Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கணவன் மனைவி சண்டை போட்டாலும் உறவு வலுவாக தொடரணுமா? இந்த டிப்ஸை கடைபிடிங்க..!
கணவன் மனைவிக்குள் சண்டை வருவது இயல்புதான்.. அப்படி சண்டைகள் வரும்போது ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகிறார்கள். இது உங்கள் தவறு என்று அவர்கள் இருவருமே வாதிடுகின்றனர். மேலும் இருவருக்கும் இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வருகிறது.
சண்டை பெரிதாகி, இருவருக்குள்ளும் நிரந்தரப் பிரிவினைக்கு வழிவகுக்கிறது. இப்படி சண்டை சச்சரவு ஏற்படும் போது இருவரும் அனுசரித்து செல்ல வேண்டும். ஒருவரின் தவறுகளை அவர்கள் உணர மற்றொருவர் செயல்பட வேண்டும். அது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

1. கனவன் மனைவி இருவரும் தவறு செய்வது இயல்பு. யாரும் தவறு செய்வதிலிருந்து தப்புவதில்லை. ஆனால், தவறு செய்துவிட்டு, தவறு செய்ததை ஒப்புக் கொள்ளாமல், தவறை திரும்பத் திரும்பக் செய்யும்போது, அது அவர்களின் தவறு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை சுட்டிக்காட்டாமல் புரிந்து நடந்துக் கொள்வது நல்லது..
2. கனவன் மனைவி இருவரும் தப்பு செய்ததாக உணர்ந்தால் சண்டை சச்சரவுகள் வராது. ஆனால் எல்லா தவறுகளுக்கும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் சிலரைப் போலல்லாமல், வருத்தங்கள் தெரிவித்துக் கொள்ளுதல், மனிப்பு கோருதல் உங்களின் உறவை வலுவாக்கும்..
3. கணவன் மனைவிக்கு தனிப்பட்ட சுதந்திரம் அவசியம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உரிமைகள் உள்ளன. ஆனால் அதற்கும் வரம்புகள் உண்டு. தனிப்பட்ட சுதந்திரத்தை எல்லை மீறாமல் அனுபவிக்க வேண்டும். உங்கள் துணைக்கு தனிப்பட்ட சுதந்திரம் கொடுங்கள். அப்படி கொடுக்காவிட்டால் இருவருக்கும் இடையே தகராறும், மனக்கசப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
4. கனவனும் மனைவியும் மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டாம். உங்கள் துணையைப் பற்றிய விஷயங்களை ஆழமாக சிந்திக்காமல் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் ஆழமாகப் பார்த்தால், அது ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிடும். அப்போது இருவருக்குள்ளும் மகிழ்ச்சிக்கு இடம் கிடைக்கும். எந்தத் தவறும் செய்யாவிட்டாலும் அது பிழையாகவே பார்க்கப்படும். அதனால் எதையுமே அதிகமாக யோசிக்காமல் அப்படியே விடுவதே சிறப்பு..
5. இருவரும் சேர்ந்து வீட்டு வேலை செய்யும் போது கஷ்டங்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள். நான் வேலையை மட்டும் செய்வேன், வீட்டு வேலைகளை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று மனைவி, கணவன் கூறுவதால் தகராறுகளும் அதிகரித்து வருகின்றன. இருவரும் சேர்ந்து அனைத்து வீட்டு வேலைகளையும் செய்யும் போது பந்தம் வலுவடைகிறது. உறவு அடுத்த கட்டத்திற்கு மேம்படும்..
6. கணவன் மனைவிக்கு திருமணம் ஆன பிறகு, மனைவி கணவனின் பெருமையையும், கணவன் மனைவியின் பெருமையையும் குறைக்க வேண்டும். உன்னை விட எனக்கு அதிகம் தெரியும், உன்னை விட எனக்கு புத்திசாலித்தனம் அதிகம், உன் சம்பளத்தை விட என் மாத சம்பளம் அதிகம், உன் பேச்சை கேட்கவே மாட்டேன், போன்ற விஷயங்கள். நீங்கள் இருவரும் உங்கள் ஈகோவை குறைக்கும் போதுதான் உங்களுக்கிடையில் காதல் வளரும். அதனால் கணவனும் மனைவியும் சண்டைகள வந்தாலும் ஒருவருக்கொருவர் இந்த விஷயங்களை ஃபாலோ செய்தாலே போதுமாம்..



Click it and Unblock the Notifications