வாழ்க்கையில எந்த பிரச்னையும் வராம இருக்கணும்னா இந்த டிப்ஸை மட்டும் மனசுல வெச்சிக்கோங்க...

Posted By: Vivek Sivanandam
Subscribe to Boldsky

வாழ்வில் மகிழ்ச்சி என்பது மிகவும் அத்தியாவசியம் என்பது போல அதன் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறோம். நாம் பிறந்ததில் இருந்து இறக்கும் நொடி வரை மகிழ்ச்சி என்பது முதன்மையான ஒன்றாகிவிட்டது. உறவுகளிடம் அன்பை காட்டிலும் மகிழ்ச்சியை தான் அதிகம் எதிர்பார்க்கிறோம்.

relationship

காதலின் பின்னால் ஓடும் போது நோயாளி ஆகிறோம். மகிழ்ச்சியின் பின்னால் ஓடும் போது சோகமாகிறோம். பிறகு நாம் என்ன முயல்கிறோம்? அதன் பிறகு என்ன ஆவோம்? மகிழ்ச்சி என்பது ஒரு ஏக்கம். அது ஒரு கற்பனை மற்றும் உறவுகள் என வரும் போது நம்மின் ஒரு பகுதியை மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகிழ்வான வாழ்க்கை

மகிழ்வான வாழ்க்கை

மகிழ்ச்சியாக இருப்பதற்காகவே நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என நினைப்போம். சந்தோசமாக இருப்பதால் நன்றாக உணர்கிறோம் என்ற கற்பனையிலேயே வாழ்கிறோம். உறவுகளுடன் ஒட்டி இருப்பதற்கு மகிழ்ச்சி மட்டுமே காரணமில்லை. நாம் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற கற்பனைக்கு வேறு சில காரணிகளும் இருக்கின்றன. உறவுகளுடன் ஒன்றாக இணைந்திருக்கும் போது ஏற்படும் உணர்வுகளை, வேறு எதுவும் தந்துவிட முடியாது. உறவுகளிடையே மகிழ்ச்சியை கொல்லும் பல்வேறு காரணிகள்:

எதிர்பார்ப்புகள் (Expectations)

எதிர்பார்ப்புகள் (Expectations)

ஒவ்வொரு உறவிலும் நாம் கண்கூடாக பார்ப்பது, பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் மட்டுமே. மகிழ்ச்சியையும் சேர்த்தே எதிர்பார்க்கிறோம். ஆனால் மற்ற எதிர்பார்ப்புகளின் சுமையில், மகிழ்ச்சி என்பது கற்பனையாகவே இருக்கிறது. மகிழ்ச்சி என்பது உண்மையான உணர்வை தந்தாலும், அது கடைசி வரை நிலைப்பதில்லை. நம்முடன் இருப்பவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து அவர்களை மகிழ்ச்சியடைய செய்யும் அதே நேரத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்க மறந்துவிடுகிறோம். அதனால் மகிழ்ச்சியை எப்போது அனுபவிக்காமல் கற்பனையாக போய்விடுகிறது.

பாதுகாப்பின்மை (Insecurities)

பாதுகாப்பின்மை (Insecurities)

நாம் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்க பல்வேறு முறைகளை கையாண்டு பார்த்திருப்போம். ஆனால் அது தவறு. பாதுகாப்பின்மை என்ற உணர்வே நம் மகிழ்ச்சியை விழுங்கிவிடும். உறவுகளில் மகிழ்ச்சி பாதுகாப்பின்மையின் அடிமையாக மாறி பின்னர் கற்பனையான ஒன்றாக மாறிவிடும்.

உறவுகள் என்பது பாதுகாப்பின்மை விளையாடும் விளையாட்டு மைதானமாக மாறி, உறவுகளுக்கிடையேயான மகிழ்ச்சியை கொன்று புதைத்துவிடும். உறவு என்பது நம்மவர்களை முழுவதுமாக நம்பி வாழ்வது தான். அதில் சிறு விரிசல் விழுந்தாலும் பாதுகாப்பின்மை என்ற பேய் உங்கள் உறவை உடைக்க காத்திருக்கும்.

விட்டுக்கொடுத்தல் (Compromises)

விட்டுக்கொடுத்தல் (Compromises)

ஒருவருடன் உறவான பிறகு, அவருக்காகவும் உறவுக்காகவும் விட்டுகொடுப்பது என்பது மிகவும் தவறு. அந்த இடத்தில் உங்களின் மகிழ்ச்சியை இழக்க ஆரம்பிக்கிறீர்கள். உறவில் விட்டுக்கொடுப்பது என்பது, தற்கொலையை விட ஆபத்தானது.

விட்டுகொடுப்பதில் தான் வாழ்க்கை உள்ளது என பலர் சொல்லக்கேட்டிருப்போம். ஆனால், அது தான் உறவுகளுக்கிடையே எதிர்பார்க்கும் மகிழ்ச்சியை கொல்லும் ஆயுதம். உறவில் நுழைந்த பின்பு நீங்கள் நீங்களாகவே இருக்க முடியவில்லை என்றால், அங்கு மகிழ்ச்சியை எதிர்பார்ப்பது தவறான ஒன்று. அதற்கு காரணமும் நீங்கள் தான்.

அர்ப்பணிப்பு

அர்ப்பணிப்பு

உறவில் மகிழ்ச்சி என்பது உங்களின் முழுமையான அர்ப்பணிப்பை பொறுத்தது. பாதி மனதை எங்கேயோ வைத்துக்கொண்டு, மீதியை வைத்து மகிழ்ச்சியாக இருக்க முயலாதீர்கள். விட்டுக்கொடுத்தலில் இல்லை வாழ்க்கை. நீங்கள் எப்படியோ அப்படியோ ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து மகிழ்வது தான்.

பிறரின் உறவுக்காக உங்களையே நீங்கள் மாற்றிக்கொண்டால், பின் எப்போதும் மகிழ்ச்சி என்பது கற்பனையே. பின்னர் மகிழ்ச்சி என்பது கடலில் கரைத்த பெருங்காயம் போலாகிவிடும்.

கடின உழைப்பு (Hard work)

கடின உழைப்பு (Hard work)

மகிழ்ச்சி என்பது நீங்கள் கஷ்டப்பட்டு கிடைத்த ஒன்று. உறவுக்காக நீங்கள் செய்த கடின உழைப்பை கீழாக எண்ணி மறைக்கும் போது மகிழ்ச்சி கற்பனையான ஒன்றாகிறது. நீங்கள் இருப்பதை காட்டிக்கொள்வதற்காகவே உறவுகளுடன் பழகுவது என்பது உண்மையான மனப்பூர்வமான உறவாக இருக்கமுடியாது.

கடினமாக அடைந்த மகிழ்ச்சி என்பது, அதை எப்படி நாம் பெற்றோம் என்பதை நினைவுகூர்வதற்காகவே நம்முடன் இருக்கிறது. உறவுகள் என்பது மகிழ்ச்சியை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் இல்லை. அதை புரிந்து கொள்ளாமல் மகிழ்ச்சிக்காக பிறரிடம் உறவாடுவது அந்த உறவை கொல்வதற்கு சமம்.

சுயமாக இருங்கள்

சுயமாக இருங்கள்

நம் எதிர்பார்ப்புகள் அனைத்தும் கற்பனையே. உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதை போல காட்டிக்கொண்டாலும், உள் மனதுக்குத்தான் தெரியும், வெளியுலகத்திற்கான கற்பனை இது என்று. மகிழ்ச்சி என்பது உறவுகளுக்கு இரையாகி விட்டது. மற்றவர்களின் முன்பு போலியாக நடிப்பதில் தான் மகிழ்ச்சி உள்ளது என நினைக்கின்றனர் காதலர்கள்.

உறவுகளில் மகிழ்ச்சி ஈடித்து இருக்க, நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்களையும் உங்கள் உறவுகளையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். உறவுகளுக்காக விட்டுக்கொடுப்பதை காட்டிலும், நீங்கள் இப்படித்தான் என்பதை புரியவையுங்கள். அவர்களையும் புரிந்துகொள்ளுங்கள்.

ஆழமான உறவு

ஆழமான உறவு

உங்கள் உறவு எவ்வளவு ஆழமாக இருக்கவேண்டுமோ அவ்வளவு ஆழமாக இருந்தால், மகிழ்ச்சியில் மிதக்கலாம் உறவினில் மூழ்கலாம்.

உங்களையும் உங்கள் உறவுகளையும் புரிந்து கொண்டால், மகிழ்ச்சி என்பது ஒருபோதும் கற்பனையாக இராது. எனவே, உறவில் மகிழ்ச்சி என்பது கற்பனையானது அல்ல நீங்கள் அதை கற்பனையாக மாற்றும் வரை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Happiness Is An Illusion In Relationships?

Happiness has been our number one priority since the day we were born and will continue until the day we die.
Story first published: Tuesday, April 3, 2018, 15:50 [IST]