Latest Updates
-
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
உங்க கணவன்/மனைவி உங்களுக்கு துரோகம் செய்றாங்கனு சந்தேகப்படுறீங்களா? இத செக் பண்ணுங்க தெரிஞ்சிரும்...!
காதலாக இருந்தாலும் சரி, திருமண உறவாக இருந்தாலும் சரி அதன் அடிப்படையாக இருப்பது நம்பிக்கைதான். துணையில் இருவரில் ஒருவர் ஏமாற்றினாலும் அது உற்வின் மகிழ்ச்சியை சிதைத்துவிடும். தங்கள் துணை தனக்கு துரோகம் செய்கிறார்களோ என்ற சந்தேகமும், அச்சமுமே ஒரு உறவை அழித்துவிடும்.
உங்கள் உள்ளுணர்வை நம்புவது அல்லது உங்கள் துணையின் செயல்பாடுகளில் உள்ள மாற்றங்களை கவனிப்பது உங்கள் துணை உங்களுக்கு துரோகம் செய்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள உதவும். மேலும் சில அறிகுறிகள் இதனை உறுதி செய்யும். இந்த பதிவில் உங்கள் துணை ஏமாற்றுவதை எப்படி கண்டறியலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

போனில் மாற்றங்கள்
பேசும் பழக்கங்களில் காணக்கூடிய மாற்றங்கள் துரோகத்தை வெளிப்படையாகக் குறிக்கலாம். உங்கள் துணை தனது ஃபோனைப் பாதுகாக்கும் அல்லது சில விஷயங்களைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்ப்பது அல்லது சில ஆப்களை பாதுகாப்பது போன்றவை நீங்கள் தெரிந்து கொள்ள கூடாத சில ரகசியங்கள் அவர்களிடம் இருப்பதை உணர்த்தலாம்.
காரணமின்றி காணாமல் போவது
நியாயமான காரணங்கள் இல்லாமல் அடிக்கடி தாமதம் அல்லது காணாமல் போவது அல்லது நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது துரோகத்திற்கான சந்தேகங்களைத் தூண்டலாம். அடிக்கடி உங்களை சந்திப்பதைப் புறக்கணிப்பது அல்லது போனை ஆப் செய்து விட்டு காணாமல் போவது தீர்க்கமான அறிகுறியாகும்.
உணர்வுரீதியாக விலகியிருப்பது
உங்கள் துணை அவர்களின் அன்பையும், உணர்வுகளையும் வேறு இடத்தில் காட்டத் தொடங்கும் போது உங்களுடனான நெருக்கம் மற்றும் அன்பு குறைகிறது. உங்கள் துணையின் வாழ்க்கை மற்றும் அனுபவங்களில் ஈடுபாடு குறைவதற்கான அறிகுறிகள் அல்லது உங்கள் மீதான ஆர்வம் குறைவது உணர்ச்சிரீதியான துரோகம் அல்லது வேறொருவர் மீது ஆர்வமிருப்பதைக் குறிக்கலாம்.
தனிப்பட்ட ரகசியங்கள்
தனிப்பட்ட பொருட்கள், பாஸ்வேர்டுகள் அல்லது ஆன்லைன் செயல்பாடுகளில் அதிகரித்த இரகசியம் சந்தேகத்தை எழுப்பலாம். சமூக ஊடக தொடர்புகளை மறைத்தல், அழைப்பு பதிவுகளை அழித்தல் அல்லது குறுஞ்செய்திகளை மறைத்தல் போன்ற செயல்கள் உங்கள் உறவில் மூன்றாம் நபருடனான தொடர்பை மறைப்பதற்கான முயற்சிகளைக் குறிக்கலாம்.
ரகசிய பண பரிவர்த்தனைகள்
கிரெடிட் கார்டுகளில் விவரிக்கப்படாத கட்டணங்கள் அல்லது காரணமே இல்லாமல் அடிக்கடி பணம் எடுப்பது போன்ற பண விஷயங்களில் உள்ள முரண்பாடுகள், உறவுக்கு வெளியே உள்ள ஒருவருடன் பரிசுகள் அல்லது வெளியூர் பயணங்களுக்கு மறைமுகமாகச் செலவு செய்வதைக் குறிக்கலாம்.
தோற்றத்தில் மாற்றம்
வழக்கமான தோற்றம் அல்லது அலங்காரத்தில் திடீர் மாற்றங்கள், குறிப்பாக தனிப்பட்ட தோற்றத்தின் மீது திடீர் அக்கறை அல்லது கவலை, அவர்கள் புதிதாக ஒருவரை ஈர்க்க முயற்சிப்பதைக் குறிக்கலாம். அலமாரிகளில் மாற்றங்கள், சீர்ப்படுத்தும் பழக்கம் அல்லது உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துவது முக்கியமான அறிகுறிகளாகும்.



Click it and Unblock the Notifications

