Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
விவாகரத்தை உறுதி செய்த ஜெயம் ரவி.. இதுப்போல் திடீரென்று விவாகரத்தை அறிவித்த தமிழ் பிரபலங்கள்!
Jayam Ravi Announces Divorce From His Wife: கடந்த சில ஆண்டுகளாகவே சிறந்த தம்பதிகளாக அனைவராலும் பேசப்பட்டு வரும் தமிழ் பிரபலங்கள் பலரும் திடீரென்று தங்களின் விவாகரத்து செய்தியை அறிவித்து அதிர்ச்சி அளித்து வருகின்றனர். அந்த வகையில் கண்ணுபடும் வகையில் இருந்த ஒரு ஜோடி தான் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி. இவர்கள் இருவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆரவ்-ஆயன் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சுமார் 15 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாகவும், விவாகரத்து செய்யப் போவதாகவும் ஒரு புரளி சில மாதங்களாவே பேசப்பட்டு வந்தன. இப்படியொரு வதந்தி பரவிய போதும், இவர்கள் இருவருமே எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர்.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி இன்று மதியம் தனது எக்ஸ் பக்கத்தில், தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.
நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி" என்று தெரிவித்திருக்கிறார்.
என்ன காரணமாக இருக்கும்?
நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் சைரன். இந்த படத்தின் தயாரிப்பாளர் அவரது மாமியார் தான். இந்நிலையில் அடுத்ததாகவும், இவரை வைத்து படம் இயக்க நினைத்துள்ளாராம். இந்த படத்திற்கு ஜெயம் ரவி சுமார் ரூ.25 கோடியை சம்பளமாக கேட்டதாகவும், அதற்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என்று மாமியாரும் கூறியதாக சொல்லப்படுகிறது. இதுவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு விவாகரத்து ஏற்பட ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இதுமட்டுமே இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட காரணமாக இருந்திருக்க வாய்ப்பில்லை, வேறுபல காரணங்களும் இருக்கலாம். அது இன்னும் தெரியவில்லை. ஆயினும், இத்தம்பதி இப்படியொரு முடிவை எடுத்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாக கூறி வருகின்றனர். இதுப்போன்று தமிழ் திரையுலகில் வேறு சில பிரபலமான ஜோடிகளும் தங்களின் விவாகரத்தை அறிவித்து, அதிர்ச்சியளித்தனர். அவர்கள் யாரென்பதை தொடர்ந்து படித்து பாருங்கள்.
நாக சைதன்யா மற்றும் சமந்தா
பல ஆண்டு டேட்டிங்கிற்கு பிறகு 2017 ஆம் ஆண்டில் நாக சைதன்யாவும், சமந்தாவும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 2021 ஆம் ஆண்டில் இவர்கள் இருவரும் தாங்கள் பிரியப் போவதாக திடீரென்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு அதிர்ச்சியளித்தனர். இதற்கு காரணமாக அவர்கள் தங்களுக்குள் நிறைய தவறான புரிதல்கள் இருப்பதாக கூறினர். இதில் நடிகர் நாக சைதன்யாவுக்கு சமீபத்தில் தான் நடிகை சோபிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி
இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் 2024 ஆம் ஆண்டின் மே 13 ஆம் தேதி இரவு தனது மனைவியான பாடகி சைந்தவியுடன் விவாகரத்து நடக்கப் போவதை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்த இவர்களுக்கு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டில் தான் அன்வி என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்தின் மூலம் இருவரும் பிரிந்து செல்வதாக ஜிவி பிரகாஷ் கூறினார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இத்தம்பதிகள் 2022 ஜனவரியில் இருந்தே பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்து வாழ்ந்து வந்தனர். மேலும் அதை சமூக வலைத்தள பக்கத்திலும் தனுஷ் தெரிவித்திருந்தார். இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன் தான் விவாகரத்திற்கு விண்ணப்பித்தனர். இத்தம்பதியினர் 18 ஆண்டுகளுக்கு பின் தங்களின் பிரிவினையை தேர்ந்தெடுத்துள்ளனர்.



Click it and Unblock the Notifications











