Latest Updates
-
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
நீங்க திருமணம் செய்ய போறீங்களா? இந்த குணாதிசியங்கள் அந்த பையனுக்கு இருக்காணு பாருங்க..!
திருமணம் என்று வரும்போது, சரியான துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அனைவரது பெற்றோரும் நினைக்கின்ரனர்.. நல்ல வேலை, சொத்து, ஆளுமை, அன்பாக பழகுபவர் என ஆராய்ந்துவிட்டு திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்கள். ஆனால்.. திருமணம் செய்யப் போகும் பையனுக்கு கண்டிப்பாக இந்த குணங்கள் இருக்க வேண்டும்.. என்கிறது சாமுத்திரிகா சாஸ்திரம்.
முற்காலத்தில், அவர்கள் ஒரு வரன் ஏற்பாடு செய்து, தங்கள் தேவைகளுக்கு ஏற்ற இளவரசரைத் தேர்ந்தெடுத்தனர். அதாவது, புத்திசாலித்தனம் மற்றும் வலிமையை சோதித்து அதில் தேர்ச்சி பெற்றவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஒரு பையனுக்கு அவனுடைய தோற்றம், ஆளுமை, வேலை, சொத்து போன்றவை பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ஆனால் சாமுத்திரிகா சாஸ்திரம் சில குணங்கள் இருந்தால் மட்டுமே ஒரு பையனுடன் திருமணம் செய்ய பரிந்துரைக்கிறது. வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் முன், இந்த குணங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு பையனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் அது கூறுகிறது. ஆனால் இப்போது குறிப்பிடப்படும் இந்த குணாதிசயங்களில் குறைந்தது 12 போதுமானது. அந்த அம்சங்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
1. தைரியம்
பையன்களுக்கு நிறைய தைரியம் இருக்க வேண்டும். எதையும், எப்பொழுதும்.. சிங்கம் போல் தைரியத்துடன் செய்ய வேண்டும். வேலை பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி... தைரியமாக செய்ய வேண்டும்.
2. கவனமாக இருங்கள்
ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக தன் வாழ்க்கை துணையிடம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். வியூகமாக இல்லாவிட்டாலும்.. பிரச்சனை தீர்க்கும் வகையில்.. கவனிக்க வேண்டும்.
3. அதிகாலையில் எழுந்திருங்கள்
அதிகாலையில் எழுபவர்.. மற்றவர்களையும் ஊக்கப்படுத்துகிறார்.. ஆக.. இந்தப் பழக்கம் ஆண் குழந்தைகளிடம் இருக்க வேண்டும். மேலும், அதிகாலையில் எழுந்திருப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எனவே இந்த அம்சம் கட்டாயமாகும்.
4. கடின உழைப்பு
கடினமான பணி வரும்போது கஷ்டப்படாமல், நடிக்காமல்.. பயப்படாமல் உழைக்கும் குணம் பையன்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
5. குடும்பம் மற்றும் நண்பர்கள்
ஆண்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் இருவரையும் மதிக்கும் நபராக இருக்க வேண்டும். மேலும்.. பிறருக்கு உதவும் குணம் வேண்டும். கடினமாக உழைத்தால் செல்வம் கிடைக்கும் என்று நம்பக்கூடியவராக இருக்க வேண்டும்.
6. வாழ்க்கை துணையின் தேவைகளை அறிய வேண்டும்..
ஆண்கள் துணையின் தேவைகளை அறிந்து, அவர்களின் ஆசைகளை அறிந்து அவற்றை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். அவர் தனது துணையின் தீவிர காதலராக இருக்க வேண்டும்.
7. வேலை, வாழ்க்கை
ஆண்கள் தனது உறவு, தனிப்பட்ட மற்றும் பணி வாழ்க்கை ஆகியவற்றில் உள்ள அபாயங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு நபராக இருக்க வேண்டும். காதலில் எந்த தவறும் செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும்.
8. வாழ்க்கையை நேசிப்பவராக இருத்தல் வேண்டும்..
பல ஆண்கள் தங்கள் காதல் வாழ்க்கையை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால்.. தங்கள் காதல் வாழ்க்கையை தனிப்பட்டதாகக் கருதும் பையன்களின் குணாதிசயம் கட்டாயம் இருக்க வேண்டும்.
9. வணிகம்
அதிக பொறுமை, வியாபாரத்தில் மிகவும் விடாமுயற்சியுடன் இருப்பது ஆண்களிடம் இருக்க வேண்டிய முக்கியமான பண்பு.இது கண்டிப்பாக நீங்கள் பார்க்கும் மாப்பிளையிடம் இருத்தல் வேண்டும்..
10. நினைவுகள்
உங்கள் துணையுடன் கழித்த இனிமையான நினைவுகள் மற்றும் பிடித்த விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். வாழ்க்கையில் தேவையில்லாத விஷயங்களை சேமித்து வைப்பதை விட.. அப்படிப்பட்ட விஷயங்களை சேமித்து வைப்பது மிகவும் அவசியம் என்று நம்ப வேண்டும்.
11. பெருதன்மையுடன் வாழ்தல்
ஆணவம், ஆடம்பரம் போன்ற குணங்கள் ஆண் மகனுக்கு வெற்றியையும் செல்வத்தையும் அழித்துவிடும். அதனால் ஒரு ஆண் கீழ்ப்படிதல் என்ற பண்புடன் வாழ்வது பெருதன்மையுடன் இருப்பது மிகவும் அவசியம்.
12. பணிவு
தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் பணிவாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ளும் குணம் அந்த ஆணுக்கு அவருக்கு இருக்க வேண்டும்.
13. இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பது..
இருப்பதைக் கொண்டு தான் மகிழ்ச்சியாக இருப்பதாக உணரும் மனப்பான்மை இருக்க வேண்டும். மேலும்.. தனக்கு இல்லாததை நினைத்து வருத்தப்படக்கூடாது. அப்படி வருத்தப்படாமல் இருக்கும் ஆணை மிஸ் பண்ணாமல் திருமணம் செய்துக் கொள்ளுங்கள்..
14. உடல்நிலை ஆரோக்கியம்..
ஆண்களிடம் தன் உடல் நலனில் அக்கறை செலுத்தும் குணம் இருக்க வேண்டும். உணவில்.. சரியான சத்துக்கள் இருக்க கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தீய பழக்கங்களை ஊக்குவித்தாலும்.. தன் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். மொத்தத்தில் டீ டோட்டலராக இருத்தல் வேண்டும்.. அப்படி இருந்தால் திருமணத்தை உடனே முடித்துவிடுங்கள்..
15. சக ஊழியர்களுடன்
கட்டாயமாக ஆண்கள் சக ஊழியர்களிடமும், கீழ் பணிபுரிபவர்களிடமும் மிகவும் பணிவாகவும், கனிவாகவும், மரியாதையாகவும் நடந்துகொள்ளும் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
16. கோழைத்தனம் இருக்கக்கூடாது
திருடர்கள் மற்றும் வில்லன்கள் தாக்கும் போது எளிதில் தப்பிக்கும் கோழைத்தனம் ஆண்களிடம் இருக்கக்கூடாது. அந்த பிரச்சனையை ஃபேஸ் பண்ண வேண்டும்..
17. கவனம்
வேலையில் அக்கறையுள்ள பையனாக இருக்க வேண்டும். ஒரு இலக்கை நோக்கி உழைக்கக் கூடிய குணம் கொண்ட ஆண்களை பெண்கள் மணக்க வேண்டும்.
18. கோபம் கொள்ளாதே
எந்த நிலையிலும்.. பொறுமையை இழக்கக் கூடாது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் சண்டையிடும் போது, அவர் வன்முறையில் ஈடுபடக்கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும்.. மேலும் அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும்.. உங்கள் கனவுகள் மற்றும் வெற்றியை அடைவதில் உங்கள் இலக்கையும் விடாமுயற்சியையும் ஒருபோதும் கைவிடாதீர்கள்.



Click it and Unblock the Notifications

