Latest Updates
-
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும்!
தம்பதிகளே! நீங்க இருவரும் படம் பார்க்காமல்... அந்த நேரத்தில் இந்த விஷயங்களை முயற்சி செய்யலாமாம்!
நீங்கள் இருவரும் எப்பொழுதும் செல்லும் உணவகத்தை விட்டு விடுங்கள். புதிய உணவுகளை முயற்சி செய்யக்கூடிய புதிய உணவகத்திற்கு நீங்கள் இருவரும் செல்ல முயற்சிக்கவும்
உங்கள் துணையுடன் ஒரு திரைப்படத்திற்கு செல்வது அல்லது வீட்டில் பார்ப்பது உங்கள் மாலை நேரத்தைக் கழிக்க சிறந்த வழியாகும். ஆனால் அது ஆறுதலாகத் தோன்றினாலும், ஒரு கட்டத்திற்குப் பிறகு அது மிகவும் சலிப்பை ஏற்படுத்தும். ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து படங்களை பார்ப்பது தம்பதிகளின் இணக்கமான நேரத்தை வீணாக்கலாம். ஆம், உங்கள் உறவை சுவாரஸ்யமாகவும், நெருக்கமாகவும் மாற்ற ஒரே இடத்தில் உட்க்கார்ந்து படங்களை பார்ப்பதைத் தவிர்த்து, நீங்கள் பல செயல்களில் ஈடுபடலாம். இது உங்கள் இருவரின் நெருக்கத்தை அதிகரிக்க உதவும். நீங்களும் உங்கள் கூட்டாளியும் எப்போதாவது சேர்ந்திருக்கும் இந்த நேரத்தை மசாலாவாக்க வேண்டும்.

நீங்கள் இருவரும் இதுவரை செய்யாத விஷயங்களைச் செய்து பார்க்க வேண்டும். ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக, உங்கள் துணையுடன் நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால், நீங்கள் விரும்பும் சில பரிந்துரைகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

உங்களுக்கு பிடித்த உணவை சமைக்கவும்
எல்லா நேரத்திலும் உங்களுக்குப் பிடித்த உணவை ஆடர் செய்தோ, உணவகத்திற்கு சென்றோ சாப்பிடுவதற்குப் பதிலாக, அதை உங்கள் துணையுடன் வீட்டில் சமைக்க முயற்சிக்கவும். அருகிலுள்ள கடையில் இருந்து அனைத்து பொருட்களையும் வாங்கி, உங்களுக்கு பிடித்த உணவுகளை ஒன்றாக செய்யத் தொடங்குங்கள். இது உங்கள் துணையுடன் நெருக்கமாக இணைய உதவும் ஒரு சிறந்த வழியாகும் மற்றும் மிகவும் வேடிக்கையான உடற்பயிற்சியாகவும் இது இருக்கலாம்.

ஒன்றாக அருங்காட்சியகத்திற்குச் செல்லுங்கள்
தம்பதிகள் இருவரும் ஒன்றாக இணைந்து அருங்காட்சியகத்திற்கு செல்வது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். கலையின் அழகைப் புரிந்துகொள்வதும், டிகோட் செய்வதும் உங்களையும் உங்கள் துணையையும் மிக நெருக்கமான முறையில் பிணைக்கும். நீங்கள் இருவரும் வரலாற்றை விரும்புபவர்களாக இருந்தால், இது மிகவும் நல்ல யோசனையாக இருக்கலாம். பல விஷயங்களை பற்றி இருவரும் கலந்துரையாடலாம், இது உங்களுக்குள் நெருக்கத்தை அதிகரிக்க உதவும்.

பொழுதுபோக்கு பூங்காவிற்குச் செல்லுங்கள்
ஒரு பொழுதுபோக்கு பூங்காவிற்கு தினமும் செல்வது உங்கள் இருவருக்கும் நல்ல அனுபவமாக இருக்கும். பூங்காவில் உடற்பயிற்சி செய்யலாம், பல விஷயங்களை பார்வையிடலாம் மற்றும் எல்லாரும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை காணும்போது, அது உங்களுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உங்கள் துணையுடன் ஒருவரைப் பார்வையிடுவது உங்களுக்குள்ளேயே இருக்கும் குழந்தையை வெளிக் கொண்டுவரும். மேலும் இது மிகவும் வேடிக்கையான அன்பான அனுபவமாக இருக்கும். நீங்கள் இருவரும் நிச்சயமாக விரும்புவீர்கள்.

பலகை விளையாட்டுகளை விளையாடுங்கள்
சில விளையாட்டுக்கள் தம்பதிகள் இருவரையும் ஒன்றாக நெருக்கமாக இணைக்கிறது. செக்ஸ், நெருக்கம் மற்றும் வேடிக்கை போன்றவற்றில் ஒன்றிரண்டு போர்டு கேம்களை விளையாடுவதன் மூலம் அதில் கவர்ச்சியான திருப்பத்தை கொண்டு வரலாம். நீங்களும் உங்கள் கூட்டாளியும் ஒவ்வொரு முறையும் நீங்கள் வெற்றிபெறும் அல்லது விளையாட்டில் ஒரு புள்ளியை இழக்கும் போதெல்லாம் ஒரு ஸ்டிரிப்பிங் ஷோ கூட செய்யலாம். இது உங்களுக்குள் நெருக்கத்தை அதிகரித்து, உங்கள் பாலியல் வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக மாற்றும்.

ஒரு புதிய உணவகத்திற்கு செல்லவும்
நீங்கள் இருவரும் எப்பொழுதும் செல்லும் உணவகத்தை விட்டு விடுங்கள். புதிய உணவுகளை முயற்சி செய்யக்கூடிய புதிய உணவகத்திற்கு நீங்கள் இருவரும் செல்ல முயற்சிக்கவும். இது உங்கள் இருவருக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். மேலும் உங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் வெளியேறுவதற்கான சிறந்த வழியாகவும் இருக்கும்.

நடைப்பயிற்சி செல்வது
சலிப்பான திரைப்படத்தை பார்த்து நேரத்தை வீணாக்காமல், அதை உபயோகமாக மாற்றுவதற்கான ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வழியை தேர்ந்தெடுங்கள். உங்கள் வீட்டிற்கு வெளியே ஒரு நடைப்பயிற்சி மேற்கொள்வது உங்களுக்கு ஓய்வெடுக்க உதவுவதோடு, உங்கள் இருவருக்கும் ஆரோக்கியமான பிணைப்பு அனுபவமாக இருக்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவும்.



Click it and Unblock the Notifications
