Latest Updates
-
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும்
பொறாமைக் காதலியின் 5 மோசமான நடவடிக்கைகள்!!!
பொறாமை என்பது ஒரு மோசமான வியாதி. ஒருவரின் மனதில் உள்ள பயம், பாதுகாப்பின்மை உள்ளிட்ட அனைத்துக் கெட்ட எண்ணங்களையும் அது வெளியில் கொண்டு வந்துவிடும்.
தன் காதலன் எப்போதும் தன்னுடனேயே இருக்க வேண்டும், தன்னை மட்டுமே விரும்ப வேண்டும் என்று ஒரு பெண் நினைப்பது நியாயம் தான். ஆனால் அவள் உங்கள் மேல் முழு நம்பிக்கை வைக்காவிட்டால்? அந்தப் பொறாமை உங்கள் காதலியிடமும் வந்துவிட்டால்?
வேறு எவளாவது உங்களைத் தூக்கிட்டு போயிடுவாளோ என்ற பதட்டத்தில் பல தவறான செய்கைகள் மூலம் அவள் தன் பொறாமையை வெளிப்படுத்துவாள். அதுப்போன்ற 5 நடவடிக்கைகள் இதோ...

வேறொரு பெண்ணுடன் பேச விடமாட்டாள்
உங்கள் பாஸோ, உங்களுடன் வேலை செய்பவரோ அல்லது நீங்கள் காபி சாப்பிடப் போகும் கஃபேயில் வேலை செய்பவரோ ஒரு பெண்ணாக இருக்கலாம். அந்தப் பெண்களுக்கு உங்களைப் பிடிக்குதோ இல்லையோ, அவர்களுடன் எந்த நோக்கிலும் உங்கள் காதலியின் முன் பேசிவிடாதீர்கள். அப்படிப் பேசினால் அவள் படுத்தும் பாட்டில் நீங்கள் எந்தப் பெண்ணுடனும் பேச முடியாமல் போகலாம்.

நிறைய கேள்வி கேட்பாள்
பெண்கள் எப்போதுமே கேள்விகளைக் கேட்டுக் குடைவது வழக்கம். அதே நேரத்தில் ஒரு பொறாமைப்படும் பெண்ணிடமிருந்து புறப்படும் எந்தக் கேள்விக்கும் நம்மால் அவ்ளோ ஈஸியாகப் பதில் கூறிவிட முடியாது. நாம் எந்த பதிலைக் கூறினாலும், அது அவளுக்கு சரியான பதிலாகவே அமையாது.

உறவில் விரிசல்
நம்பிக்கை இல்லாத ஒரு உறவு ஏற்படுத்தும் விரிசலை விட வேறு எதுவும் ஏற்படுத்திவிட முடியாது. உங்கள் மேல் உங்கள் காதலிக்கு முழு நம்பிக்கை இல்லாமல் போகும் போது, நீங்கள் உங்கள் சொந்தக்காரப் பெண்ணுடன் பழகினால் கூட, அது உங்கள் உறவைக் கெடுத்துவிடும்.

ஃபேஸ்புக்கில் உங்களை ஆராய்வாள்
அடிக்கடி நீங்கள் மொபைலில் அழைத்துப் பேசினாலும் சரி, தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருந்தாலும் சரி, இங்கே தான் இருக்கிறேன் என்று சொன்னாலும் சரி பொறாமைக் காதலி நம்பமாட்டாள். அவளும் ஆன்லைனில் வந்து உங்களையும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையும் துப்பறிவாள். உங்கள் பாஸ்வேர்டு என்ன என்று கேட்டும் உங்களைத் தொந்தரவு செய்வாள்.

உங்கள் மேல் குற்றச்சாட்டுக்கள் பாயும்
அவள் எப்படி இருந்தாலும் சரி, நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்து கொண்டிருந்தால் போச்சு. நாம் என்னதான் செய்தாலும் சரி, நம் மேல் குற்றம் சுமத்திக் கொண்டு தான் இருப்பாள்.



Click it and Unblock the Notifications