பெண்களிடம் ஆண்கள் எதிர்பார்க்கும் வியக்க வைக்கும் சில முக்கியமான விஷயங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

சில நேரங்களில் ஆண்களுடன் வெற்றிகரமான உறவை வளர்ப்பது கஷ்டமாக இருக்கும். அதற்கு காரணம் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள். உண்மையிலேயே நீங்கள் ஆண்களை புரிந்து கொள்ள வேண்டுமானால், சாதாரண உரையாடல்கள் கண்டிப்பாக போதாது.

ஆண்களை பற்றியும் அவர்களின் உளவியல் பற்றியும் அறிந்து கொள்ள பல புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆண்களுக்கு முக்கியமானதாக அமையும் பெண்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் அநேகமாய் உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும். நாங்கள் கூறப்போகும் சில விஷயங்களை நீங்கள் சரியாக புரிந்து கொண்டால், ஆண்களுடன் ஏற்படும் எண்ணிலடங்கா தவறான புரிதல்களை கண்டிப்பாக நீங்கள் தவிர்த்து விடலாம். அவைகளில் சில இதோ!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மரியாதை

மரியாதை

ஆண்களுக்கு முக்கியமானதாக உள்ள பல விஷயங்களில் ஒன்றாக இருப்பது மரியாதை. தங்களின் நண்பர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் இருந்து மரியாதை கிடைப்பதற்கான அனைத்து விஷயங்களையும் அவர்கள் செய்வார்கள். பிறரின் மத்தியில் தனக்கு தகுந்த மரியாதை கிடைக்கவில்லை என்றால் அந்த ஆண் பெரிதும் பாதிக்கப்படுவார். கூடுதலாக தன் சுய மரியாதையும் இதனால் குறையத் தொடங்கும். பெண்களுடன் உறவில் ஈடுபடும் போதும், அவர்களுக்கு மரியாதை என்பது மிகவும் முக்கியமானதாகும். பொதுவாக நாம் இந்த விஷயத்தில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் ஆண்களுக்கு மரியாதை கொடுக்கும் பெண்கள் சுலபமாக வென்று விடுவார்கள்.

பாராட்டு

பாராட்டு

பாராட்டு கிடைக்காமல் எந்த ஒரு ஆணாலும் இருக்க முடியாது என்பது வியக்கத்தக்க கண்டுபிடிப்பாகும். அவர்களின் சாதனைகளின் மீது அவர்களுக்கு தொடர்ச்சியான பாராட்டுக்கள் வர வேண்டும். உங்கள் கணவன் அல்லது காதலனை அவரின் சாதனைகளுக்கு நீங்கள் பாராட்டினால், அவரின் சந்தோசம் முடிவில்லாமல் இருக்கும். அவரின் காதலைப் பற்றி அறிந்த போது, உங்களுக்கு உண்டான அதே அனுபவத்தை அவரும் கண்டிப்பாக பெறுவார். அவரை கொஞ்சம் புகழ்ந்து பாருங்கள், அப்போது கண்டிப்பாக மாறுதல்களை உணர்வீர்கள்.

உங்கள் புன்னகை

உங்கள் புன்னகை

உங்கள் புன்னகை என்பது அற்புதமான ஒன்று என்பது உங்களுக்கு தெரியுமா? அதனை வைத்து அனைவரையும் நீங்கள் மகிழ்விக்கலாம், குறிப்பாக ஆண்களை. உங்கள் சந்தோஷமான புன்னகையின் அரவணைப்பை அவர் பெறட்டும். எந்த ஒரு ஆணுக்கும் நேர்மறையான எண்ணங்களை கொண்ட பெண் தான் தனக்கு வாழ்க்கை துணையாக வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படிப்பட்ட பெண்களால் தான் தங்களின் நேர்மறையான உணர்வுகளை தங்கள் ஆணுடன் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரு பெண் சந்தோஷமாக இருக்கிறாள் என்றால் தன் கணவன் அல்லது காதலன் அவளை அன்புடனும் காதலுடனும் பார்த்துக் கொள்கிறான் என்று அர்த்தமாகும். உங்கள் அன்பை உங்கள் கணவன் அல்லது காதலன் மீது காட்டுவதால் அவர் எவ்வளவு நல்லவராக இருக்கிறார் என்பதை அவருக்கு அது உணர்த்தும். உங்கள் புன்னகை போன்ற சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்கள் உறவை வலுப்படுத்த உதவும்.

யோசிக்கும் நேரம்

யோசிக்கும் நேரம்

ஆண்கள் வேகமாக யோசிப்பதில்லை என்பது உண்மையாகும். அவர்கள் வாழ்வில் பெரிய நிகழ்வுகள் ஏதேனும் நடக்கும் போது, அனைத்தையும் செயல்படுத்த அவர்களுக்கு கூடுதல் நேரம் தேவைப்படும். முக்கியமான முடிவை எடுக்கும் ஒவ்வொரு நேரத்திலும் உங்கள் கணவன் அல்லது காதலன் நீண்ட நேரம் யோசிப்பார். அதனால் ஒரு சூழ்நிலையின் நன்மைகளையும், தீமைகளையும் கருதுவதற்கு அவருக்கு நேரம் எடுக்கும். அதுவே பெண்கள் என்றால், பிரச்சனையைப் பற்றி தீர்வை வேகமாக காண்பார்கள்.

நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்

நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்

உங்கள் கணவனுக்கு பிடித்த ஆடையை வீட்டில் நீங்கள் அணிவதால், அவர் ஒன்றும் காழ்ப்புணர்ச்சி கொள்ளப் போவதில்லை. இருப்பினும், நீங்கள் மிகவும் சிறப்பாக ஆடையணிந்து அழகாக காட்சியளிக்கும் போது, அது அவருக்கு கண்டிப்பாக சந்தோஷத்தை தான் ஏற்படுத்தும். ஆனால் அதற்காக நீங்கள் அளவுக்கு அதிகமான மேக்-அப் அல்லது விலை உயர்ந்த ஆடைகளை வாங்குவது என ஈடுபட கூடாது. சொல்லப்போனால் அழகாக இருப்பதென்றால் மிகப்பெரிய மாடலாக இருக்க வேண்டும் என்பதில்லை. இயற்கை அழகை விட பெரிது எதுவும் இல்லை. அவருக்காக மட்டும் நீங்கள் அழகாக காட்சியளிப்பதை கண்டிப்பாக அவர் விரும்புவார்.

அவரின் வேலைக்கு பாராட்டுக்கள்

அவரின் வேலைக்கு பாராட்டுக்கள்

உங்கள் ஆணுக்கு முக்கியமான மற்றொன்று; அவரின் வேலைகளுக்கான பாராட்டுக்கள். தேவைப்படும் நேரத்தில் எல்லாம் அவரை பாராட்டுங்கள். வெற்றியை அடைய உங்கள் கணவன் மிகவும் கடினமாக உழைக்கிறார் என்றால், உங்களின் பாராட்டுக்கள் கண்டிப்பாக அவரை ஊக்குவிக்கும். உங்கள் கணவன் அல்லது காதலன் என்ன செய்தாலும் சரி, உங்களின் பாராட்டுக்கள் அவரை பரவசமடையச் செய்யும். மேலும் உங்களின் இனிமையான வார்த்தைகள் அவரின் மனநிலையையும் மேம்படுத்தும்.

உங்களின் சிரிப்பு

உங்களின் சிரிப்பு

எப்படி உங்கள் புன்னகை உங்களின் கணவன் அல்லது காதலன் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதே போல் உங்கள் சிரிப்பின் மீதும் தாக்கம் ஏற்படும். சந்தேகமே இல்லாமல் உங்கள் சிரிப்பு உங்களுக்கு நெருக்கமானவர்களின் மீது அதிசய தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் சந்தோஷத்தின் அடர்த்தியான அறிகுறி இது. நீங்கள் அளவுக்கு அதிகமாக சிரித்து புன்னகையுடன் இருக்கும் போது, உங்கள் கணவன் அல்லது காதலன் கண்டிப்பாக நன்றாக இருப்பார்கள். நீங்கள் அடிக்கடி சோகமாகவும், திருப்தி அடையாதவராகவும் இருந்தால், கண்டிப்பாக உங்கள் ஆணுடனான உறவில் வெற்றி கிட்டாது.

சந்தோஷத்தை உண்டாக்க, உங்கள் கணவன் அல்லது காதலனின் விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் வாழ்க்கையில் மிகவும் அற்புதமானவருடன் நீங்கள் நல்ல புரிதலுடன் இருக்கலாம். உங்கள் கணவன் அல்லது காதலனுடன் உரையாடுகையில் நாங்கள் கூறியவைகளை மறந்து விடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 Astonishing Things That Are Important to Men

There are lots of books available about men and their psychology. Perhaps you’ll be surprised to find out some interesting things about women that are important to men. I recommend you to get acquainted with these things if you want to avoid numerous misunderstandings with your man. Here are some of them.
Subscribe Newsletter