For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உன்ன அனுபவிக்காம விடமாட்டேன்... என்று மிரட்டிய மிலிட்டரி ஆபீஸர் - My Story #264

  By Staff
  |

  நான் மூன்று வருடமாக ஒரு ஆணை காதலித்து வந்தேன். நாங்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டோம். அதன் பிறகு தான் என் சகோதரி மூலமாக இத மிலிட்டரி ஆபீசருடன் நட்பு உண்டானது. என் சகோதரியும், இந்த மிலிட்டரி ஆபீசரும் ஒரே பிரிவில் பணியாற்றி வந்தனர்.

  Real Life Story: This is How That Gentlemen 3 Star Military Officer Misbehaved with Me!

  என்னை அனுபவிக்காமல் விடமாட்டேன் என்று மிரட்டிய இந்த மிலிட்டரி ஆபீசர் பற்றி கூறுவதற்கு முன், எனது முந்தைய காதல் உறவை குறித்து கூற விரும்புகிறேன்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஐ.டி வேலை!

  ஐ.டி வேலை!

  நானும் அவனும் ஒரே ஐ.டி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தோம். முதல் ஒரு வருடம் என் காதல் எல்லா காதல் கதையையும் போது சுமூகமாக தான் இருந்தது. ஆனால், இரண்டாம் வருடத்தில் இருந்து அவன் என்னிடம் காரணமே இல்லாமல் கோபித்துக் கொண்டிருந்தான். அவன் எதுக்கு என்னை திட்டுகிறான், எதற்கு என்மேல் குற்றம்சாட்டுகிறான் என்றே எனக்கு தெரியாது.

  எதிர்பார்ப்பு!

  எதிர்பார்ப்பு!

  நான் அவனிடம் மொபைல் காலில் பேச விரும்பினாலோ, எனது குறுஞ்செய்திகளுக்கு பதில் எதிர்பார்தாலோ... நான் காதலில் நிறையவே எதிர்பார்க்கிறேன். எதிர்பார்ப்பை கொஞ்சம் குறைத்துக் கொள் என்று பாடம் எடுப்பான். ஆனால், எதுவும் எதிர்பார்க்காமல், பேசவோ, மெசேஜ் கூட செய்யாமல் வெறுமென இருப்பதற்கு நான் எதற்கு காதலியாக இருக்க வேண்டும்.

  ப்ரேக்-அப்

  ப்ரேக்-அப்

  ஆனால், எங்களுக்குள் பெரிதாக சண்டை ஏதும் இல்லை. அதே போல அன்யோன்யம் எதுவும் இல்லை. சாதாரண நண்பர்களை காட்டிலும் குறைந்த ஈர்ப்பே எங்களுக்கு மத்தியில் இருந்தது. இது காதலே இல்லை... நாங்கள் ஏதோ ஈர்ப்பில் காதல் என்று இதை நம்பிவிட்டோம் என்பதை உணர்ந்தேன். நேராக அவனிடமே சென்று... நமக்குள் இருப்பது காதலில்லை. எனவே, ப்ரேக்-அப் செய்துக் கொள்ளலாம் என்று கூறினேன்.

  மன்னிப்பு!

  மன்னிப்பு!

  என்னிடம் நடந்ததற்கு எல்லாம் மன்னிப்பு கூறினான். அவனது மன்னிப்பை ஏற்கவோ, அவனுடன் மீண்டும் காதல் உறவில் இணையவோ எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, அதன் பிறகு அவனை முற்றிலும் தவிர்க்க ஆரம்பித்தேன். அவனும் எனது முடிவு தான் சரியானது என்று உணர்ந்து பிரிந்து சென்றுவிட்டான்.

  தனிமை!

  தனிமை!

  இதற்கு பிறகு சிறிது காலம் நான் தனிமையில் வாழ்ந்து வந்தேன். அப்போது தான் விடுமுறையில் வீட்டுக்கு வந்த அக்கா மூலமாக அவருடன் பணிபுரியும் ஒரு ஜென்டில்மேன் ஆபீசருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் த்ரீ ஸ்டார் கிரேட் ஆபீசர். மிகவும் கனிவாக பேசுவார். பணிவன்புடன் நடந்துக் கொள்வார் என்று சகோதரி சிபாரிசு செய்தார். ஆகையால், எங்களுக்குள் உரையாடல்கள் குறுஞ்செய்திகள் மூலம் பேச துவங்கினோம்.

  மாற்றம்!

  மாற்றம்!

  ஆரம்பத்தில் நட்பாக, கனிவாக பேசிக் கொண்டிருந்தவன். ஒரு நாள் திடீரென... உன்னுடன் உரையாடும் போதெல்லாம்... எனக்கு விறைப்பு ஏற்படுகிறது. என்னால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறினான். இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. என் காதலன் கூட இப்படி என்னிடம் பேசியது இல்லை. வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு அவனை பிளாக் செய்துவிட்டேன். பிறகு வேறொரு எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட அவன்.. அன்று சுயநினைவில் இல்லை. ஆகையால் தான் தவறாக பேசிவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்று கூறினான்.

  அந்தரங்க படங்கள்...

  அந்தரங்க படங்கள்...

  மன்னித்தேன்... ஆனால், அவனது சுயரூபத்தை அவன் மீண்டும் , மீண்டும் வெளிகாட்டிக் கொண்டே இருந்தான். ஓரிரு வாரங்கள் கழித்து மீண்டும் அவனது வேலையை காண்பித்தான். என்னுடன் மெசேஜ் செய்துக் கொண்டிருந்த போது. உனது மேல் மற்றும் கீழ் பாகங்களை புகைப்படம் எடுத்து அனுப்புவாயா என்று கேட்டான். இது என்னை மனதளவில் பெரிதாக பாதித்தது. ஓரிரு நாட்கள் இதை எண்ணி நான் அழுதேன். இம்முறை ஒருவாரம் அவனுடனான பேச்சு முற்றிலும் தவிர்த்தேன்.

  வக்கிர முயற்சி

  வக்கிர முயற்சி

  பிறகு மீண்டும் மன்னிப்பு கேட்டான். இம்முறை அதை தான் அனுபவில்லை. என் நண்பர்கள் தான் அனுப்பினார்கள். அதற்கும், எனக்கும் சம்மந்தம் இல்லை. தான் அதை கவனிக்கவே இல்லை என்று கூறினான். என் சகோதரி கூறியதை வைத்து. அவன் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால், ஏதோ ஒரு வகையில் அவன் என்னை மயக்க, ஈர்க்க முயற்சிக்கிறேன் என்று வக்கிரமாக நடந்துக் கொண்டு வந்தான்.

  வீடியோ கால்

  வீடியோ கால்

  இதற்கு எல்லாம் உச்சக்கட்டமாக அவனது உண்மை ஒரு நாள் காட்டுமிராண்டி போல வெளிப்பட்டது. அச்சமயம் நான் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். இரவு அனைவரும் உறங்கிவிட நான் மட்டும் தனியாக ஹாலில் இருந்தேன். அவனிடம் இருந்து வீடியோ கால் வந்தது. ஆனால், மிகவும் இருட்டான பகுதியில் இருந்தோ, இருட்டு அறையில் இருந்தோ அவன் பேசுவது போல இருந்தது. அந்த இருட்டில் எனக்கு எதுவுமே தெரியவில்லை.

  ஆணுறுப்பு

  ஆணுறுப்பு

  திடீரென சிறிதளவு வெளிச்சம் தென்பட்டது... அப்போது தான் எறிந்தேன், வீடியோ காலில் அவனது ஆணுறுப்பை எனக்கு அவன் காட்டிக் கொண்டிருக்கிறேன் என்று. இந்த அருவருப்பான சம்பவத்திற்கு பிறகு, என் சகோதரியிடம் நடந்த அத்தனை விபரங்களையும் கூறினேன். அவள், நேராகவே அவனை திட்டு, தீர்த்துவிட்டால். அதற்கு பிறகு, நான் அவனை முற்றிலும் பிளாக் செய்தேன். அதன் பிறகு அவனுடன் கால், மெசேஜ் அனைத்தையும் நிறுத்திவிட்டேன்.

  செக்ஸ் மிரட்டல்

  செக்ஸ் மிரட்டல்

  சில நாட்கள் கழித்து அவனிடம் இருந்து ஒரு மெசேஜ் மட்டும் வந்தது. அதில், நான் உன்னை நிச்சயம் அடைவேன். உன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்வேன். முன்புறமும், பின்புறமும் செக்ஸ் வைத்துக் கொள்வேன்... உன்னை என் அடிமை ஆக்குவேன் என்று மிக மோசமான மெசேஜ் அனுப்பி இருந்தான். இதை நான் ஒரு புகாராக எடுத்துக் கொண்டு போயிருந்தால், அவனது மூன்று ஸ்டார்களையும் நீக்கி, வேலையை விட்டு அனுப்பி இருப்பார்கள். ஆனால், எனக்கு உடன்பாடு இல்லை.

  நம்பிக்கை?!

  நம்பிக்கை?!

  நிச்சயம் அவனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இந்த நிகழ்வின் மூலம் நான் அறிந்துக் கொண்டது எல்லாம். எந்த ஒரு நபரையும் அவர் செய்யும் வேலையை வைத்து நல்லவன், கெட்டவன் என்று ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. இராணுவத்தில் த்ரீ ஸ்டார் கிரேடில் இருக்கும் ஒரு ஆண் இப்படி நடந்துக் கொள்வார் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. மேலும், இந்த சம்பவத்திற்கு பிறகு, ஆண்களை, ஆண்கள் மீதான நம்பிக்கை முழுவதும் இழந்தேன். எதை வைத்து இனி நான் ஒரு ஆணை நம்பி பழக முடியும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Real Life Story: This is How That Gentlemen 3 Star Military Officer Misbehaved with Me!

  No matter what position a person holds, his true nature is not defined by that. I still think about the incident and hate myself at times. I still can’t bring myself to trust a man.
  Story first published: Saturday, June 9, 2018, 13:30 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more