Just In
- 7 min ago
உங்களுக்கு வயசாகாம எப்பவும் இளமையா ஜொலிக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 17 min ago
ராசிப்படி கிருஷ்ணருக்கு எந்த பொருளை படைத்தால், அவரின் முழு அருள் கிடைக்கும் தெரியுமா?
- 37 min ago
உங்கள் மூட்டுகளில் இந்த பிரச்சினை இருக்கா? அப்ப உங்க இதயம் ஆபத்தில் இருக்குனு அர்த்தம்... ஜாக்கிரதை!
- 1 hr ago
இந்த 5 ராசிக்காரங்க எந்த உறவிலும் கடைசி வர உறுதியா இருக்க மாட்டாங்களாம்... ஏன் தெரியுமா?
Don't Miss
- News
செஸ் ஒலிம்பியாட் செலவு கணக்கை பொதுவில் வைக்கிறோம்.. அதிமுகவுக்கு அமைச்சர் மெய்யநாதன் சவால்!
- Sports
இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை எதற்காக தடை.. பல முறை வந்த எச்சரிக்கை.. முழு விவரம் இதோ!
- Finance
8 நிமிடங்களில் தேவையான சேவை.. கொரோனாவினால் தோன்றிய புதிய வணிகம்.. அசத்தும் கேரளா மாணவன்!
- Technology
அடேங்கப்பா.. ஹை-குவாலிட்டி டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் Motorola எட்ஜ் 30 ஃபியூஷன்.!
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Movies
ராக்கெட்டா போகும்னு பார்த்தா.. எல்லாமே புஸ்வாணமா ஆகிடுச்சே.. கால் அழகியை கலாய்த்த காம்பெட்டிட்டர்!
- Automobiles
ஹூண்டாய் டுஸான் காரை வாங்கலாமா? வேண்டாமா? இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் படிச்சு பாருங்க...
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
நீங்க இத பண்ணாமலே உங்க கணவன் அல்லது மனைவி கூட நெருக்கமா இருக்கலாமாம் தெரியுமா?
நெருக்கம் என்பது ஒரு ஆழமான மற்றும் பாசமான உணர்வு. இது ஒரு நபருடனான இணைப்பு மற்றும் நெருக்கத்தை வரையறுக்கிறது. இது இரண்டு முக்கிய நோக்கங்களுக்கு உதவுகிறது. அவை, பாலியல் ஆசைக்கான தூண்டுதல் மற்றும் நிறைவான மற்றும் ஆரோக்கியமான உறவைப் பேணுதல். ஒரு நபர் தனது துணை, குடும்பம் அல்லது நண்பர்களுடன் நெருக்கமான உறவை வைத்திருக்க முடியும். தம்பதிகளுக்கு இடையிலான நெருக்கம் பெரும்பாலும் பாலியல் உறவை உள்ளடக்கியதாக உள்ளது. உடலுறவோடு அல்லது உடலுறவு இல்லாமலோ உங்கள் துணையுடன் நெருக்கமாக இருப்பது, உறவின் தரத்தை மேம்படுத்துவதற்கும் தினசரி மன அழுத்தத்தைத் தீர்ப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.
இது பாலியல் உறவுகளில் அவர்களின் திருப்தியுடன், தம்பதிகளின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கிய நிலையை மேம்படுத்துகிறது. இருப்பினும், உடலுறவுப் பகுதியை நாம் தவிர்த்துவிட்டால், தம்பதிகள் உடலுறவு இல்லாமல் கூட ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்க முடியும். இன்னும் ஆழமான தொடர்பை வளர்த்து, ஒருவருக்கொருவர் இருப்பதை அனுபவிக்க முடியும். உடலுறவு இல்லாமல் உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க உதவும் சில வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

ஒருவருக்கொருவர் பாராட்டுங்கள்
பாராட்டுக்களை யார்தான் விரும்ப மாட்டார்கள். ஒவ்வொருவரும் ஒரு உண்மையான பாராட்டு தருணத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார்கள். உங்கள் துணையைப் பாராட்டுவது உங்கள் உறவில் நல்ல வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டாட உதவுகிறது. இது உங்கள் துணையை நீங்கள் அதிகம் மதிக்கிறீர்கள் மற்றும் அவர்கள் மீது கவனம் செலுத்துகிறீர்கள் என்பதை காட்டும்.

துணையின் பேச்சைக் கேட்பது
உங்கள் துணையின் பேச்சைக் கேட்பது, அவர்களுக்கான முக்கியத்துவத்தை நீங்கள் அளிக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது. இது நல்ல நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதாகும். ஏனெனில் அவை உங்கள் துணையை நன்கு அறிந்துகொள்ளவும், அவரை அல்லது அவளைப் பற்றிய நெருக்கமான புரிதலைப் பெறவும் உதவுகின்றன. இது அவர்கள் மீதான உங்கள் அன்பு, மரியாதை மற்றும் அக்கறையை வெளிப்படுத்தும்.

ஒருவருக்கொருவர் மரியாதையுடன் இருத்தல்
சில நேரங்களில், உங்கள் துணைக்கு என தனிப்பட்ட நேரமும் தனிப்பட்ட இடமும் தேவைப்படும். அவர்களின் தேவைகளுக்கு மதிப்பளிப்பது, நீங்கள் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள் என்பதைக் காட்டுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். அவர்களுக்கென்று தனியாகச் சிறிது நேரம் ஒதுக்க அனுமதிப்பது உங்கள் மீதான அன்பை அதிகரிக்க உதவும்.

ஆச்சரியங்களை அளித்தல்
உங்கள் அன்பை வெளிப்படுத்த ஒரு நல்ல மற்றும் எதிர்பாராத வழி எப்போதும் ஆச்சரியமான சர்ப்ரைஸை உங்கள் துணைக்கு வழங்குவது. பூக்களை அனுப்புங்கள் அல்லது உங்கள் துணைக்கு பிடித்த உணவை தயார் செய்து ஆச்சரியப்படுத்துங்கள் அல்லது அவர்களுக்கு பிடித்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். இந்த ஆச்சரியங்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்க உதவும். இது உங்கள் உறவில் நெருக்கத்தை அதிகரிக்கிறது.

நேர்மையாக இருத்தல்
உறவில் தம்பதிகள் இருவரும் நேர்மையாக இருக்க வேண்டும். நம்பிக்கையின்மை மோதல்கள் மற்றும் பாதுகாப்பின்மைக்கு வழிவகுக்கும். உங்கள் உறவில் நேர்மைக்கு முதலிடம் கொடுப்பதன் மூலம், உங்கள் துணையிடம் நீங்கள் மனம் திறந்து அவர்களின் தேவைகள், அச்சங்கள் மற்றும் நம்பிக்கைகளைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு உறவில் நேர்மையாக இருப்பது என்பது முக்கியமாக உங்கள் உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் விரும்பத்தகாததாக இருந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும்.

சிரிக்கப் பழகுங்கள்
நம் புன்னகை மற்றவர்களுக்கும் புன்னகையை வரவழைக்க வேண்டும். நீங்கள் வேண்டுமென்றே ஒருவரைப் பார்த்து சிரிக்கும்போது, இருவரின் மனநிலையையும் உற்சாகத்தையும் உயர்த்தும் நேர்மறையான அதிர்வை நீங்கள் பகிர்ந்து கொள்கிறீர்கள். ஒரு நபர் சிரிக்கும்போது, மூளை செரோடோனின் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இது மனநிலையை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது என்று ஆய்வுகள் கூட கூறுகின்றன.

கைகளைப் பிடித்தல்
கைகளைப் பிடிப்பது சற்று விகாரமாகத் தோன்றலாம். ஆனால் இது கூட்டாளர்களிடையே நெருக்கத்தை அதிகரிக்க உதவும். ஒரு ஆய்வின்படி, கைப்பிடித்தல் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை கவலையின் அளவைக் குறைக்க பயனுள்ள உத்திகளாக கூறுகிறார்கள். உங்கள் துணையுடன் இருப்பதில் நீங்கள் பெருமைப்படுகிறீர்கள் என்பதையும் இது காட்டுகிறது.

காபி/டீ தயாரித்தல்
தேநீர் அல்லது காபி அல்லது உங்கள் துணையின் விருப்பமான பானத்தை தயாரித்து வழங்குவது, அவர்கள் மீது உங்கள் அன்பான சைகையைக் காட்டுகிறது மற்றும் உடல் நெருக்கத்தைப் போலவே மதிப்புமிக்கது. இந்த சைகைகள் உறவை வளர்ப்பதற்கும் ஆரோக்கியமான உறவிற்கு வழிவகுக்கும்.

ஒன்றாக திரைப்படம் பார்ப்பது
வீட்டில் அல்லது தியேட்டரில் இரவு நேரத்தில் திரைப்படம் பார்ப்பது உங்கள் துணையுடன் நேரத்தை செலவிட சிறந்த யோசனையாக இருக்கும். இது இருவரும் நெருக்கமாக ஒன்றாக நேரத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது. படம் பார்த்து முடிந்ததும் நேரடியாக உறங்குவதற்குப் பதிலாக திரையில் சில உறவுக் காட்சிகளைப் பற்றி விவாதிக்க மறக்காதீர்கள்.

மசாஜ்
மசாஜ் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. இது பல குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஒன்றாக மசாஜ் செய்வது அல்லது ஒருவருக்கொருவர் மசாஜ் செய்வது கூட்டாளர்களிடையே நெருக்கத்தையும் ஆழமான தொடர்பையும் ஊக்குவிக்கும். இது தோல் தொடர்பு, மசாஜ் குணப்படுத்தும் விளைவு மற்றும் பங்குதாரர் கூடுதல் கவனம் காரணமாக இருக்கலாம். இது உங்களுக்குள் நெருக்கத்தை அதிகரிக்க உதவும்.