிமுறையை தேடுவது அவசியமாகும்.

நேரமின்மை

நேரமின்மை

உங்களுக்கு பதிலளிக்க உங்கள் துணை ரொம்பவும் கால தாமதம் எடுத்துக் கொள்கிறார்களா? அப்படியானால் உங்களின் நீண்ட கால உறவு முடிவுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அப்படிப்பட்ட நேரத்தில் உங்களை தவிர மற்ற அனைத்திற்கும் அவருக்கு நேரம் இருக்கும்.

ஆர்வத்தை இழப்பது

ஆர்வத்தை இழப்பது

தொலைப்பேசியி நீண்ட நேரம் பேசவோ அல்லது சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை அனுப்பவோ உங்கள் துணைக்கு ஆர்வம் இல்லையென்றால், நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்களா என்பதை யோசிக்கும் நேரம் இது. இப்படிப்பட்ட நேரத்தில் உங்கள் துணையிடம் எதுவும் சுவாரசியமாக படாமல் போய் விடும்.

புதியவர்கள் போல் நடந்து கொள்வது

புதியவர்கள் போல் நடந்து கொள்வது

காதலுடன் பேசும் உரையாடல்களின் தோரணையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை கவனித்துள்ளீர்களா? அப்படியானால் உங்கள் நீண்ட கால உறவு முடியும் தருவாயை அடைந்துள்ளது. உங்கள் துணையிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள பிடிக்காததால், அவரிடம் சில விஷயங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பேசுவீர்கள்.

சந்திக்கும் ஆவல் இருப்பதில்லை

சந்திக்கும் ஆவல் இருப்பதில்லை

நீங்கள் இருவரும் தனித்தனியாக இருக்கும் போது, ஒருவரையொருவர் எப்போது பார்ப்போம் என்று ஏங்கி தவிப்பது இயற்கையே. ஆனால் உங்கள் உறவில் ஓட்டை விழுந்து விட்டால், இந்த உணர்வு ஏற்படவே ஏற்படாது. உங்கள் உறவு நீண்ட காலம் நிலைத்திட இப்படி சந்திப்பது உங்கள் பந்தத்தை வலுப்படுத்தும்.

சந்கேகங்கள்

சந்கேகங்கள்

நம்பிக்கை என்ற விஷயத்தை இருவரும் பகிர்ந்து கொண்டால் தூய்மையான உறவு பாதுகாப்பாக இருக்கும். ஆனால் ஒருவரையொருவர் சந்தேகப்பட ஆரம்பித்து விட்டால், உங்கள் உறவு முடிந்து விடும் இடர்பாடு ஏற்பட்டு விடும். இந்த சந்தேகம் ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது உங்கள் துணைக்கு உண்டாகும் பாதுகாப்பின்மையே.

காரணங்கள் கண்டுபிடிப்பது

காரணங்கள் கண்டுபிடிப்பது

உங்கள் உறவில் இருந்து நீங்கள் தப்பிக்க நினைத்தால், அனைத்திற்கும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி கொண்டே இருப்பீர்கள். உங்கள் நீண்ட கால உறவு வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறியே இது. உறவு முடிகிறது என்பதற்கான அறிகுறிகளில் இதுவும் முக்கியமான ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Signs That Show Your Relationship Is Over

Are you in a long-distance relationship? Then, you may find it difficult to say whether everything runs fine. It is natural that couples have to live separate at some point of the time due to many reasons. There are some signs that show your long-distance relationship is over.
Desktop Bottom Promotion