Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
நீங்க புதுசா கல்யாணம் ஆன தம்பதிகளா? அப்ப உங்க பாலியல் வாழ்க்கையில் இந்த பிரச்சனைகள் வரலாமாம்!
புதிதாக திருமணமான தம்பதிகள் தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று அனைவரும் நினைக்கலாம். ஆனால், அது முற்றிலும் தவறானது. ஆம், புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு பாலியல் வாழ்க்கையை பற்றிய அனுபவங்கள் மற்றும் விஷயங்கள் தெரியாமல் இருக்கலாம்.
புதிதாக திருமணமான பல தம்பதிகள் தாம்பத்திய உறவில் மற்றும் உடல்ரீதியான நெருக்கத்தில் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இது ஆண், பெண் இருவருக்கும் ஏற்படலாம். பாலியல் வாழ்க்கையை பற்றிய ஓர் பயம் அவர்களுக்குள் இருக்கலாம். இது தம்பதிகளுக்குள் மன கசப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்தலாம்.

உணர்ச்சி மற்றும் உடல்ரீதியான இணைப்புடன் தம்பதிகள் இணைந்திருக்கும்போது, உடலுறவை தவிர்ப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உடலுறவு முக்கிய பங்கை வகிக்கிறது. உங்கள் பாலியல் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை முதலில் அடையாளம் கண்டு அவற்றை தீர்க்க வேண்டும்.
புதிதாக திருமணமான தம்பதிகள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சினைகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
அடிக்கடி உடலுறவு கொள்வது
புதிதாக திருமணமானவர்கள், தங்கள் பாலியல் வாழ்க்கையை அப்போதுதான தொடங்குவார்கள். அதனால், பாலியல் ஆசையின் தூண்டுதலால், அடிக்கடி உடலுறவு கொள்ளலாம். திருமணத்திற்குப் பிறகு, அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உடலுறவு கொள்ளவோ அல்லது பாலியல்ரீதியாக நெருக்கமாக இருக்கவோ விரும்புவார்கள்.
இருப்பினும், ஒரு கட்டத்திற்குப் பிறகு இருவரில் ஒருவருக்கு உடலுறவில் சலிப்பு ஏற்படலாம். மற்றொருவர் பாலியல் ரீதியாக அதிக தூண்டுதலோடு இருக்கலாம். இது சிறிது காலத்தில் தம்பதிகளுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். ஆதலால், தம்பதிகள் உடல் நெருக்கத்தோடு, உணர்வு ரீதியாகவும் இருவரும் நெருக்கமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான தொடர்பு இல்லாமை
பெரும்பாலான புதிய தம்பதிகள் ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்ளாமல் தவறவிடுகிறார்கள். அவர்களின் பாலியல் தேவைகள் மற்றும் அவர்கள் விரும்புவதைப் பற்றி பேசத் தயங்குகிறார்கள். பாலியல் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன தேவை மற்றும் ஆசை இருக்கிறது என்பது பற்றி நீங்கள் வெளிப்படையாக உங்கள் துணையிடம் பேச வேண்டும்.
ஆரோக்கியமான தகவல் தொடர்பு கொள்ளுங்கள். இது ஒருவரை பற்றி இன்னொருவர் புரிந்துகொள்ள வழி வகுக்கும். தாம்பத்திய வாழ்க்கையில், ஒரு துணையின் தேவையை இன்னொரு துணை பூர்த்தி செய்ய வேண்டும்.
கட்டுக்கதைகளை நம்புவது
பாலியல் உறவு குறித்து பல கதைகள் உலா வருகின்றன. அவற்றை எல்லாம் புதுமண தம்பதிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பொதுவாக முதலிரவில் உடலுறவுக்கு பிறகு இரத்தப்போக்கு சிறிதாக இருக்கும். ஒரு பெண் முதல்முறையாக உடலுறவு கொள்ளும்போது, அவளின் பிறப்புறுப்பு பகுதியில் உள்ள ஜவ்வு கிழிந்து இரத்தம் வெளியேறலாம்.
ஆனால், அது உடலுறவு கொள்ளும்போது தான், அந்த ஜவ்வு கிழிய வேண்டும் என்பதில்லை. உடற்பயிற்சி செய்யும்போது, விளையாடும்போதோ என எப்போதும் வேண்டுமானலும் கிழிந்து இரத்தம் வெளியேறலாம். முதலிரவில் இரத்தம் வெளியேறினால்தான், அவள் கன்னித்தன்மை உடையவள் என்பது கட்டுக்கதை. அறிவியல் ரீதியான விஷயங்களை ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
இல்லையெனில், திருமண உறவில் பிரச்சினைகள் எழலாம். அதேபோல, ஒரு ஆணால் உடலுறவில் பெண்ணை திருப்திப்படுத்த முடியாவிட்டால், அவரின் ஆண்மை தன்மை கேள்விக்குட்படுத்தப்படும். அதற்கு, பயம் அல்லது சில மருத்துவ நிலைகள் கூட காரணமாக இருக்கலாம். ஆதலால், தம்பதிகள் இருவரும் சரியான புரிதலோடு வாழ்க்கையை வாழ வேண்டும்.
நேரமின்மை பிரச்சனை
தேனிலவு காலம் முடிந்தவுடன் தம்பதிகள் தங்கள் வழக்கமான வாழ்க்கைக்குள் நுழைய வேண்டியிருக்கும். அலுவலக வேலைகள், வீட்டு வேலைகள், இதற்கிடையில் உறவினர்களின் வருகை மற்றும் இவர்களின் பயணம் என கடமைகள் மற்றும் பொறுப்புகளை தூக்கி சுமக்க நேரிடலாம். இதனால், தம்பதிகள் ஒருவருக்கொருவர் நேரத்தை ஒன்றாக செலவிட முடியாது. இதனால், தம்பதிகளுக்குள் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஆர்வம் குறைவது
ஒரு ஆணுக்கு முன்கூட்டியே விந்து வெளியேறினால் அல்லது பெண் முதல் சில முறை உடலுறவில் ஈடுபடத் தவறினால், தம்பதியினர் தங்கள் பாலியல் வாழ்க்கை சந்தேகத்திற்கு உரியவர்கள் என்று கருதுகின்றனர். முதலில் சில நேரங்களில் ஆர்வம் இல்லாமல், அது மிகவும் மந்தமானதாக மாறலாம். திருமணமான புதிதில் சிலருக்கு ஆர்வம் இல்லாமல் இருப்பது பொதுவானது.
சில தம்பதிகள் ஒரு நெருக்கமான சூழ்நிலைக்கு வருவதைத் தவிர்க்கிறார்கள். இந்த நேரத்தில், சிறந்த செக்ஸ் என்பது நேரம் மற்றும் முயற்சியின் மூலம் மட்டுமே நிகழ்கிறது என்பதை தம்பதிகள் நினைவில் கொள்ள வேண்டும். செக்ஸ் உங்கள் இருவருக்கும் உள்ள நெருக்கத்தை அன்பை அதிகரிக்கும்.
கருத்தடை பயன்பாடு
புதிதாக திருமணமான தம்பதிகளில் பெரும்பாலானோர் அனுபவமில்லாதவர்களாக இருக்கலாம். சில தம்பதிகள் குழந்தை குறித்து திட்டமிடாமல் இருக்கலாம். ஆதலால், கருத்தடை பயன்பாட்டில் ஆண்கள் காண்டமை பயன்படுத்துகிறார்கள். சில ஆண்களுக்கு ஆணுறையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாது.
அத்தகைய ஆண்கள் 'அந்த' நேரத்தில் சங்கடப்படுகிறார்கள். இதனால் அவர்கள் விறைப்புத்தன்மையை இழக்க நேரிடும். இந்த நிலைமைக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது மனைவிக்கும் தெரியாது. எனவே, இது உங்கள் நெருக்கமான சூழலை வேறுமாதிரி மாற்றலாம்.



Click it and Unblock the Notifications
