செல்போன் சர்வீஸ் செய்பவர் மீது காதல் - காதலன் கைவிட்டதால் நடிகை யாஷிகா தற்கொலை

தமிழ் நடிகை யாஷிகா காதல் தோல்வியால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அதுபற்றிய முழு விவரங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். யார் அந்த நபர் என்பது பற்றிய முழு விவரங்கள் பற்றிய அறியும் தொகுப்ப

By Mahibala

தமிழில் விமலுடன் இணைந்து மன்னர் வகையறா என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை யாஷிகா. இவர் சில டீவி சீரியல்களிலும் நடித்து வந்தார். தான் காதலித்து லிவ் இன் டுகெதரில் இருந்த நபர் தன்னை ஏமாற்றியதால் மனமுடைந்து வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tamil Actress Yashika Met Sucide For Love Failure

காதலர் தினத்தன்று இதுபோன்று நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். அது மற்றவர்களுக்கும் ஒருவித பயத்தைக் கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரபலங்கள் தற்கொலை

பிரபலங்கள் தற்கொலை

காதல் கண்ணை மறைக்கும் என்பதெல்லாம் உண்மை தான். ஆனா்ல உண்மையில்லாத காதலுக்காகவும் காதலனுக்காகவும் உயிரை விடுவது என்பது மிகவும் வருத்தத்துக்கு உரிய விஷயம். அப்படி சாதாரண மக்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்வதைத் தாண்டி பிரபலங்களும் தங்களுடைய காதல் தோல்வியால் மணமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதுபோல தற்போது காதலர் தினத்தன்று தன்னுடைய காதலில் இருந்து லிவ் இன் டுகெதராக வாழ்ந்துவிட்டு தன்னை ஏமாற்றிச் சென்ற காதலனுக்காக தற்கொலை செய்திருக்கிறார் நடிகை யாஷிகா.

 நடிகை யாஷிகா தற்கொலை

நடிகை யாஷிகா தற்கொலை

நடிகை யாஷிகா டீவி சீரியல்கள், திரைப்படங்கள் என எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய ஒரு நடிகையாக இருந்திருக்கிறார். இவர் கொளத்தூரை அடுத்த பெரவல்லூரில் வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வந்திருக்கிறார். திடீரென இரண்டு நாட்களுக்கு முன்பாக தன்னுடைய வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

யார் அந்த நபர்?

யார் அந்த நபர்?

யாஷிகா தற்கொலை குறித்து தகவல் அறிந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசாருக்கு சில உண்மைகள் தெரிய வந்திருக்கின்றன. யாஷிகா காதல் தோல்வியில் தற்கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. யார் அந்த நபர் என்றால், செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்யும் அரவிந்த் என்னும் நபருடன் இவருக்கு காதல் மலர்ந்திருக்கிறது.

லிவ் இன் டுகெதர்

லிவ் இன் டுகெதர்

இவர்கள் இருவரும் காதலித்தது மட்டுமல்லாமல், இருவரும் லிவ் இன் டுகெதராக கடந்த நான்கு மாதங்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும் அந்த பிரச்சினையில் அரவிந்த என்னும் அந்த நபர் இந்த பெண்ணை விட்டுவிட்டு போய்விட்டார்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

அரவிந்த் வீட்டை விட்டு போய்விட்டதால் அதிக மன உளைச்சலுக்கு ஆளான யாஷிகா சில தினங்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சூட்டிங் போக வில்லை. மிகுந்த மன உளைச்சலில் தான் இப்படி செய்திருக்கிறார் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

வாட்ஸ்அப் மெசேஜ்

வாட்ஸ்அப் மெசேஜ்

இந்த மரணத்தில் ஒரு திருப்பு னையாக இருப்பது, யாஷிகா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தன்னுடைய தாய்க்கு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதில் அவர், அரவிந்தை நம்பி நான் ஏமாந்து விட்டேன்.

என்னுடைய சாவுக்குக் காரணம் அரவிந்த் தான். அதுமட்டுமின்றி என்னுடைய இறப்புக்குக் காரணமான இவனுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று மிகவும் உருக்கமாக குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். இது இந்த வழக்கில் திருப்புமுனையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சொந்த ஊர்

சொந்த ஊர்

யாஷிகாவின் சொந்த ஊர் திருப்பூர். இவருடைய மேரிஷீலா ஜெபராணி என்பதாகும். இவருக்கு வயது 21. முதலில் வடபழநியில் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறார். அந்த சமயத்தில் தான் பெரம்பூரைச் சேர்ந்த அரவிந்த் என்னும் மோகன்பாபுவுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நெருக்கமாகி, பின் காதலாகி இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள்.

நடிப்பு

நடிப்பு

யாஷிகா சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் மன்னர் வகையறா என்னும் படத்தி்ல நடிகர் விமலுடன் இணைந்து நடித்திருக்கிறார். அதோடு நிறைய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்திருக்கார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion