உங்கள் நண்பன் உங்களை தீவிரமாக காதலிக்கிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

Posted By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

பெண்களே, உங்களுடைய பாய் ஃப்ரண்டைப் போல இந்த உலகத்தில் வேறு யாருமே கிடையாது என்று நினைக்கிறீர்களா? அவரைப் போல யாருமே உங்களிடம் அன்பாக இருக்க மாட்டார்கள் என்றும் நீங்கள் நினைக்கிறீர்களா?

உங்கள் பாஸிட்டிவ்வான அப்ரோச் நல்லது தான். இருந்தாலும் கண் மூடித்தனமாக அப்படியெல்லாம் நம்பிவிடாதீர்கள். உங்கள் பாய் ஃப்ரண்ட் உங்களிடம் எவ்வளவு பிரியமாக இருக்கிறார் என்று அவருடைய சில நடத்தைகளே வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.

உங்கள் பாய் ஃப்ரண்ட் உங்களை காதலிப்பதாக இருந்தால் வெளிப்படுத்தும் அப்படிப்பட்ட சில அறிகுறிகள் குறித்து இப்போது நாம் பார்க்கலாம். இவையெல்லாம் ஓ.கே. என்றால் அவர்தான் சூப்பர் என்று நீங்கள் உண்மையிலேயே அவரை நினைத்து பெருமைப்படலாம்.

எஸ்.எம்.எஸ் அனுப்புவார்

6 Subtle Signs He Has a Crush on You

உங்களை விட்டு ஒரு சில நாட்கள் பிரிந்து வெளியூர் செல்லும் உங்கள் பாய் ஃப்ரண்ட் அடிக்கடி உங்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொண்டே இருப்பார். அவருடைய மெசேஜ்கள் எல்லாமே க்யூட்டாக இருக்கும். அவருடைய எல்லா எஸ்.எம்.எஸ்-களிலும் 'டேக் கேர்' நிச்சயம் இருக்கும். மேலும் நீங்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்-க்கும் உடனடியாகப் பதில் கிடைக்கும்.

உங்களுக்காக பதறுவார்

6 Subtle Signs He Has a Crush on You

உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால், உங்க பாய் ஃப்ரண்ட் உண்மையிலேயே பதறி விடுவார். உங்கள் காலில் சின்ன வலி என்றால் கூட அவர் மிகவும் அக்கறையுடன் உங்கள் வலி தீர உதவுவார்.

பரிசு கொடுப்பார்

6 Subtle Signs He Has a Crush on You

ஒவ்வொரு முறை நீங்கள் சந்திக்கும் போதும், ஏதாவது ஒரு சிறு பரிசுப் பொருளையாவது உங்களுக்குக் கொடுத்து அசத்துவார் உங்கள் பாய் ஃப்ரண்ட்! அது மட்டுமல்ல, உங்கள் மேல் அதிக உரிமை எடுத்துக் கொண்டு, உங்களைப் பற்றித் தன் நண்பர்களிடம் புகழ்ந்து பேசுவார்.

உங்களை நன்கு அறிவார்

6 Subtle Signs He Has a Crush on You

உங்கள் பாய் ஃப்ரண்ட் உங்களைப் பற்றி அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார். உங்களுடைய விருப்பு-வெறுப்புகளை நன்றாக அறிந்து, முக்கியமான விசேஷ தினங்களில் உங்களுக்குப் பிடித்தமான இடத்துக்குக் கூட்டிச் சென்று, உங்களுக்கு விருப்பமான பொருளை பரிசாகக் கொடுத்து உங்களை வீழ்த்துவார். அதே நேரத்தில், உங்களுக்கு விருப்பமில்லாதவற்றைப் பேச மாட்டார்.

நேருக்கு நேர் பார்ப்பார்

6 Subtle Signs He Has a Crush on You

எந்த விஷயமானாலும் சரி, உங்களவர் உங்களை நேருக்கு நேராகக் கண்ணோடு கண் நோக்கித் தான் பேசுவார். நீங்கள் பேசும் போதும், உங்கள் கண்களையே பார்த்துக் கொண்டிருப்பார். தன் கண்களை அங்கே இங்கே அலைய விட மாட்டார். அவருடைய நேர்மைக்கு இதுவே ஒரு அருமையான எடுத்துக்காட்டாகும்.

பொறாமைப் பட வைப்பார்

6 Subtle Signs He Has a Crush on You

உங்கள் பாய் ஃப்ரண்ட் உங்களுடனேயே எப்போதும் இருந்து பேசி சிரிப்பதை வைத்து, உங்களுடைய பிற சாதாரண ஆண் நண்பர்களைப் பொறாமைப் பட வைப்பார். இது உங்களுக்கே பெரும் ஆச்சரியமாகவும், பெருமையாகவும் இருக்கும்.

English summary

6 Subtle Signs He Has a Crush on You

If you have a friend that might be more than a friend but you just aren’t sure, these signs he has a crush on you might help.