ஆண்களிடம் பெண்கள் எப்போதுமே மறைக்கும் 5 விஷயங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

உங்கள் மீதுள்ள தீராத காதலை நம்ப வைப்பதற்காக உங்கள் காதலி அல்லது மனைவி எண்ணிலடங்காத லட்சக்கணக்கான விஷயங்களை கூறுவார். ஆனால் அவர் அப்படி உண்மையை வெளிப்படுத்தும் தருணங்களில் எத்தனை பொய்கள் ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? பொய்களை கண்டறியும் கருவிகள் தான் உங்களுக்கு உதவிட முடியும். பெண்களின் டைரியை புரட்டிப் பார்த்தோமானால், பெண்களின் வாழ்க்கைக்கு பொதுவான அர்த்தத்தை கூறி விடலாம் - அது தான் 'வாழ்க்கை ரகசியங்கள்'.

பெண்களின் மூளைக்கு செல்லும் விஷயங்கள் இதயத்துடன் ஒத்துப் போவதில்லை. இதனால் அவர்கள் சில விஷயங்களை ரகசியமாக வைக்கிறார்கள். அது பயத்தினால் அல்ல. சில விஷயங்களில் அவர்களுக்கென அந்தரங்கம் இருக்க வேண்டும் என விருப்பப்படுவதே அதற்கு காரணமாக உள்ளது. ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்ள வேண்டிய, சர்வேயின் மூலமாக நாம் கண்டறிந்த ஐந்து முதன்மையான பதில்கள், இதோ!

பழைய அனுபவங்கள்

5 Things Women Always Hide From Men

உங்கள் காதலி அல்லது மனைவியின் மிக நெருக்கமான அனுபவங்கள் உங்களோடு மட்டும் தான் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவர்களின் குதூகலம் நிறைந்த அனுபவங்களை உங்களிடம் இருந்து அவர்கள் மறைத்திருக்கலாம். தங்களின் குணத்தை வைத்து மதிப்பீடு செய்யப்படுவோம் என்ற எண்ணத்தால் பல பெண்களுக்கு பயம் ஏற்படும். தங்களின் சின்ன சின்ன கசமுசா ரகசியங்களை பகிர்ந்து கொள்வதால், தங்கள் காதலன் அல்லது கணவன் பாதுகாப்பின்மையோடு பொறாமை கொள்வார் எனவும் சில பெண்கள் நினைப்பார்கள். "அவனை விட நான் சிறந்தவனா?" என்ற எண்ணம் தான் பெரும்பாலான ஆண்களுக்கு எழும் கேள்வியாக இருக்கும். இது பெண்களுக்கு கடும் கோபத்தை உண்டாக்கும்.

பெண்களுக்குள்ளான உரையாடல்கள்

5 Things Women Always Hide From Men

மாறுவேடம் அணிந்து கொண்டு பெண்கள் கூடியிருக்கும் அறைக்கும் சென்றாலொழிய, பெண்களுக்குள் என்ன பேசிக் கொள்வார்கள் என்பதை பொதுவாக உங்களால் கண்டுப்பிடிக்க முடிவதில்லை. பொதுவாக அப்படி பெண்கள் கூடியிருக்கும் இடத்தில் தான் கிளுகிளுப்பான, சூடான ரகசியங்கள் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளப்படும். ஆண்களுடனான உறவிற்கு ஒரு சம்பந்தமும் இல்லாத காரணத்தினால், தங்கள் பெண் நண்பர்களின் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம் என பல பெண்கள் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். இப்படி பெண்கள் கூடும் போது அதில் உங்கள் காதலி அல்லது மனைவிக்கு இடம் இல்லாமலா? ஆனால் அதில் உங்களுக்கு கண்டிப்பாக இடமில்லை.

மேக்கப் சாதனங்கள்

5 Things Women Always Hide From Men

உங்கள் காதலி அல்லது மனைவி எப்படி நாள் முழுவதும் அழகாக இருக்கிறார்கள் என்று வியந்திருக்கிறீர்களா? அவர்களின் மேக்கப் சாதனங்களை எங்கே வைத்துள்ளார்கள் என்பதை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள் என்பது நிதர்சனமான உண்மை. இந்த அழகு எப்படி வந்தது என்பதையும், அது எப்படி நீங்காமல் இருக்கிறது என்பதையும் எண்ணி நீங்கள் வியக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புவார்கள். அது அவர்கள் சருமத்தில் போடப்பட்டிருக்கும் மேக்கப் என உங்களில் சிலர் புத்திசாலித்தனமாக கண்டுப்பிடித்தாலும் கூட, அதனை மறைக்க வயதை குறைக்கும் க்ரீம், கண்களுக்கு அடியில் மேக்-அப், பருக்களுக்கான தீர்வு போன்றவைகளை பயன்படுத்துவார்கள்.

தங்களின் முன்னாள் காதல் கதைகள்

5 Things Women Always Hide From Men

"பெண்களின் முழுமையான இருப்பே காதல் என கவிஞர் கூறியுள்ளார்" என விர்ஜினா வுல்ஃப் சரியாகவே கூறியுள்ளார். நீங்கள் அவர்களின் வாழ்க்கைக்கு வருவதற்கு முன்பாக கண்டிப்பாக அவர்களுக்கு வேறு ஒரு வாழ்க்கை இருந்திருக்கும். உங்கள் பெண்ணை நீங்கள் பார்ப்பதற்கு முன்பாக அவர் ஒன்றும் ஒரு அறைக்கு உள்ளேயே அடைபட்டு இருக்கவில்லை. ஆனால் இன்னமும் தன் கடந்த காலத்தை அவர் நினைத்து கொண்டிருக்கிறாரா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும் தன்னாலேயே நீக்க முடியாத மிகுந்த ஆழமான உணர்வுகளை தன் நெஞ்சுக்குள் ஒரு பெண் புதைத்து வைத்திருப்பாள். தற்போதைய காதலன் மனம் உடைந்து விடக்கூடாது என்ற காரணத்தினால் பல பெண்கள் தங்களின் முன்னாள் காதல் அனுபவங்களை மறைத்து வைப்பார்கள் என்று நம் சர்வேயின் முடிவுகள் கூறுகிறது. சுவாரஸ்யமாக இந்த கதைக்கு மறுபக்கமும் உள்ளது! தற்போதுள்ள காதலன் மீதான அன்பின் அளவை வெளிப்படுத்த தன் முந்தைய காதல் அனுபத்தை பகிர்ந்து கொள்ள சில பெண்கள் விரும்பவும் கூட செய்கிறார்கள்.

குடும்பத்தின் மீதான உணர்வுகள்

5 Things Women Always Hide From Men

உங்கள் அக்கா அல்லது தங்கை சில்லறை தனமாக நடந்து கொள்கிறார்கள் அல்லது உங்கள் அம்மா வெளிப்படையாகவே தவறாக நடந்து கொள்கிறார்கள் என ஒவ்வொரு முறையும் உங்கள் காதலி அல்லது மனைவி உங்களிடம் வெளிப்படுத்தும் போதும், ஆத்திரத்தில் இப்படி புத்தி கெட்டு நடந்து கொள்கிறார்கள் என குற்றம் சாட்டப்படுவார்கள். இரண்டில் ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு உங்களை அவர் தள்ளி விடுவதை போன்ற நிலை ஏற்படும். அதனால் தன் புகுந்த வீட்டாரைப் பற்றிய உண்மையான உணர்வுகளை பல நேரங்களில் பெண்கள் தங்களுக்குள் மறைத்து வைத்துக் கொள்வதே பல வருடங்களாக நடந்து வருகிறது. 'உறவில் பாதிப்பு ஏற்படுவதற்கு நாங்கள் காரணமாக இருக்க விரும்பவில்லை' என்பதே இதற்கு பெண்கள் கூறும் காரணமாக உள்ளது.

English summary

5 Things Women Always Hide From Men

She'd tell you a million things to make you believe her undying love for you. But there are five things which women always hide from men.
Story first published: Monday, October 27, 2014, 16:38 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter