Latest Updates
-
சூரியன் அனுஷம் நட்சத்திரத்திற்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
செவ்வாய் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
கத்திரிக்காயை இந்த மாதிரி துவையல் செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
வரகரிசியில் இப்படி தக்காளி சாதம் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பர்ப்யூம் அடிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன தெரியுமா? அடுத்தமுறை இந்த தவறை செய்யாதீங்க -
இந்த 5 ராசிக்காரங்க பிரேக் அப் ஆனாலும் Ex-ஐ விடமாட்டாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
திடீர் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமுள்ள 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போகுதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
வாஸ்து படி மாலை நேரத்தில் இந்த செயல்களை செய்வது உங்கள் வீட்டின் அதிர்ஷ்டத்தை வெளியே தள்ளுமாம் - ஜாக்கிரதை -
18 ஆண்டுகள் கழித்து நிகழும் கேது-செவ்வாய் சேர்க்கை: நாளை முதல் இந்த 5 ராசிக்காரங்க உஷார்..
இந்த அறிகுறிகள் இருக்கும் ஆண்கள் உங்களை பயன்படுத்திக்க மட்டும்தான் நினைப்பாங்களாம்... ஜாக்கிரதையா இருங்க...!
நம்புவதற்கு கடினமானாக இருந்தாலும் இங்கு சில ஆண்கள் பெண்களை தங்கள் வலையில் வீழ்த்துவதையோ அல்லது ஏமாற்றுவதையோ தங்களின் சாதனைகளாக நினைக்கிறார்கள்.
நம்புவதற்கு கடினமானாக இருந்தாலும் இங்கு சில ஆண்கள் பெண்களை தங்கள் வலையில் வீழ்த்துவதையோ அல்லது ஏமாற்றுவதையோ தங்களின் சாதனைகளாக நினைக்கிறார்கள். அவர்கள் புத்திசாலித்தனமாகவும், நகைச்சுவையாகவும் பெண்களை எளிதில் வீழ்த்தும் அளவிற்கு கவர்ச்சிகரமானவர்களாகவும் இருக்கிறார்கள், ஆனால் ஒருபோதும் அவர்கள் உண்மையாக காதலிக்க மாட்டார்கள்.

இந்தவகை ஆண்களை பெண்கள் அறவே தங்கள் வாழ்க்கையில் இருந்து அகற்ற வேண்டியது அவசியம். இவர்களை வாழ்க்கையில் சந்திக்காமலே இருந்தால் அது கூடுதல் அதிர்ஷ்டம். இந்த வகை ஆண்களை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் பெண்களை தங்கள் வெற்றிக்கோப்பையாக மட்டுமே நினைக்கும் ஆண்களின் அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

சரியான நேரத்தில் பின்வாங்குவார்கள்
இது போன்ற ஆண்கள் பெண்களின் வகைகளை அடையாளம் காண்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். நீங்கள் அவர்கள் வலையில் வீழத்தொடங்கிவிட்டீர்கள் என்று அவர்கள் உணர்ந்தால், அவர்களுடன் வெளியே செல்ல நீங்கள் இன்னும் கொஞ்சம் தயங்குகிறீர்கள் என்றால், அவர்கள் திரும்பிச் சென்று விலகிச் செல்வார்கள். இது நீங்கள் மேலும் ஆவலுடன் இருப்பீர்கள் என்று அவர்கள் அறிந்திருப்பதால் மட்டுமே, நீங்கள் நிச்சயமாக அவர்களை அணுகுவீர்கள் என்று அவர்கள் நன்கு அறிவார்கள்.

காதலில் இல்லாததுபோல காட்டிக்கொள்வது
இந்த வகை ஆண்கள் தங்கள் உறவு நிலை குறித்து மிகவும் வெளிப்படையானவர்கள். அவர்கள் ஒருபோதும் தங்களை ஒரு பிரத்யேக உறவில் இருப்பதாக முத்திரை குத்த மாட்டார்கள், ஆனால் அவ்வாறு நினைத்ததற்காக உங்களை குற்ற உணர்வடையச் செய்வார்கள். உண்மை என்னவென்றால், அவர்களின் செயல்களும் சொற்களும் அவர் ஒரு உறவுக்கு தயாராக இருப்பதாக உண்மையிலேயே தெரிவிக்கின்றன, ஆனால் அவர்கள் எப்போதும் காதல் முத்திரை குத்தப்படுவதை தவிர்ப்பார்கள்.

தொடர்பு கொள்ள கடினமாக இருப்பது
உங்களுக்கு அவர் தேவைப்படும்போது, அவரது தொலைபேசி ஒலித்துக் கொண்டே இருக்கும். அவசர காலங்களில் அழைப்புகள் அல்லது மெசேஜ் எதுவும் செயல்படவில்லை என்பதால் அவரைப் பிடிப்பது மிகவும் கடினம் என்பதை நீங்கள் காண்பீர்கள். அவர் உங்களுடன் இல்லாதபோது, அல்லது உங்கள் தொலைபேசியை எடுக்காதபோது அவர் மற்ற பெண்களைப் கவரும் முயற்சியில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தனிப்பட்ட ரகசியங்களை வைத்திருப்பது
இந்த ஆண்கள் உங்களை தங்கள் வழிகளை பயன்படுத்தி கவர்ந்திழுக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் நெருங்கிய வாழ்க்கை விவரங்களைப் பற்றி மூடிமறைக்க விரும்புவார்கள். அத்தகைய ஆண்கள் உங்களை தங்கள் வாழ்க்கையில் ஆழமாக அனுமதிக்க பயப்படுகிறார்கள், எனவே, அவர்கள் கவனமாக செயல்படுவார்கள், உங்களைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் வெளிப்படையாக இருக்க விரும்பாததால், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைப் பற்றி உங்களுக்கு குறைவாகவோ அல்லது தெரியாமலோ இருக்கலாம்.

அழகான தருணங்களை மட்டும் பகிர்ந்து கொள்வது
சூழல் குழப்பமாக மாறும்போது இவர்கள் அந்த இடத்தில் இருக்க மாட்டார்கள். இந்த வகை ஆண்கள் அமைதியான, அழகான, எளிதில் தான் சொல்வதை நம்பக்கூடிய பெண்களை விரும்புவார்கள். உணர்ச்சிகரமான அல்லது மோசமான சூழல் ஒன்றைப் பற்றி அவர்களிடம் பேசும்போது அங்கிருந்து நழுவி விடுவார்கள்.

அனைத்தையும் திட்டமிட்டு செய்வது
அவர்கள் கவனமாக, முறையாக மற்றும் ஒழுங்கமைக்கப்பட்டவர்கள். அவர்கள் கவனக் குறைவாக நீங்கள் ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள், ஏனென்றால் மற்ற எல்லா பெண்களின் தகவல்களையும் அவர்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் எந்த உணர்ச்சிகளை வெளியே கூற வேண்டும், எதை மறைக்க வேண்டும் என்று துல்லியமாக கணக்கிட்டு வைத்திருப்பார்கள். அவர்கள் தங்கள் உண்மையான குணத்தை மறைப்பதில் மிகவும் புத்திசாலிகள்.

வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவார்கள்
அவர்களின் அழகான வார்த்தைகள்தான் நீங்கள் அவர்களிடம் மயங்குவதற்கு முதல் காரணமாக இருக்கும். ஒவ்வொரு பெண்ணையும் வகைப்படுத்தவும், கவரவும் தங்களுக்கென ஒரு வார்த்தை தொகுப்பையே அவர்கள் வைத்திருப்பார்கள். இவர்களை விட்டு பிரிந்தால் உங்களால் வாழ முடியாது என்று உங்களை நினைக்க வைக்க அனைத்தையும் செய்வார்கள். அதேசமயம் உங்களை விலகி செல்லவும் அனுமதிக்க மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications
