For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கன்னித்தன்மையை இழப்பது என்றால் உண்மையில் என்ன?அதன்பின் என்னென்ன உளவியல் மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

உங்கள் கன்னித்தன்மையை இழப்பதைச் சுற்றி காலம் காலமாக பெரிய பரபரப்பும், பல கட்டுக்கதைகளும் நிறைந்துள்ளது, சில நேரங்களில் அது உங்கள் புத்திசாலித்தனத்தையும் தாண்டி உங்களை பயமுறுத்துகிறது.

|

உங்கள் கன்னித்தன்மையை இழப்பதைச் சுற்றி காலம் காலமாக பெரிய பரபரப்பும், பல கட்டுக்கதைகளும் நிறைந்துள்ளது, சில நேரங்களில் அது உங்கள் புத்திசாலித்தனத்தையும் தாண்டி உங்களை பயமுறுத்துகிறது. உங்கள் கன்னித்தன்மையை இழப்பது என்பது பாலியல் ஊடுருவலுக்கு முன் யோனிக்குள் இருக்கும் கன்னித்திரை உடைவதைத் தவிர வேறில்லை.

Things That Happens to You When You Lose Your Virginity in Tamil

பல பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை இழக்கும் போது கசப்பான அனுபவத்தை எதிர்கொள்கிறார்கள், ஏனெனில் அவர்களின் மனம் தங்கள் சொந்த உடல்களைப் பற்றிய சந்தேகங்களால் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகிறது. உடல் மாற்றங்களைத் தவிர, கன்னித்தன்மையை இழந்த பிறகு ஒருவர் உண்மையில் உட்புறமாகவும் மாறுகிறாரா? இந்த பதிவில் அதற்கான பதிலை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மையில் எதுவும் மாறாது

உண்மையில் எதுவும் மாறாது

உண்மையைச் சொல்லப்போனால், நீங்கள் உங்கள் கன்னித்தன்மையை இழந்த பிறகு உண்மையில் எதுவும் மாறாது. உங்கள் கன்னித்திரை என்றழைக்கப்படும் ஹைமன் இனி அப்படியே இருக்காது மற்றும் உங்கள் உடல் ஹார்மோன்களில் மாற்றம் இருக்கலாம் ஆனால் நீங்கள் உண்மையில் மாற மாட்டீர்கள். நீங்கள் முதல் முறையாக பாலியல் ஊடுருவலைப் பெற்றிருப்பதால் உங்கள் மனம் ஒரு சச்சரவை சந்திக்கிறது.

புதுவித உணர்வுகளை வளர்த்துக் கொள்ளலாம்

புதுவித உணர்வுகளை வளர்த்துக் கொள்ளலாம்

உடலுறவுக்குப் பிறகு மாறும் பிரபலமான விஷயங்களில் ஒன்று உணர்வுகளின் வளர்ச்சி. ஆய்வுகளின்படி, பெரும்பாலான மக்கள் முதல் முறையாக உடலுறவு கொண்ட நபர் மீது உணர்வுகளை உருவாக்குகிறார்கள். இந்த உணர்வுகள் எப்போதும் இருவரிடமும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவை நிரந்தரமானவை அல்ல அவை தற்காலிகமானவை மட்டுமே.

MOST READ: எளிதில் கிடைக்கும் இந்த விஷேச உணவுகள் உங்க ஆணுறுப்பை சிறப்பாக செயல்பட வைக்குமாம் தெரியுமா?

உடலுறவுக்குப் பிறகு ஒருவருக்கு ஏன் உணர்வுகள் உருவாகின்றன?

உடலுறவுக்குப் பிறகு ஒருவருக்கு ஏன் உணர்வுகள் உருவாகின்றன?

உடலுறவு என்பது இரண்டு நபர்களிடையே ஏற்படும் மிகவும் நெருக்கமான செயலாகும், இது அவர்களுக்கு இடையே வலுவான உணர்வுகளைத் தூண்டும். மக்கள் உடலுறவு கொள்ளும்போது, ​​ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோன் உடலில் வெளியிடப்படுகிறது, இது காதல், பாசம் மற்றும் ஆசை போன்ற உணர்ச்சிகளை அதிகரிக்கிறது. எனவே உடலுறவுக்குப் பிறகு உணர்வுகளை வளர்ப்பது மிகவும் பொதுவானது. ஆனால் எல்லோரும் ஒரே மாதிரியாக உணரவில்லை, இது பொதுவாக காதல் இல்லாத உறவுகளில் நடக்கும், அங்கு காதல் உறவின் ஒரு பகுதியாக இல்லை.

உங்கள் தோற்றம் மாறாது

உங்கள் தோற்றம் மாறாது

நீங்கள் உடலுறவு கொண்ட பிறகு, உங்கள் உடல் அதன் தோற்றத்தை மாற்றாது. நீங்கள் முன்னர் இருந்த மாதிரிதான் இருப்பீர்கள். நீங்கள் உங்கள் கன்னித்தன்மையை இழந்துவிட்டீர்களா இல்லையா என்பதை மற்றவர்கள் உணர வாய்ப்பில்லை.

உங்கள் மனநிலை மாற்றமடையும்

உங்கள் மனநிலை மாற்றமடையும்

நீங்கள் உடலுறவு கொள்ளும்போது, உடலுறவில் வரும் உணர்ச்சிப்பெருக்கை அனுமதிக்க நீங்கள் மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் உங்களைக் குழப்பக்கூடிய உணர்ச்சிகளின் எழுச்சியை நீங்கள் அனுபவிப்பீர்கள், ஆனால் இறுதியில் சிறிது நேரத்தில் உங்களை முழுமையாகக் காண்பீர்கள். வேறு சிலர் மனரீதியாகத் தயாராகும் முன்பே உடலுறவு கொள்கிறார்கள், மேலும் சரியான அன்பும் ஆதரவும் இல்லாமல் தனிப்பட்ட முறையில் ஒத்துழைப்பது கடினமாக இருக்கலாம்.

MOST READ: இந்த 6 ராசிக்காரங்களுக்கு நவராத்திரியில் துர்கா தேவியின் பூரண அருளால் செல்வ மழை பொழியப்போகுதாம்...!

உறவு கொண்ட நபருடன் இருக்க வேண்டிய கட்டாயத்தை நீங்கள் உணரலாம்

உறவு கொண்ட நபருடன் இருக்க வேண்டிய கட்டாயத்தை நீங்கள் உணரலாம்

உடலுறவைச் சுற்றி வலுவான நம்பிக்கைகள் இருந்தபோதிலும், நீங்கள் உங்கள் கன்னித்தன்மையை இழந்த நபரை விட்டு வெளியேற விரும்பினால் அது உங்களுடைய முடிவாக இருக்க வேண்டும். நீங்கள் அவருடன் உடலுறவு கொண்டதால் அவருடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடாது. அந்த நபருக்கு நீங்கள் கட்டுப்படக்கூடாது. உடலுறவு என்பது எந்த இருவருக்குள்ளும் நடக்கக்கூடிய இயற்கையான செயல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things That Happens to You When You Lose Your Virginity in Tamil

Read to know what happens to you when you lose your virginity.
Desktop Bottom Promotion