For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலனை ஏமாற்ற பெண் திட்டமிட்டு நிகழ்த்திய நாடகம்! my story #238

பயங்கரமாக திட்டமிட்டு தன் காதலனை ஏமாற்ற நினைத்த பெண்ணைப் பற்றிய கதை. அதற்காக அவள் என்னென்ன நாடகங்களை எல்லாம் அரங்கேற்றினாள் அவன் காதலன் அதை எப்படி எதிர்கொண்டான் என்பதைப் பற்றிய உண்மைக் கதை.

|

இந்தக் கதை உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடமாக அமைந்திடும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். இந்த விஷயத்தால் கடந்த ஆறு மாதங்களாக மிகவும் மனதளவில் பெரும் போராட்டங்களை சந்தித்து வாழ்ந்த இடம்,மூன்று வருடமாக வேலை பார்த்த அலுவலகம் என எல்லாவற்றையும் மாறி நான் ஒழிந்து கொள்ள புதிய இடத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்.

இதில் என்னுடைய தவறு என்ன? எங்கே சென்று எப்படி இந்த சுழலில் சிக்கிக் கொண்டேன் என்றெல்லாம் யோசித்து யோசித்து கிட்டத்தட்ட பைத்தியம் போல ஆகிவிட்டேன்.என்னை விடுங்கள் என் அம்மா அப்பா உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் அலுவலகத்தினர் ஒவ்வொருவரும் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று நினைத்தாலே எங்காவது போய் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று தோன்றிடுகிறது.

ஒரு வழியாக நண்பர்களின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நான் :

நான் :

அப்பாவுக்கு பில்டிங் காண்ட்ராக்டர் வேலை அம்மா அரசு அலுவலகத்தில் கணக்கராக பணியாற்றுகிறார். பணத்திற்கு எங்கள் வீட்டில் பஞ்சமே இல்லை. என்னையும் அக்காவையும் ஊரிலேயே பெரிய பள்ளியில் சேர்ந்து படிக்க வைத்தார். படிப்பு முடிந்ததுமே அக்காவிற்கு விமர்சையாக திருமணமும் நடந்தது.

என் கல்லூரி நண்பர்கள் எல்லாம் வேலைக்குச் செல்கிறார்கள் என்று அப்பாவின் பிஸ்னஸ் வேண்டாம் நான் சில காலம் வேலைக்குச் செல்கிறேன் என்று வர்புறுத்தி பெங்களூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.

கேப் :

கேப் :

ஷிப்ட் முடிய இரவு ஆகிவிட்டால் கேப் பிடித்து தான் என் வீட்டிற்கு செல்வேன். அன்றைக்கு அலுவலக வாசலில் கேப் புக் செய்து விட்டு காத்திருந்தேன். இரண்டு முறை போன் செய்துமே கேப் டிரைவர் வந்து கொண்டிருக்கிறேன் என்ற ஒரே தகவலைத்தான் சொன்னான்.

முழுதாக அரைமணி நேரம் கடந்த பிறகு ஒரு கேப் நான் நிற்கும் ப்ளாட்ஃபார்மை நோக்கி வந்தது. என்னுடைய கேப் தான் வந்துவிட்டது என்று நினைத்து வேகமாக கார் அருகில் சென்று கதவைத் திறக்க முயன்றேன்.

உதவி :

உதவி :

பார்த்தால் அந்தப் பக்கத்திலிருந்து ஒரு பெண் கதவைத் திறந்து உள்ளே உட்காந்துவிட்டார். என்ன இது நான் புக் செய்த காரில் வேறு யாரோ உட்காருகிறார்களே என்று சந்தேகத்துடன் கார் எண்ணைப் பார்த்தேன். ஆம், இது நான் புக் செய்த கார் தான். உள்ளே உட்கார்ந்திருக்கும் பெண் தான் தவறாக ஏறிவிட்டிருக்கிறார்.

டிரைவரிடம் விவரத்தை சொன்னேன். அவர் அந்த பெண்ணிடம் சொல்ல அவர் பதட்டத்துடன் இறங்கி என் பக்கம் வந்தார். ரொம்ப அவசரம் நான் புக் பண்ண கார் இன்னும் வர்ல இது தான் கார் டீடெயில்ஸ் ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க என்றார். நீங்கள் எங்கோ புக் செய்திருப்பீர்கள் அதில் நானெப்படி போக முடியும்.... இந்த காரை புக் செய்யும் போதே என் வீட்டு அட்ரஸுக்கு தானே பண்ணியிருக்கேன் என்று குழம்பினேன். பின் டிரைவரும் ட்ராப் பாயிண்ட் எங்கயோ அங்க தான் நிறுத்துவேன் என்றதும் வேறு வழியில்லாமல் அந்தப் பெண் இறங்கினாள்.

சந்திப்பு :

சந்திப்பு :

அடுத்து சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்தப் பெண்ணை சந்தித்தேன். ஆனால் இந்த முறை பதட்டம் ஏதுமின்றி சாவகாசமாக நின்றிருந்தாள். அவளிடம் சென்று அன்றைய நாளை நினைவுப்படுத்தி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். சகஜமாக பேச ஆரம்பித்தாள் பெங்களூருக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகிறது என்றும் வேலை தேடிக் கொண்டிருப்பதாய் சொன்னாள். எண்களை பரிமாறிக் கொண்டோம்.

 சாட்டிங் :

சாட்டிங் :

சகஜமாக பேச ஆரம்பித்தோம். அப்பா அம்மா யுஎஸ் ல இருக்காங்க என்னையும் அங்க கூப்டுறாங்க எனக்கு தான் இஷ்டமில்ல என்றாள். ஒரு நாள் பேசவில்லை என்றால் கூட உரிமையுடன் கோபித்துக் கொள்வாள் அக்கா மகனின் புகைப்படத்தை டிபியாக வைக்க, நம்ம பாப்பாவும் இப்டித்தான் இருக்கும்ல என்றாள்.... முதலில் புரியவில்லை பின்னர் புரிந்து கொண்டு கால் செய்தேன் அவள் எடுக்கவில்லை.

உன்னை காதலிக்கிறேன் :

உன்னை காதலிக்கிறேன் :

உண்மையாவா? என்ன சொல்ற என்று கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினேன்... ஆம், எனக்கு உன்னை ரொம்ப பிடித்திருக்கிறது ஆனால் உன்னிடம் சொல்ல பயம் என்று ரிப்ளை அனுப்பினாள். அந்த பதிலை கேட்ட நேரத்தில் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தேன்.

முதலில் காதலிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை ஆனால் அவள் அப்படிச் சொன்னதும் ஏன் காதலித்தால் என்ன என்று தோன்றியது.

விட்டு போய்டமாட்டியே :

விட்டு போய்டமாட்டியே :

பெற்றோர் பெயருக்குத் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பாசத்தை அன்பை நான் உணர்ந்ததில்லை ஆனால் உன்னிடம் அந்த அன்பு எனக்கு கிடைத்தது. இந்த அன்பு எனக்கு வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். நீ எனக்கு வேண்டும் என்னை விட்டுச் சென்று விட மாட்டேயே என்று பல முறை கேட்பாள். எனக்கு அந்த நாட்கள் எல்லாம் உற்சாகமாய் இருந்தது. இனி அவளை விட்டு எங்கும் செல்லக்கூடாது அவள் எனக்கானவள் என்று முடிவு செய்து கொண்டேன்.

நண்பர்கள் எல்லாருக்கும் இவளை காதலிப்பதாக சொல்லி வைத்தேன். அக்காவிடம் பெயரைச் சொல்லாமல் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்ற தகவலை மட்டும் போட்டு வைத்தேன்.

பணம் :

பணம் :

ஒரு வருடம் சந்தோஷமாக கழிந்தது. நிறைய ஊர் சுற்றினோம். ஷாப்பிங் சென்றோம், ஒரு நாள் அப்பா யுஎஸ் ல இருந்து இன்னும் பணம் அனுப்பல இங்க ரெண்ட் கட்டணும் உன்கிட்ட இருக்கா? ரெண்டு நாளா பணத்த கேட்டு டார்ச்சர் பண்றான் என்றாள். அப்பா பணம் போட்டதும் உனக்கு கொடுத்திடறேன் என்று சொன்னாள்.

ஏய் அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் எவ்ளோ வேணும் என்றேன்...

25000

உடனடியாக பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்தேன்.

ஒரே வீட்டில் :

ஒரே வீட்டில் :

நீ மட்டும் எதுக்கு இவ்ளோ பெரிய வீட்ல இருக்க? பேசாம நானும் அங்க வந்திடவா எப்டியே கல்யாணம் முடிஞ்சு சேர்ந்து தான வாழப்போறோம் என்றேன்.... கூட பிரண்ட் இருக்கா என்றாள் ஒரு முறை, இன்னொரு முறை அந்த அப்பார்ட்மெண்ட்டில் அப்பாவுக்கு தெரிந்த நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அப்பாவிடம் சொல்லிவிடுவார்கள் என்றாள்.

அதன் பின் நான் அதைப் பற்றி பேசவில்லை. அதன் பிறகு அடிக்கடி எதேதோ காரணங்களைச் சொல்லி பணம் பறிக்க ஆரம்பித்தால் கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் வரை வாங்கியிருந்தாள்.

சண்டை :

சண்டை :

திடீரென்று மொக்கையான காரணங்களை எல்லாம் சொல்லி சண்டை போட ஆரம்பித்தாள். நீ என்ன மறந்துட்ட, முன்னாடி மாதிரி நீ இல்ல என்று சொல்லி சண்டை போட்டு கோபித்துக் கொள்வாள். நானும் தொடர்ந்து அவளை சமாதானப்படுத்துவேன்.

ஒரு கட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடம் பேசுவதை குறைத்துக் கொண்டாள் என்னை தவிர்க்க ஆரம்பித்தாள்.

சரியாக அந்த நேரத்தில் எனக்கு புது ப்ராஜெக்ட் வேறு ஒதுக்கியிருந்ததால் இவளை பார்க்கவும் செல்ல முடியவில்லை.

வா வெளிய போலாம் :

வா வெளிய போலாம் :

ஏன் இப்டி பண்ற ஆபிஸ்ல வேலை அதனால நான் பேசலன்னா உடனே உன்னைய மறந்துட்டாங்கன்னு அர்த்தமா? ஃபிரண்ட்ஸ் கிட்ட கேட்டுப் பாரு எப்பவும் உன்னைய பத்தி பேசிட்டு இருக்கேன் சரி வா இன்னக்கி டின்னர் வெளிய போலாம் என்று சமாதானப்படுத்த முயன்றேன்.

உம்ம்ம் கொட்டினாள்.

காரில்... :

காரில்... :

காரை எடுத்துக் கொண்டு அவள் அப்பார்ட்மெண்ட்டுக்குச் சென்றேன். வாசலிலேயே காத்திருக்கச் சொன்னாள். அவள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து வாசலுக்க வரவேண்டுமென்றால் குறைந்தது 20 நிமிடமாவது ஆகும், நான் வண்டியெடுத்துக் கொண்டு உள்ளே வருகிறேன் என்றாள் மறுத்துவிட்டாள்.

வெளியேவே காத்திருந்தேன். அரை மணி நேரம் கழித்து வந்து ஏறினாள். கையைத் தொட்டேன் தட்டிவிட்டாள்.

என்ன பிரச்சனை ? :

என்ன பிரச்சனை ? :

என்னடி இப்ப உனக்கு பிரச்சனை அதான் நான் சொல்றேன் வேல இருந்துச்சுன்னு ரொம்ப ஓவராத்தான் போற இப்ப என்ன உன்னைய கல்யாணம் தான பண்ணனும் நானும் எங்க வீட்ல சொல்றேன் நீயும் உங்க வீட்ல சொல்லு யாரு ஒத்துகிறாங்களோ இல்லையோ நாளைக்கு நமக்கு கல்யாணம் சரியா? என்றேன்.

சிரித்தாள்.... அப்பாடா மகாராணி சிரிச்சிட்டீங்களா சரி சொல்லு சாப்ட எங்க போலாம் என்றேன்.

வீட்டுக்கு போ :

வீட்டுக்கு போ :

திடீரென்று ஏய்.... அச்சோ மறந்துட்டேன் வீட்டுக்கு போணும் என்று பதட்டமானாள் என்னடி மறந்த என்ன ஆச்சு என்றேன் எதும் கேக்காது ப்ளீஸ் உடனே வீட்டுக்குப் போ என்றாள். நானும் இப்படி அவசரப்படுத்துகிறாளே என்று சொல்லி வண்டியை திருப்பினேன்.

இந்த ரோட்ல ட்ராபிக்கா இருக்கும் என்று சொல்லி வேறு வழியைச் சொன்னால்... அவள் சொல்ல சொல்ல நான் ஓட்டினேன்.

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

திடீரென்று ஓரிடத்தில் வண்டிய நிப்பாட்டு நிப்பாட்டு என்று கத்தினாள்..... ஜன்னலை வேறு திறந்து ப்ளீஸ் ஹெல்ப்.... ஹெல்ப் என்று கத்துகிறாள் ஏய் என்னாச்சு ஏன் இப்டி கத்துற என்று அவள் கையைப் பிடித்தேன்.

என் கையை இறுக்கமாக பிடித்தபடி ஹெல்ப் ஹெல்ப் என்று சத்தமாக கதறினாள். அதற்குள் அங்கிருப்பவர்கள் கூடி விட்டார்கள். வண்டியை விட்டு இறங்கி கூட்டத்திலிருந்த ஒரு பெண் பின்னால் போய் ஒளிந்து கொண்டாள்.

இவனிடமிருந்து என்னைக் காப்பாறுங்கள் என்று அவர்களிடம் அழுது கெஞ்சினாள்.

கொலை மிரட்டல் :

கொலை மிரட்டல் :

ஏய் என்னடி ஆச்சு.... என்று அவள் அருகில் செல்ல முயன்றேன் அதற்குள் அங்கிருப்பவர்கள் எங்கள் முன்னாலேயே அந்த பெண்ணை அடிக்கப்போகிறாயா என்று சொல்லி என் கன்னத்தில் அறைந்தார் ஒருவர்.

அவர்கள் வேறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழி பேசுகிறார்கள். அவர்களிடம் அவள் என் காதலி என்று எவ்வளவோ சொல்ல முயன்றும் புரியவைக்க முடியவில்லை.

என்னை காதலிக்கச் சொல்லி டார்ச்சர் செய்கிறார். இப்போது கூட வீட்டில் இறக்கி விடுவதாய் சொல்லி வேறு எங்கோ கடத்திச் செல்ல முயன்றார். தான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் என்னை கொன்று விடுவேன் என்று மிரட்டினார். இங்கே தான் வசிக்கிறேன் என்று சொல்லி தான் வசிக்கும் அப்பார்ட்மெண்ட் பெயரைச் சொன்னாள்.

போலீஸ் :

போலீஸ் :

அவள் சொல்லி முடித்ததும் அவர்கள் எதேதோ சொல்லி என்னிடம் எதுவுமே கேட்காமல் அடிக்க ஆரம்பித்தார்கள். காரின் கண்ணாடியை உடைத்தார்கள். சிறிது நேரத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் நான்கு பேர் வந்தார்கள் என்னப் பிரச்சனை என்று சொல்லி எங்களிடம் வந்தார்கள். என்னிடம் ஒருவரும், பொதுமக்களிடம் ஒருவரும் என்ன நடந்தது என்று கேட்டார்கள் மற்ற இருவர் கூட்டத்தை கலைத்தார்கள்.

அவர்களின் நடவடிக்கைகளை பார்த்து நான் மஃப்டியில் இருக்கும் போலீஸ் என்று நினைத்துக் கொண்டேன்.

பத்து லட்சம் :

பத்து லட்சம் :

கூட்டம் கலைந்தது. ஒரு சில பொதுமக்கள் நின்றிருந்தார்கள் எனக்கு மூக்கிலிருந்தும் தலையிலிருந்து ரத்தம் வலிந்து கொண்டிருந்தது. அவள் இன்னமும் அழுது கொண்டிருந்தாள் வந்த போலீஸும் எனக்கு எதிராகவே நின்றார்கள் யாருமே என்னை பேசவே அனுமதிக்கவில்லை.

இனி இந்த பெண்ணிடம் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது மீறி செய்தால் உன் மீது வழக்குப் பதிவு செய்து உன் எதிர்காலத்தையே நாசமாக்கிவிடுவேன் என்று மிரட்டினார் தலையாட்டக்கூட முடியாமல் குனிந்து நின்றேன். சார், என்கிட்ட இருந்து வாங்கின பத்து லட்சத்த கொடுக்க சொல்லுங்க இவன் பக்கமே நான் இனி வரமாட்டேன் என்று அழுதாள்.

பணத்தை கொடு :

பணத்தை கொடு :

வாங்கின பணத்த கொடுக்குறேன் இவ்ளோ நாள் என்னைய என்னென்ன கொடுமை பண்ணான் தெரியுமா என்று மீண்டும் ஒப்பாரி.... அங்கிருப்பவர்களுக்கு கோபம் இன்னும் எகிறியது. இங்கேயே பணத்தை வைத்தால் தான் உன்னை விடுவோம் என்று சொல்லி மிரட்ட ஆரம்பித்தார்கள். இருபது பேர் அங்கே நின்றிருப்போம்.

அதில் பத்தொன்பது பேரும் ஒரு கட்சியாகவும் அத்தனை பேருமே அந்த ஒருத்தனை எதிர்த்தால் என்ன செய்ய முடியும். அதிலும் சட்டை கிழிந்து ரத்தம் ஒழுக நின்று கொண்டிருக்கிறேன். தப்பிக்க அல்ல என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளாவது இங்கிருந்து செல்ல வேண்டும்.

போன் :

போன் :

அக்கௌண்டில் இருக்கிற பணத்தை கொடுத்து தொலைத்து விடலாம் பின் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி போன் எடுத்தேன். போனில் முகப்பு படமாக நானும் அவளும் சேர்ந்து எடுத்திருந்த படம் தான் இருந்தது பார்த்ததுமே அழுகை வந்தது. எதார்த்தமாக சரி விவரத்தை நண்பர்களிடம் சொல்லலாம் என்று நினைத்து போன் செய்தேன்.

டேய்..... என்று என் குரலைக் கேட்டதுமே எதோ ஆக்ஸிடண்ட் ஆகியிருக்கும் என்று நினைத்து மச்சி எங்கடாயிருக்க என்று தான் முதல் கேள்வி கேட்டான். இடத்தைச் சொன்னேன் அஞ்சு நிமிசத்துல வரேன் என்றான். என்ன ஆச்சு ஏன் போன் பண்ண எதுவும் அவன் கேட்கவில்லை. அவனும் அறையில் இருந்த இன்னொரு நண்பனும் வந்தார்கள்.

போலீஸ் நிலையம் செல்லலாம் :

போலீஸ் நிலையம் செல்லலாம் :

வந்து பார்த்ததும் ஏதோ ஆக்ஸிடண்ட் ஆகியிருக்கும் என்று நினைத்து எனக்கு தண்ணீரை வாங்கி கொடுத்தார்கள் வா ஹாஸ்பிடல் போகலாம் என்றான். அவர்கள் நடந்த விவரத்தை சொல்லி பணத்தை கொடுத்தால் தான் இங்கிருந்து செல்ல அனுமதிப்போம் என்றார்கள்.

நண்பன் நீங்க தப்பா நினச்சுட்டு இருக்கீங்க அவங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ். எனக்கு நல்லா தெரியும் என்றான்... ம்ம்ம் லவ் பண்றேன்ற பேர்ல இந்த பொண்ணுகிட்ட பணம் கேட்டு டார்ச்சர் பண்ணியிருக்கான் என்றார்கள் அவர்கள். பதிலுக்கு நண்பனும் பேச வாக்குவாதம் அதிகரித்தது. சரி வாங்க எல்லாரும் போலீஸ் ஸ்டேஷன் போலாம் எப்டி ரோட்ல வச்சு பணத்த கொடுன்னு நீங்க சொல்ல முடியும்... நாங்க போலீஸ் தான் எங்க முன்னாடி உங்க பஞ்சாயத்த முடிங்க.... நீயும் அவன் கூட கூட்டு வச்சிருக்கியா உன்னையும் தூக்கி ஜெயில்ல போட்ருவேன் பாத்துக்க என்று மிரட்டினார்.

உறுதியாய் நின்ற நண்பன் :

உறுதியாய் நின்ற நண்பன் :

ஆனால் அவர்களின் மிரட்டலுக்கு எல்லாம் நண்பன் அசையவில்லை. பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு நண்பன் போலீஸுக்கு போன் செய்துவிட்டான்.

நான் போன் செய்துவிட்டேன் அவர்களே இங்கே வருவார்கள் என்றதும், முதலில் அவள் இந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும் வீட்டினர் தற்கொலை செய்து விடுவார்கள் என்று வர மறுத்தாள். எல்லாருமே போலீஸ் நிலையம் என்றதும் தயங்கினார்கள்.

அவர்கள் உன் மீதே பழி போடுவார்கள் உன் எதிர்காலத்தை கெடுத்து விடுவார்கள் என்று எதேதோ சொல்லி பயமுறுத்தினார்கள்.

எஸ்கேப் :

எஸ்கேப் :

என்னை ஆம்புலென்ஸ் வர வைத்து மருத்துமனைக்கு அனுப்பி வைத்தார்கள். என்னுடன் ஒரு நண்பன் ஏறிக் கொண்டான். அவர்கள் இன்னமும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

அரை மயக்கத்திலும் டேய் மச்சான்.... பாத்துடா என்று சைகை காண்பித்தேன்.

பின் இரண்டு மணி நேரம் கழித்து என்னை மருத்துவமனையில் பார்க்க வந்தான் என்ன ஆச்சு என்று கேட்டேன்..... போலீஸ் வராங்கன்னு சொன்னதும் எல்லாரும் எஸ்கேப் ஆகிட்டாங்கடா போலீஸ் ஸ்பாட்டுக்கு வர்றப்போ ஒருத்தரும் நிக்கல என்றான்.

ஒரு கணம் தூக்கி வாரிப்போட்டது, ஆக என்னை ஏமாற்றி பணம் பறிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதைவிட அவர்கள் எல்லாரும் ஒரே கேங் என்றும் தெரியவந்தது.

அவளும் அந்த கூட்டத்தின் ஒருத்தி பயங்கரமாக திட்டமிட்டு காய் நகர்த்தியிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Story About a Girl Who Cheated Her Boy Friend

Story About a Girl Who Cheated Her Boy Friend
Story first published: Saturday, April 21, 2018, 15:24 [IST]
Desktop Bottom Promotion