Latest Updates
-
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...!
இந்த அறிகுறிகள் உங்கள் காதலனிடம் இருந்தால் அவர் 'அந்த' விஷயத்தில் ரொம்ப வீக்காக இருப்பங்களாம்...!
ஒரு பெண் ஆணுடன் பழகத் தொடங்கும்போது அவருடைய உண்மையான தன்மை மற்றும் பழக்கவழக்கங்களை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.
அடுத்தவர் மனதில் இருப்பதை தெரிந்து கொள்வது கடினம் என்று யார் சொன்னது? உண்மையில் நீங்கள் புரிந்து கொள்ள விரும்புபவருடன் போதுமான நேரத்தை செலவழித்தாலே அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். குறிப்பாக பெண்கள் எந்தவொரு முக்கியமான முடிவை எடுக்கும் முன்னும் இதனை செய்ய வேண்டியது அவசியமாகும். ஏனெனில் சிலர் உண்மையில் நல்லவர்களாக இருப்பார்கள், சிலர் நல்லவர் போல நடிக்கும் தீயவர்களாக இருப்பார்கள்.

ஒரு பெண் ஆணுடன் பழகத் தொடங்கும்போது அவருடைய உண்மையான தன்மை மற்றும் பழக்கவழக்கங்களை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அவர்களுடன் சிறிது நேரம் செலவழிப்பதன் மூலம் மட்டுமே அவர் நல்லவரா அல்லது பிளேபாயா அல்லது சீரியல் டேட்டரா என்பதை தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் தப்பான ஒருவருடன் பழகுகிறீர்கள் என்பதை இந்த அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

ரொம்ப நல்லவராக காட்டிக்கொள்வது
கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் உங்கள் ஆண் நண்பர் சரியானவராக காட்டிக் கொண்டால் அவரை நீங்கள் கண்டிப்பாக சந்தேகிக்க வேண்டும். உங்கள் உறவின் முதல் நாளிலிருந்து அவர் மிகவும் பர்பெக்ட்டாக இருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். அவரை உங்களுக்காக சரியான பண்புள்ளவராக்கும் அனைத்து குணங்களையும் நீங்கள் அவரிடம் காணலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவருடன் ஒரு நேரத்தை செலவிட்ட பிறகும், நீங்கள் ஒரு எதிர்மறை குணத்தைக் கூட கண்டுபிடிக்கவில்லை என்றால், அவர் பல பெண்களுடன் பழகி உள்ளார் என்று அர்த்தம்.

சமூக ஊடகங்களில் அதிக செயல்பாடு
சமூக ஊடகங்களில் தீவிரமாக இருப்பது முற்றிலும் இயல்பானது. ஆனால் பெண்கள் விஷயத்தில் மோசமானவர் சமூக ஊடகத்தை பெண்களை கவர்வதற்கு தவறாக பயன்படுத்துவார். சமூக ஊடகத்தில் புதிய பெண்களிடம் பேசிக்கொண்டே இருப்பார். குறிப்பாக அவர்களின் சமூக ஊடகத்தை பார்க்க உங்களை அனுமதிக்க மாட்டார். ஏனெனில் அது அவர்களின் பல ரகசியங்களை வெளிக்கொண்டு வந்துவிடும்.

அவரது நண்பர்களை பற்றி தெரிந்து கொள்ள விடமாட்டார்கள்
உண்மையான காதலில் இருக்கும் ஆண் தனது திட்டங்களையும், எண்ணங்களையும், கருத்துகளையும் எப்போதும் தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வான். அவரது உண்மையான நோக்கங்களை அவரது நண்பர்கள் அறிந்திருக்கலாம். எனவே உங்கள் ஆண் நண்பன் தனது நண்பர்களை அறிய உங்களை அனுமதிக்கவில்லை என்றால் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். நீங்கள் அவருடைய நண்பர்களுடன் நட்பு வைத்தால் அவருடைய உண்மையான நோக்கங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்று அவர் அஞ்சலாம். ஆகையால், அவர் உங்களை ஒருபோதும் தனது நண்பர்களுடன் சந்திக்க அனுமதிக்க மாட்டார், மேலும் அவர்களிடமிருந்து விலகி இருக்கும்படி கேட்பார்.

எப்போதும் தொட்டுப் பேசுவது
பெண்ணாசை உள்ளவர் தனது தேவை என்பதை நன்கு அறிவார். எனவே தனது தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்ய தேவையானவற்றை அவர் செய்வார். வெறும் வேடிக்கைக்காக அவர் உங்களுடன் இருந்தால், அவர் எப்போதும் உங்கள் அருகிலேயே இருப்பார். நீங்கள் கூறும் எந்த விதிமுறைகளையும் பின்பற்ற மாட்டார். " தனிமையான இடத்திற்குச் செல்வோம்", " இன்று இரவு நான் தனியாக இருக்கிறேன்", " உன்னை கவர்ச்சியான உடையில் பார்க்க ஆசைப்படுகிறேன்" என்று அடிக்கடி கூறுவார். இதெல்லாம் அவர்கள் மனதில் இருக்கும் வக்கிரத்தின் வெளிப்பாடாகும்.

பல முன்னாள் உறவுகள்
உங்கள் காதலருக்கு ஏராளமான முன்னாள் உறவுகளின் வரலாறு இருந்தால், அவருடைய உறவுகள் எதுவும் சில மாதங்களுக்கும் மேலாக நீடிக்கவில்லை என்றால், அவர் பெண்கள் விஷயத்தில் மோசமானவர் என்பது உறுதியானதாகும். பெண்களை மாற்றுவது அவர்களுக்கு உடையை மாற்றுவது போன்ற மிகவும் எளிதானதாக இருக்கும்.

ஒருபோதும் போனை தொட விடமாட்டார்
அனைவருமே போனில் பாஸ்வேர்டு வைத்திருப்பது சாதாரணமானதுதான். ஆனால் அது பெரிய ரகசியமாக மாறினாலோ, போன் அல்லது மெசேஜ் வரும்போது ரகசியமாக அதனை பார்த்தால் அது ஒரு எச்சரிக்கை மணியாகும். அவரது தொலைபேசி அழைப்புகளில் கலந்துகொள்ள அல்லது அவரது செய்தியைக் காண அவர் உங்களை அனுமதிக்காமல் இருப்பது அவரது தவறுகள் வெளிவராமல் இருப்பதற்காக கூட இருக்கலாம்.

ஓவராக புகழ்வது
உங்கள் காதலன் உங்களையும், உங்கள் உடல் தோற்றத்தையும் புகழ்வது என்பது நல்லதுதான். ஆனால் அவர் உங்களை எப்போதுமே அதிகமாகப் புகழ்வதைக் கண்டால், குறிப்பாக நீங்கள் அவருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் விரும்பும்போது, அவர் உங்களிடம் உடல்ரீதியான தேவையை எதிர்பார்க்கிறார் என்றறு அர்த்தம். சிலசமயம் உங்களுக்கே நன்றாக இல்லை என்று தெரிந்தாலும் உங்களை ஓவராக புகழ்ந்தால் அவரிடம் இருந்து எஸ்கேப் ஆவதுதான் நல்லது.



Click it and Unblock the Notifications











