For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் முன்னாள் காதலிக்கிட்ட இந்த அறிகுறி இருந்தால் அவங்க திரும்ப உங்ககூட சேர விரும்புறாங்கனு அர்த்தமாம்...!

வெற்றிகரமான காதல் உறவிற்கு மிகப்பெரிய அர்ப்பணிப்பும், நம்பிக்கையும் தேவை. அனைத்து ஜோடிகளாலும் வெற்றிகரமான காதலில் ஈடுபட முடியாது.

|

வெற்றிகரமான காதல் உறவிற்கு மிகப்பெரிய அர்ப்பணிப்பும், நம்பிக்கையும் தேவை. அனைத்து ஜோடிகளாலும் வெற்றிகரமான காதலில் ஈடுபட முடியாது. உங்கள் காதலைக் காப்பாற்ற நீங்கள் அனைத்து விதத்திலும் முயற்சிக்கலாம் ஆனால் விஷயங்கள் உங்கள் கைமீறி போகும்போதோ அல்லது அந்த உறவில் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலோ அந்த உறவை விட்டு வெளியேறுவதுதான் உங்களுக்கு நல்லது.

Signs Your Ex-lover Wants To Get Back With You

தற்போதைய காலக்கட்டத்தில் வெற்றிபெறும் காதல்களை விட தோல்வியில் முடியும் காதல்களே அதிகமாக இருக்கிறது. சின்ன சின்ன காரணங்களுக்காக கூட தற்போது காதல் முறித்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் சில காலங்களுக்குப் பிறகு முறித்துக் கொண்டு சென்றவர்கள் மீண்டும் உங்கள் வாழ்க்கையில் நுழைய முயலலாம். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் அவர்கள் அவ்வாறு திரும்பி வரும்போது உறவை புதுப்பித்துக் கொள்ள விரும்புவதை வெளிப்படையாகக் கூறாமல் சில செயல்கள் மூலம் உணர்த்துவார்கள். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்களிடம் தன்மையாக நடந்து கொள்வார்கள்

உங்களிடம் தன்மையாக நடந்து கொள்வார்கள்

ஒருவரிடம் நன்றாக நடந்து கொள்வதில் பெரிதாக ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் கடுமையாக சண்டையிட்டு பிரிந்தவர்களிடம் மீண்டும் நன்றாக பழகுவது என்பது உண்மையில் ஆச்சரியமான ஒன்றுதான். இதுபோன்ற சூழலில் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதே சிரமமான ஒன்றாகும். உங்கள் முன்னாள் துணை நீங்கள் எதிர்பார்ப்பது போல் மோசமாக நடந்து கொள்ளாமல் உங்களிடம் இனிமையாக நடந்து கொண்டால் அவர்கள் மனதில் மீண்டும் காதலை புதுப்பிக்கும் எண்ணம் இருக்கலாம்.

எப்போதும் தொடர்பில் இருக்க முயலுவது

எப்போதும் தொடர்பில் இருக்க முயலுவது

காதல் முறிவு என்பது நீங்கள் இருவரும் அனைத்து வகையிலும் ஒருவருக்கொருவர் விடுபட விரும்புகிறீர்கள் என்பதன் அர்த்தமாகும். இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் ஒன்றாக இருந்ததை மறக்க விரும்புகிறீர்கள் மேலும் நீங்கள் ஒருவருக்கொருவர் தொடர்ந்து பேச விரும்ப மாட்டீர்கள். ஆனால் உங்கள் முன்னாள் காதலர் உங்களுடன் வேறு வழியில் பேச முயற்சித்தால், உங்களை தொடர்பில் இருக்கும்படி வற்புறுத்தினால், அவர்கள் மனதில் ஏதோ இருக்கிறது. அவர்கள் அதற்குத் தயாராக இருக்கும்போது உங்களுக்கு எண்ணத்தை வெளிப்படுத்துவார்கள்.

சம்பந்தமே இல்லாமல் பேச முயல்வது

சம்பந்தமே இல்லாமல் பேச முயல்வது

அவர்கள் உங்களுடன் பேச விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தொடர்பு கொள்ள சாக்குப்போக்குகளைக் கண்டுபிடிக்க சிரமப்படுகிறார்கள். மற்றவர்களுக்கு அனுப்புவதாக நினைத்து உங்களுக்கு தவறான மெசேஜ்களை அனுப்புவார்கள். அதனை வைத்து உரையாடலைத் தொடங்குவார்கள். இவ்வாறாக அடிக்கடி உங்களுடன் பேச முயன்றால் அவர்கள் உங்களுடனான உறவை மீண்டும் தொடர விரும்புகிறார்கள் என்று அர்த்தம்.

MOST READ: ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியின் சில ஆபத்தான பக்க விளைவுகள்... உஷாரா இருங்க...!

தான் சிங்கிளாக இருப்பதை வெளிப்படுத்துவது

தான் சிங்கிளாக இருப்பதை வெளிப்படுத்துவது

நீங்கள் கேட்காமலேயே அவர்கள் தான் சிங்கிளாக இருப்பதாக அடிக்கடி கூறுவார்கள். அதற்கு அர்த்தம் நீங்கள் அவர்களை அணுகுவதற்கும், மீண்டும் காதலைத் தொடர்வதற்கும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதாகும். மறுபுறம் உங்களை பொறாமை பட வைப்பதற்காகவும் உங்களின் எதிர்வினையை தெரிந்து கொள்ளவும் வேறொரு உறவில் இருப்பதாக பொய் கூறுவார்கள்.

உங்களின் தற்போதைய காதலில் ஆர்வம் செலுத்துவார்கள்

உங்களின் தற்போதைய காதலில் ஆர்வம் செலுத்துவார்கள்

காதல் முறிவிற்கு பிறகு நீங்கள் ஒரு சுதந்திர பறவை. உங்கள் முன்னாள் காதலரும் அப்படித்தான். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒருவருக்கொருவர் என்ன செய்கிறீர்கள் என்பதை விளக்க உங்கள் இருவருக்கும் எந்த வகையிலும் உரிமை இல்லை அதற்கான தேவையும் இல்லை. நீங்கள் மீண்டும் உணர்ச்சிரீதியாக தயாராக இருக்கும்போது புதிய நபர்களைத் தெரிந்துகொண்டு அவர்களை காதலிக்கத் தொடங்கலாம். உங்கள் முன்னாள் துணை உங்கள் டேட்டிங் வாழ்க்கையைப் பற்றி கண்டுபிடிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா இல்லையா, யாரை காதலிக்கிறீர்கள், நீங்கள் சிங்கிளாக இருக்கிறீர்களா அல்லது இல்லையா என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் அவர்கள் மீண்டும் உங்களை காதலிக்க நினைப்பதாக அர்த்தம்.

கடந்த கால தவறுகளை ஒப்புக்கொள்வது

கடந்த கால தவறுகளை ஒப்புக்கொள்வது

காதல் முறிவிற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்று ஈகோ. ஒரு ஜோடி முடிவில்லாத வாதங்களைக் கொண்டிருக்கும்போது, அவர்கள் இருவரும் தவறு என்று ஏற்றுக்கொள்ள விரும்பாதபோது, அவர்களின் காதல் நொறுங்கிவிடும். சில ஜோடிகள் தங்கள் கூட்டாளரிடமிருந்து பிரிந்த பிறகும் கூட தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடந்த காலங்களில் அவர்கள் செய்த தவறுகளை ஏற்றுக் கொண்டு உங்கள் முன்னாள் காதலர் உங்களுடன் பேச முயற்சித்தால், அவர்கள் தவறு செய்ததை உணர அவர்கள் நேரம் எடுத்துக் கொண்டார்கள், நீங்கள் அவர்களை மன்னிக்க விரும்புகிறார்கள் என்று அர்த்தம்.

MOST READ: சிறந்த கணவராக இருக்கும் ராசிகளின் பட்டியல்... உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா?

உடல்ரீதியான தொடர்புகளை அதிகரிப்பது

உடல்ரீதியான தொடர்புகளை அதிகரிப்பது

இது உங்கள் முன்னாள் துணை மீண்டும் உங்களுடன் இணைய விரும்புவதற்கான ஒரு பெரிய அறிகுறியாகும். உடல் மொழி ஒரு நபர் விரும்புவதைப் பற்றி நிறைய கூறுகிறது மற்றும் உடல் தொடர்பு என்பது அதை உறுதிப்படுத்த ஒரு நேரடி வழியாகும். உங்கள் முன்னாள் கூட்டாளியும் உங்களுக்கும் ஒரே சமூக வட்டங்கள் இருந்தால், ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டே இருந்தால், அது உங்களுக்கு பெரிதாகத் தெரியாது. இதுபோன்ற சமூக நிகழ்வுகளில் நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும்போது உங்கள் முன்னாள் காதலர் உடல் தொடர்புகளை அடிக்கடி செய்துகொண்டே இருந்தால், அவர்கள் உங்களைத் திரும்பப் பெற விரும்பும் ஒரு பெரிய அறிகுறியாகும். உங்கள் கையை அல்லது தோள்பட்டையைத் தொடுவது, ஒருவருக்கொருவர் உட்கார்ந்திருக்கும்போது உங்கள் காலைத் தொடுவது, தொடர்ந்து உங்களைப் பார்த்து சிரிப்பது, இவை அனைத்தும் அவர்கள் வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs Your Ex-lover Wants To Get Back With You

Here is the list of clear signs which says your ex-partner wants to get back with you.
Story first published: Saturday, March 20, 2021, 10:51 [IST]
Desktop Bottom Promotion