Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
நீங்க வெளிநாட்டில் இருந்து உங்க உறவுகளை 'மிஸ்' பண்றீங்களா? கவலை வேண்டாம்... இதோ 10 சூப்பர் டிப்ஸ்!
தங்களுடைய நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் பக்கத்தில் இல்லையே என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கும். படிப்பு மற்றும் வேலைக்காக அவர்கள் வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும், அவர்களுடைய ஏக்கம் பல மடங்கு அதிகரிக்கும்.
இன்னும் சிலர், உறவும் நட்பும் தொலை தூரத்திற்குச் சென்றுவிட்டால், அவ்வளவு தான்; அந்த உறவுக்கும், நட்புக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டியது தான் என்றும் நினைப்பதுண்டு. ஆனால், எப்போதுமே 'பயணங்கள் முடிவதில்லை'; பிரிவு தான் நல்ல உறவுக்கும், நட்புக்கும் நல்ல அறிகுறி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
நாள்தோறும் சந்தித்துக் கொண்டே இருந்தால் தான் அது நல்ல உறவு/நட்பு என்று கிடையாது. உங்கள் உறவினர்/நண்பர் கடல் கடந்து இருந்தாலும் சரி, பல ஆண்டுகள் உங்களை விட்டுத் தள்ளி இருந்தாலும் சரி, பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் இன்றைய தொழில்நுட்ப உலகில், இந்த உலகம் தான் சுருங்கிவிட்டது; நல்ல உறவோ நட்போ என்றும் சுருங்காது, உடையாது, பிரியாது!
ஆகவே, "முஸ்தஃபா முஸ்தஃபா டோண்ட் வொர்ரி முஸ்தஃபா... காலம் நம் தோழன் முஸ்தஃபா"!! அதே காலத்தோடு ஒன்றிணைந்து நம் தூரத்து உறவுகளுடனும், நட்புகளுடனும் எப்போதுமே நாம் தொடர்பு வைத்திருக்க இதோ 10 அருமையான ஐடியாக்கள்:

சேர்ந்து செய்யலாம்!
நாமும் நம் உறவினர்/நண்பரும் பக்கத்தில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் சில விஷயங்களைச் சேர்ந்தே இருவரும் செய்ய முடியும். ஒரே புத்தகத்தை இருவரும் ஒரே நேரத்தில் படிக்கலாம்; டி.வியில் ஒரே நிகழ்ச்சியைப் பார்க்கலாம்; ஒரே நேரத்தில் சில ஒரே வீட்டு வேலைகளைச் செய்யலாம்! இதன் மூலம் இருவரும் கூடவே இருப்பது போல உணர முடியும்.

திட்டமிடலாம்!
கூடிய சீக்கிரம் இருவரும் எப்போது சந்திக்கலாம், அப்படிச் சந்திக்கும் போது என்னவெல்லாம் செய்யலாம், எங்கேயெல்லாம் சுற்றலாம் என்று ப்ளான் பண்ணலாம். இப்படிச் செய்யும் போது, நம்மையும் அறியாமல் ஒரு உற்சாகமும் பரபரப்பும் நம்மைத் தொற்றிக் கொள்ளும். எப்போதுடா சந்திப்போம் என்ற துடிப்பில், நம் வேலைகளைச் சிறப்பாகவும், சுறுசுறுப்புடனும் செய்து முடிப்போம்.

எப்பவும் ரொமான்ஸ்!
இந்த தூரத்து உறவே உங்கள் துணை என்றால், இன்னும் எப்படி இருக்கும்? பக்கத்தில் இல்லையே தவிர, இருவரும் எப்போதும் மொபைலில் பேசிக் கொள்ளலாம்; சாட் செய்யலாம்; எஸ்.எம்.எஸ் பண்ணிக்கலாம். சும்மா இல்லை, முழுக்க முழுக்க ரொமான்ஸ் கலந்து தான்!

கிஃப்ட் அனுப்பலாம்!
இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் கைப்படவே கடிதங்கள் எழுதிக் கொள்ளலாம்; வாழ்த்து மடல்கள் அனுப்பிக் கொள்ளலாம்; குட்டியாகவோ பெரிதாகவோ பரிசுப் பொருட்களையும் பரிமாறிக் கொள்ளலாம்! இது கொஞ்சம் பழைய முறை தான். ஆனால் இதை அனுபவித்துப் பார்த்தால் தான் அதில் உள்ள உறவும், அன்பும், நட்பும், காதலும் தெரியும்!

ஸ்கைப்!
இதைப் பற்றி இந்தக் காலத்து மக்களுக்குச் சொல்லவே தேவையில்லை. இருவரிடத்திலும் ஸ்கைப் அக்கவுண்ட் இருந்தால் போதும். மேலும், கம்ப்யூட்டரோ லேப்டாப்போ கூடத் தேவையில்லை; ஸ்மார்ட் மொபைல் போனே போதுமானது. ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்ளத் தான் முடியாது. மற்றபடி, 'லைவ்' ஆகவே பார்த்துக் கொள்ளலாம், பேசிக் கொள்ளலாம், சிரிக்கலாம், சண்டைப் போட்டுக் கொள்ளலாம்.

படங்கள் அனுப்பலாம்!
நம் உறவினரையோ, நண்பரையோ புகைப்படத்தில் பார்க்கும் சுகமே அலாதிதான்! ஃபோட்டோவுக்கு அவர்கள் போஸ் கொடுப்பது, நம்மையே பார்த்துச் சிரிப்பது போலிருக்கும். தங்கள் புகைப்படங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதும் இந்தக் காலத்தில் அவ்வளவு கஷ்டம் கிடையாது. SMS முதல் Facebook வரை எத்தனையோ ஊடகங்களின் மூலம் படங்களை உடனுக்குடன் அனுப்பிக் கொள்ளலாம்.

திடீர் வருகை!
வெளிநாட்டில் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் உறவினரோ, நண்பரோ, திடீரென்று நமக்கு முன் வந்து நின்றால் எப்படி இருக்கும்? ஒரே இன்ப அதிர்ச்சி தான்! இதுப்போன்ற சர்ப்ரைஸ் விசிட்டுகள் கொடுத்து ஒருவருக்கொருவர் அசத்தலாம்.

தினமும் பேசலாம்!
உண்மையான அன்பும், பாசமும் இருப்பவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் ஒரு நாள் கூட ஒருவருக்கொருவர் மொபைலிலோ சாட்டிங்கிலோ பேசாமல் இருக்க மாட்டார்கள். தினமும் ஒரு முறையாவது பேசாவிட்டால் அவர்களுக்குத் தலையே வெடித்துவிடும் போல் இருக்கும்! குறைந்தது, உறங்கச் செல்லும் முன் ஒரு 10 நிமிடங்களாவது பேசுவது நலம்.

சீண்டல் வேண்டாம்!
இருவரும் தனித் தனியாகப் பிரிந்து இருப்பதே பெரும் கொடுமையான விஷயம். இந்த நிலையில், போனில் பேசிக் கொள்ளும் போது தேவையில்லாத பிரச்சனைகள் பற்றிப் பேசவோ, கோபமாகப் பேசவோ, தேவையில்லாத கேள்விகள் கேட்பதோ கூடாது. ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, உரிமையாகவும், அன்பாகவும், அமைதியாகவும் மட்டுமே பேச வேண்டும்.

போன் செக்ஸ்!
இது கொஞ்சம் 'உவேக்'கான விஷயம் தான். ஆனால் சில சின்னஞ் சிறு ஜோடிகள் பிரிந்து வாடும்போது, இது தவிர்க்க முடியாது தான்! வேறு எங்காவது போய் கெட்டு ஒழிவதைக் காட்டிலும், இது ஓரளவு நல்லதே! அவர்களுடைய உறவு வலுப்படும். 'எப்படா நேரில் பார்ப்போம்' என்ற ஏக்கத்தில் அவர்களுடைய அன்பும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications











