உங்கள் காதலர் அம்பி மாதிரி இருக்காரா? கவலைப்படாதீங்க உங்களுக்கான டிப்ஸ் தான் இது

பண்பான காதலர்கள் கிடைப்பதற்கு எல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களை சரியாக கையாளத் தெரிந்தால் மட்டுமே உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அவர்களைக் கையாளத் தெரியாமல் விட்டு விட்டால்

பண்பான காதலர்கள் கிடைப்பதற்கு எல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களை சரியாக கையாளத் தெரிந்தால் மட்டுமே உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அவர்களைக் கையாளத் தெரியாமல் விட்டு விட்டால் சமூகத்துக்கான மனிதராக மட்டுமே இருப்பார். உங்கள் காதல் வாழ்க்கையோ அல்லது காதலுக்கு பிறகான கல்யாண வாழ்க்கையோ சிறப்பாக அமையாது.

Things to Know about The Polite Lover

உங்கள் காதலர் பண்பானவர் என்றால் பண்பானவர்களுக்கு இருக்கக்கூடிய குணாதிசயங்களை நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் சமூகத்தில் நல்லுறவுடன் பழகும் அவர் காதல் வாழ்க்கையிலும் பழகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும். உதாரணத்திற்கு அந்நியன் படத்தில் வரும் அம்பி மாரி வைத்துக் கொள்ளுங்களேன். நடைமுறை வாழ்க்கையில் ஒத்து வராத சில விசயங்களையும் அவர் செய்வார். எனவே நீங்கள் தான் அவருக்கு சமூகத்தோடு ஒத்துப் போக கற்றுத் தரவேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயவு செய்து அல்லது நன்றி கூறுபவராக இருப்பவர்கள்

தயவு செய்து அல்லது நன்றி கூறுபவராக இருப்பவர்கள்

எந்த ஒரு செயலையும் செய்ய பிறரை அணுகும் போது தயவு செய்து உங்களால் முடியுமா என்று தான் அணுகுவார்கள். அதே சமயத்தில் சிறிய விசயமாக இருந்தாலும் நன்றி கூற மறக்க மாட்டார்கள். அது நன்றி கூறுமளவுக்கு பெரிய விசயமாக இருக்காவிட்டாலும் கூட கட்டாயம் நன்றியை தெரிவிப்பார்கள்.

அனுமதி இன்றி தொடமாட்டார்கள்

அனுமதி இன்றி தொடமாட்டார்கள்

காதலியாக இருந்தாலும் கூட உங்களை தொடுவதற்கு உங்களின் அனுமதியை அவர் பெற விரும்புவார். மற்றவர்களோடு கைக்குலுக்குவதைக் கூட அனுமதியோடு தான் செய்வார். அனுமதியின்றி பிற பாலினத்தை தொடுவதை சங்கடமாக கருதிக் கொள்வார். மற்றவர்களிடம் இப்படி இருப்பது சரிதான். ஆனால் காதலியை தொடுவதற்கு அனுமதி பெறுவதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்.

தவறை ஒப்புக் கொள்வார்கள்

தவறை ஒப்புக் கொள்வார்கள்

தவறை ஒப்புக் கொள்வது என்பது எல்லாருக்கும் கசப்பான சம்பவம் ஆகும். நாம் தவறு செய்துவிட்டோம் என எதிர்தரப்பிற்கு ஆதரப்பூர்வமாக தெரிந்திருக்கும். ஆனாலும் அதை தான் செய்யவில்லை என மூடி மறைப்பதற்காக கூறும் எண்ணற்ற பொய்கள் ஏராளம். ஆனால் உங்கள் காதலரோ தவறை ஒப்புக் கொள்வார். முடிந்த அளவுக்கு தவறை சரிசெய்துக் கொள்வார்.

உங்கள் ரகசியங்களை அவருக்குத் தேவையில்லை

உங்கள் ரகசியங்களை அவருக்குத் தேவையில்லை

ஒருவருடன் பழகும் போது அவரைப் பற்றிய தனிப்பட்ட கேள்விகளை ஒருபோதும் கேக்கக் கூடாது. அது ஒரு நல்ல உறவின் தொடக்கத்திற்கு சரியான அணுகுமுறையாக இருக்காது. ஏனெனில் உங்கள் மீது நம்பிக்கை வந்துவிட்டால் அவர்களது தனிப்பட்ட விஷயங்களை அவர்களாகவே சொல்லி விடுவார்கள். அவர்களாகவே சொல்லவில்லை என்றால் அவர்களது நம்பிக்கையை நீங்கள் பெறவில்லை என்று அர்த்தம்.

தெரியாதாதை ஒப்புக் கொள்வார்கள்

தெரியாதாதை ஒப்புக் கொள்வார்கள்

நமக்கு பல விசயங்கள் தெரியாது. காதலியை கவர தெரியாத விசயத்தை தெரிந்ததாகக் காட்டிக் கொள்பவர்கள் ஏராளாம். அப்படிக் காட்டிக் கொண்டு உடலையும் காதலையும் புண்ணாக்கிக் கொண்டவர்கள் ஏராளம். ஆனால் பண்பானவரகளுக்கு தெரியாத விசயத்தை ஒப்புக் கொள்வார்கள். உதாரணமாக பைக் ஓட்டத் தெரியாது என்றால் ஓட்டத் தெரியாது என ஒத்துக் கொள்வார். இதனால் ஏற்படுகிற சண்டைகளுக்காக பயந்து தெரியும் என ஒத்துக் கொள்ள மாட்டார்.

உங்கள் விருப்பத்திற்கு தகுந்த இடமளிப்பார்.

உங்கள் விருப்பத்திற்கு தகுந்த இடமளிப்பார்.

பண்பானவர்கள் எப்போதும் தங்களைச் சார்ந்தவர்களை கவனித்துக் கொண்டே இருப்பார். எப்போதாவது அவர் சங்கடங்களை உணரும் போது உடனடியாக அதை சரி செய்வார். உதாரணத்திற்கு அவருடைய காதலி சேலையில் வருவதை அசௌகரியமாக கருதினால் அவரை அதீத தூரம் நடக்க வைக்க விடமாட்டார். காதலிக்குத் தேவையான அனைத்தும் உட்கார்ந்த இடத்திலேயே வரும்.

இப்படி தான் பேச வேண்டும்

இப்படி தான் பேச வேண்டும்

பலருக்கு எங்கு எவ்வளவு சப்தத்தில் பேசுவது என்பதே தெரியாது. பேருந்தில் பயணிக்கும் போது நிச்சயம் ஒரு ஒலிப்பெருக்கி வாயனை சந்திக்கலாம். இவன் கத்தும் கத்தல் மறுமுனையில் இருப்பவனுக்கு நேரிடையாகவே கேட்கும். இது ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தும். பண்பானவர்கள் எங்கு எப்படி எவ்வளவு சப்தத்தில் பேச வேண்டும் எனத் தெரிந்து பேசுவார்.

இவரா அதுக்கு சரிபட்டு வரமாட்டார்

இவரா அதுக்கு சரிபட்டு வரமாட்டார்

இவர் மீது கிசுகிசு புகார் யாராவது சொன்னால் அவனா அவன்லாம் அந்த விசயத்துக்கு சரிபட்டு வரமாட்டார். அந்த விசயத்தைக் கேட்க கூட எதிர்தரப்பினர் விரும்பமாட்டார். ஏனெனில் அக்மார்க் முத்திரை குத்திய தங்கம்.

கிசுகிசு

கிசுகிசு

மற்றவர்களைப் பற்றி புரணி பேசுவதை விட கேட்பது பேரானந்தத்தை பலருக்கு தருகிறது. புரணி பேசுவதற்கென்றே அட்டவணை போட்டு பேசும் கூட்டம் தமிழகத்தில் அதிகம் உள்ளது. ஆனால் பிறரைப் பற்றி தனக்கு தேவை இல்லாத விசயம் எனக் கருதினால் ஒன்று சொல்பவரை தடுத்து நிறுத்துவார். அல்லது பேசுவதைக் காதில் போட்டுக் கொள்ள மாட்டார்.

கேட்பார் பேசமாட்டார்

கேட்பார் பேசமாட்டார்

பொதுவாக இவர்கள் பிறர் சொல்வதைக் கேட்பார். இடையில் புகுந்து தனது ஆளுமையை நிரூபிப்பார். பேசுவதைக் குறைத்து கவனிப்பதில் அதீத ஆர்வம் காட்டுவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, July 30, 2019, 12:00 [IST]
Desktop Bottom Promotion