Latest Updates
-
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் -
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்!
Friendship Day 2023: உண்மையான நட்பு எப்படி இருக்கணும் தெரியுமா? அப்ப இத படிங்க..
Friendship Day 2023: உங்கள் நண்பர்களை உருவாக்குவது எளிது. ஆனால் அந்த நட்பை நீங்கள் பராமரிப்பது என்பது கஷ்டமான விஷயம் ஆகும். எனவே இந்த நண்பர்கள் தினத்தில் உங்கள் நட்பை நீங்கள் எப்படியெல்லாம் பராமரிக்கலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
ஒரு நல்ல நட்பை வாழ்நாள் முழுவதும் பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. சிலர் நல்ல நட்பு ஏற்பட்ட கொஞ்ச நாட்களில் நட்பை முறித்துக் கொண்டு செல்வது உண்டு. நண்பர்களிடமிருந்து விலகி செல்வது உங்களை பெரிய அளவில் காயப்படுத்தும். எனவே ஒரு நல்ல நட்பை பராமரிப்பது என்பது மிகவும் அவசியம் ஆனது.

அதே நேரத்தில் நீங்கள் வழியில் பார்க்கும் அனைத்து வகையான நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் இருக்க தகுதியானவர்கள் அல்ல. எனவே எந்த நட்பை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க வேண்டும் என்பதிலும் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். எனவே உங்கள் வாழ்க்கையில் உங்கள் நட்பை நீங்கள் எப்படியெல்லாம் பராமரிக்கலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
உங்கள் நண்பர்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்ளுங்கள்
நட்பு என்பது எந்தவொரு வெற்றிகரமான உறவுக்கும் மிகவும் முக்கியமானது. உங்கள் இளமைக் காலத்தில் அதிக நண்பர்களை உருவாக்குவது மற்றும் வைத்திருப்பது எளிதானது. ஏனெனில் உங்கள் பள்ளிகளில், நடனம் பயிலும் இடங்களில் இப்படி நீங்கள் போகும் இடங்களில் எல்லாம் நட்பை உருவாக்க முடியும்.
இருப்பினும் 20-30 வயதைக் கடக்கும் போது நீங்கள் நல்ல நண்பர்களை உருவாக்குவது தடைபடுகிறது. நண்பர்களுடான தொடர்பும் குறையத் தொடங்குகிறது. குடும்பம், வேலை மற்றும் வேலை மாற்றம் இவற்றால் கூடுதல் பொறுப்பை நீங்கள் பெற வேண்டியுள்ளது. இதனால் உங்கள் நண்பர்களை நீங்கள் அதிகம் சந்திக்க முடியாமல் போகலாம்.
இருப்பினும் உங்கள் நட்பை புதிது போல் வைப்பதில் உரையாடல்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. வழக்கமான நிகழ்ச்சிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு உங்கள் நண்பர்களை அழைத்து கொண்டாடுங்கள். நேரம் கிடைக்கும் போது உங்கள் நண்பர்களுடன் பேசுங்கள். இது போன்ற நிலையான தொடர்புகள் உங்கள் நட்பை எப்பொழுதும் புதிது போல் வைத்திருக்கும்.
நேர்மையாக இருங்கள்
எந்தவொரு உறவுக்கும் நேர்மை தான் மிக அடித்தளமாக அமைகிறது. எப்பொழுதும் உறவில் போலியாக நடிக்காதீர்கள். நீங்கள் போலியாக நட்பில் இருக்கும் போது அது உங்கள் இருவருக்கும் இடையே பிரச்சினைகளை உண்டாக்கலாம். எனவே நட்பில் எப்பொழுதும் உண்மையாக நடந்து கொள்ளுங்கள்.
நீங்கள் நேர்மையாக நடந்து கொள்ளும் போது உங்கள் நட்பு சிறப்பாக இருக்கும். உங்களுடன் நேர்மையான நண்பர்கள் இருக்கும் பட்சத்தில் நீங்கள் தவறு செய்யும் போது அவர் தெரியப்படுத்துவார். அதே போல் உங்கள் நண்பர்களிடம் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.
நண்பர்களை உள்ளே அனுமதிக்க கற்றுக் கொள்ளுங்கள்
நேர்மையைப் போலவே உங்கள் நட்பு ஆழமாக வளர நீங்கள் மற்றவர்களை நம்ப வேண்டியது அவசியம் ஆகிறது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அதிக நல்ல நண்பர்களை வைத்திருக்க வேண்டும். அவர்களிடம் உங்கள் நம்பிக்கை, கனவுகள் மற்றும் போராட்டங்கள் குறித்து நீங்கள் எடுத்துக் கூறலாம்.
நீங்கள் உங்கள் ரகசியங்கள் அனைத்தையும் எல்லாரிடமும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் உங்கள் நண்பர்களிடம் நீங்கள் வெளிப்படையாக இருப்பது, அவர்கள் உங்களிடம் வெளிப்படையாக இருக்க தூண்டும். இதன் மூலம் அவர்களிடத்து நீங்கள் ஒரு வலுவான பிணைப்பை பெறுவீர்கள்.
உறுதுணையாக இருங்கள்
ஒரு நல்ல நண்பன் எப்பொழுதும் நமக்கு உறுதுணையாக இருப்பான். எனவே உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருப்பது நல்ல நண்பர்களை உருவாக்க வழி வகுக்கிறது. உங்கள் நண்பர்களை அப்படியே ஏற்றுக் கொள்ள பழகுங்கள். உங்கள் நண்பர்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள்.
உங்கள் கடினமான காலங்களில் உங்களுக்கு உதவி செய்யும் நண்பர்கள் ஒரு சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். ஒரு நல்ல நண்பன் கடினமான காலங்களில் உங்களுக்கு ஆதரவளிப்பவராகவும், அதிகமான பாராட்டை கொடுப்பவராகவும், தேவைப்படும் போது உங்களுக்கு ஆதரவளிப்பவராகவும் இருப்பார்.
உங்கள் எதிர்பார்ப்புகளை நிர்வகிக்கவும்
நீங்கள் வயதாகும் போது உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். இதே போலத்தான் உங்கள் நண்பர்களின் வாழ்க்கையும் இருக்கலாம். எனவே அவர்களிடம் இருந்து அதிகமாக எதிர்ப்பார்ப்பதை நிறுத்துங்கள். எனவே அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு குறைந்த அளவு எதிர்ப்பார்ப்பை வைத்திருப்பது நல்லது. நீங்கள் நிர்வகிக்க வேண்டும்.
உங்கள் நண்பர்கள் எப்பொழுதும் எல்லாவற்றையும் விட்டுவிடுவார்கள், எப்போதும் உங்களுக்காக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அவர்களுக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் இருப்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள். எனவே உங்கள் எதிர்ப்பார்ப்பை நிர்வகிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications
