Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
தன் கூட படிக்கும் மாணவிக்கு யாருக்கும் தெரியாம தாலி கட்டிய 10 ஆம் மாணவன்... அட கொடுமையே?
பள்ளி மாணவன் ஒருவன் தன்னுடன் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு யாருக்கும் தெரியாமல் தாலி கட்டியிருக்கிறார். அது பற்றி இங்கே பார்ப்போம். முழுதாக தெரிந்து கொள்ள இந்த கட்டுரையைப் படிங்க.
நாட்டுல என்னென்மோ கொடுமையெல்லாம் நடக்குதுனு தினமும் கேள்விப்படறோம். ஆனா அதுக்குனு இப்படியெல்லாமா கொடுமை நடக்கணும்? நீங்களே சொல்லுங்க. பொதுவாக அந்த காலத்துல தான் பொண்ணுங்க தலை நிமிர்ந்து நடக்கக் கூடாது. வீட்டை விட்டு வெளிய வரக்கூடாது. படிக்கக்கூடாதுனு எக்கச்சக்க கட்டுப்பாடுகள். ஆனால் இந்த காலத்தில் பெண்கள் நுழையாத இடமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படி எவ்வளவோ சுதந்திரமும் முன்னேற்றமும் வந்துவிட்டாலும் கூட, பெண் குழந்தைகளை தைரியமாக வெளியில் அனுப்ப முடியவில்லை.

சரி வெளியில் சென்றால் தான் பிள்ளைகளுக்கு பிரச்சினை என்று வீட்டில் யாரேனும் ஒருவர் பெண் பிள்ளையை பள்ளிக்கு வாசல் வரை கொண்டு போய் விட்டுவிட்டு வந்தாலும் கூட, இப்படியெல்லாம் கொடுமை நடந்தால் பாவம் பெற்றோர்கள் என்னதான் செய்வார்கள். போட்டு குழப்பினதெல்லாம் போதும். மொதல்ல விஷயத்துக்க வாங்கனு சொல்றீங்களா? இதோ வந்துடறோம்.

அரசுப் பள்ளிக்கூடம்
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களின் நிலைமையைப் பற்றி உங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியமெல்லாம் கிடையாது. ஆம். பாதி பள்ளியில் குழந்தைகளுக்கு எந்தவித வசதியும் இருக்காது. கழிப்பிட வசதி சுத்தம். அதேபோல ஆசிரியர் பற்றாக்குறை இப்படி பல காரணங்களால் மாணவர்கள் சீரழிந்து போகிறார்கள் என்றால், அவ்வப்போது இதுபோல் நடக்கும் சில சம்பவங்கள் மற்ற மாணவர்களையும் கெடுத்துவிடுகிறது. அப்படி என்ன தான் நடந்தது என்று தானே கேட்கிறீர்கள்.
இந்த சம்பவம் நடந்தது தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடந்திருக்குங்க.

600 மாணவர்கள்
இந்த பகுதியில் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமப் புறங்களில் இருந்து வந்து இந்த பள்ளியில் மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் கிட்டதட்ட 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இது மேல்நிலைப்பள்ளி. இங்கு ஆறாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை இருக்கிறது.

காதல்
அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன்னுடன் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரை சில மாதங்களாகக் காதலித்து வந்திருக்கிறார். சினிமா பாணியில் தங்களுடைய வீட்டில் தங்களுடைய காதலுக்கு எதிர்காலத்தில் எதிர்ப்பு வந்துவிட்டால் என்ன செய்வது என்று கோக்குமாக்காக யோசித்த மாணவன் இதற்கு ஒரு திட்டம் போட்டான். அந்த திட்டம் எனன தெரியுமா?

தாலி கட்டிவிட்டான்
பள்ளிக்கு வந்த அந்த மாணவன், யாரும் அருகில் இல்லாத வேளையில் அந்த பெண்ணை தனியாக அழைத்து, தான் பாக்கெட்டில் வைத்திருந்த தாலியை எடுத்து அந்த மாணவியின் கழுத்தில் கட்டியிருக்கிறான். அந்த பெண்ணும் அவன் மீது காதல் வயப்பட்டிருந்ததால் எதுவும் சொல்லவில்லை. அதன்பின் இருவரும் யாரிடமும் சொல்லாமல் அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டார்

நண்பர்களிடம் பெருமையடித்தான்
இது யாருக்கும் தெரியாமல் இப்படியே இருக்க சில நாட்கள் கழித்து, அந்த மாணவனோ தன்னுடைய நண்பர்களுடன் தான் அந்த மாணவியைத் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாகப் பெருமையாகச் சொல்லியிருக்கிறான். இது பள்ளி முழுக்க பரவியது.

பெண்ணின் பெற்றோர்
பள்ளி முழுவதும் மட்டுமல்லாது அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கும் இந்த சம்பவம் தெரிய வந்தது. உடனே பெண்ணை அழைத்து அடித்து உதைத்து தாலியை அறுத்து எறிந்துவிட்டனர். அதோடு விடாமல் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியரிடம் தகராறு செய்துள்ளனர்.

இடைநீக்கம்
விசாரணையில் மாணவர்கள் இருவரின் சம்மதத்தாலும் தான் இது நடந்தது என்றாலும் கூட, படிக்க வந்த இடத்தில் மாணவியின் மனநலையை மாற்றி, இதுபோன்ற தவறான செயலுக்குத் தூண்டியதால் பள்ளியில் இருந்து அந்த மாணவன் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டு விட்டான். பொதுத்தேர்வு மட்டும் வந்து எழுதிவிட்டுப் போகும்படி கூறி அனுப்பி வைத்தனர்.
இப்படியும் இன்னைக்கு மாணவர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுபோன்ற விஷயங்களை எங்கிருந்து தான் கற்றுக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. பெற்றோர்கள் தான் எப்போதும் கண் கொத்திப் பாம்பாக இருந்து தங்களுடைய பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டியிருக்கிறது.



Click it and Unblock the Notifications











