For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான், அவள் ஏற்கனவே திருமணமானவள் என அறிந்தேன் - My Story #304

திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான், அவள் ஏற்கனவே திருமணமானவள் என அறிந்தேன் - My Story #304

By Staff
|

இளமை பருவத்துல எனக்கு காதலிக்கவோ, பொண்ணுங்க பின்னாடி சுத்தவோ ஆசை இல்லன்னு எல்லாம் சொல்ல முடியாது. நேரம் இல்ல. ஸ்கூல் படிக்கும் போதிருந்தே பார்ட் டைம் ஜாப் பார்த்து, குடும்பத்துக்கு உதவியா இருந்தேன். இது காலேஜ் நேரத்துலயும் கண்டினியூ ஆச்சு.

அதனால, ஃபிரெண்ட்ஸ் கூட அரட்டை, ஊர் சுத்துறது, வீக்கென்ட் ஆனா புதுப்படம் மாதிரியான சந்தோஷம், என்ஜாய்மெண்ட் எல்லாம் என் வாழ்கையில நடக்கவே இல்ல. அப்படியான சின்ன, சின்ன சந்தோசத்து மேல எல்லாம் எனக்கு ஆர்வமும் இல்ல.

Real Life Story: Just Few Days Before Our Marriage Only, I Found Out That She was Already Married

கூட பிறந்த தங்கச்சிங்க ரெண்டு பேரு. நான் நல்லப்படியா படிச்சு, நல்ல வேலைக்கு போனா தான்.. அவங்கள காலேஜ்ல சேர்த்து நல்லா படிக்க வெச்சு, நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும்னு.. வாழ்க்கையில சில நல்லத பார்க்க வேண்டி நிறையா தியாகம் பண்ண வேண்டி இருந்தது.

முப்பது வயசுல எல்லாம் கல்யாணம் பண்ணி வாழ்க்கையில கொஞ்சமாவது செட்டிலாகி இருப்பாங்க.. அட்லீஸ்ட் செட்டிலாக பிளானவது பண்ணி இருப்பாங்க. எனக்கு காதல் எட்டிப் பார்த்த வயசே முப்பது தான்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜம்ப்!

ஜம்ப்!

நான் ஒரு ஐ.டி.'காரன்... கோடிங் தான் வாழ்க்கை... ஓ.டி. பார்த்து, பார்த்து கூடுதலா சம்பாதிக்கணும்... ஒண்ணு, ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை ஜம்படிச்சு சம்பளத்த அதிகப்படுத்திக்கணும்.. இது தான் என்ன போல இருக்க பல ஐ.டி வாசிகளோட கொள்கைன்னு சொல்லலாம். ஸ்கூல், காலேஜ் டைம்ல பார்ட் டைம் ஜாபே கதின்னு இருந்ததால நெருக்கமான நண்பர்கள் அமையல. வேல பண்ற இடத்துல அடிக்கடி ஜம்ப் அடிச்சுட்டே இருந்தனால.. அதே ரிசல்ட் தான் இங்கயும்.

தங்கைகள் கல்யாணம்...

தங்கைகள் கல்யாணம்...

என் 28 வயசுலேயே என் ரெண்டு தங்கைகளுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டேன். என் வாழ்க்கையில நான் பண்ண முதல் உருப்படியான காரியம், சாதனைன்னா அதத்தான் சொல்லணும். என்ன தான் பேய், பிசாசுன்னு சொன்னாலும்... கூட பிறந்த தங்கச்சி இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கைங்க. அம்மாவுக்கு சமமா அக்கறையும், பாசமும் காட்டுற வேற ஜீவன எங்க போயி தேடுவீங்க..?

காதல்!

காதல்!

எப்பவும் சென்னையிலேயே ஜம்ப் அடிச்சுட்டு இருந்த நான், முதல் முறையா பெங்களூரு பக்கமா போனேன். ஆன்சைட் ஆபர் தான் கிடைக்கல... அட்லீஸ்ட் வேற ஊருக்காவது போய் பார்க்கலாம்னு முடிவு பண்ண காலம் அது. அங்க தான் அவள பார்த்தேன். நான் ஜாயின் பண்ணி ஒன்னு ரெண்டு மாசம் இருக்கும்னு நினைக்கிறேன்... அப்ப தான் அவ ஜாயின் பண்ணா.

சப்போர்ட்!

சப்போர்ட்!

சப்போர்ட் டீம்... தேவை இல்லாத ஆணிய புடுங்குறேன்னு, தேவையே இல்லாம போய் பேசுவேன். அவளும் என் கூட பேசுனாங்கிறது தான் அதிசயம். இதுக்கு முன்ன ஏதாவது எக்குத்தப்பா பேசி, பழகி வேலை போச்சுன்னா தங்கச்சிங்க கல்யாணம்னு ஒரு விஷயம் கண்ணு முன்ன வந்து போகும்... இப்ப அந்த கடமைகள் முடிஞ்சதேன்னு தைரியமா பேசினேன்.

அவ ரொம்ப ஜோவியலான பொண்ணு. ஈஸியா எல்லார் கூட பழகுற டைப். ஆனா, எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. அந்த லிமிட் பக்கத்துல போனாலே பத்ரகாளியா மாறிடுவா.

Most Read:ஜப்பானியர்கள் இவ்வளவு மொழு மொழுனு இருக்க இவைதான் காரணமாம்..!

ஃபிரெண்ட்!

ஃபிரெண்ட்!

அவ முகத்துல எப்பவுமே ஒரு வாடாத பூ இருக்கும். அவளோட சிரிப்பு. ஆபீஸ்ல நுழைஞ்சதுமே அவளோட சிரிப்ப பார்த்தா போதும். அந்த நாள் முழுக்க எனர்ஜிடிக்கா இருக்கும்.

ரொம்ப சீக்கிரமே அவக்கிட்ட நல்ல ஃபிரெண்ட்ஷிப் கிடைச்சது. வீக்கென்ட்ல வெளிய போக ஆரம்பிச்சோம். பெங்களூர்ல பீச் இல்லாத குறைய, ஷாப்பிங் மால் எல்லாம் தான் தீர்த்து வெச்சது. எந்த ரோட்டுல போனாலும் அங்க ஒரு ஷாப்பிங் மால் இருக்கும். ஷாப்பிங் பண்றமோ இல்லையோ.. உள்ள புகுந்த எல்லா மாடி ஏறி இறங்குனா... நேரம் போனதே தெரியாது.

ஒரு நாள்...

ஒரு நாள்...

அப்படி தான் ஒரு நாள் பி.வி.ஆர்ல படம் பார்த்துட்டு ஈவ்னிங் காபி ஷாப்ல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கும் போது... பிரபோஸ் பண்ணிடலாம்னு நினைச்சுட்டே இருந்தப்ப... அவளா என்கிட்டே ஒன்னு சொல்லணும்னு சொன்னா... சரின்னு தலைய ஆட்டுனேன்... அவ சொன்ன விஷயம் எத்தன வாட்ஸ்னு சொல்ல முடியாத அளவுக்கு ஷாக்கிங்கா இருந்துச்சு.

அவ சொன்ன அந்த விஷயம்.... "எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு...."

கல்யாணம்...

கல்யாணம்...

ஆமா! அவளுக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆயிடுச்சு. ஆனா, அவளும், அவளோட ஹஸ்பென்ட்டும் ஒண்ணா இல்ல. தன்னோட குறைய, என் மேல திணிக்க ட்ரை பண்ணி.. முடியாததுனால.. என்ன கொடுமை பண்ண ஆரம்பிச்சான். சில நாள் வீட்டுக்கு வெளியவே ராத்திரி முழுக்க நிக்க வெச்சிருக்கான்னு.. தன்னோட வாழ்க்கையில நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னா.

இப்ப நான் பிரபோஸ் பண்றதா... ஆறுதல் சொல்றதா... இல்ல, என் மனசுக்குள்ள தோணுற ஏதேதோ சந்தேக கேள்விகள கேட்கிறதானு ஒரே குழப்பம்.

எதுவுமே பேசாம விட்டுட்டேன்.

அன்னிக்கி நைட்...

அன்னிக்கி நைட்...

அவள ஹாஸ்டல்ல டிராப் பண்ணிட்டு... என் ரூமுக்குள்ள புகுந்து ஷூ கூட முழுசா கழட்டல... போன் ரிங்காச்சு... அவக்கிட்ட இருந்து தான் கால்.

"சாரி... தேவையில்லாம ஏதேதோ பேசி... உண்ண மூட்-அவுட் பண்ணிட்டேன்னு" சொன்னா....

ஆக்சுவலா இதுக்கு நான் பரவால்ல விடுன்னு தான் பதில் சொல்லி இருக்கணும். ஆனா, என் வாயில ஐ லவ் யூன்னு வந்திடுச்சு... ஒன்னு, ரெண்டு நிமிஷம் அவக்கிட்ட இருந்து எந்த பதிலும் இல்ல.

ஒத்த கால் ஷூ மட்டும் கழற்றிட்டு... ஒத்த கால் ஷூவோட... ரூம் வாசல் வராண்டாவுல நின்னுக்கிட்டு இருந்தேன்.

Most Read:வரலாற்றில் வழங்கப்பட்ட கொடூரமான மரண தண்டனைகள் - புகைப்படத் தொகுப்பு!

ஓகே!

ஓகே!

அவ... ஒகே சொல்றதுக்கு முன்னாடி.. டிவோர்ஸ் ஆயிடுச்சான்னு கேட்டேன்... "ஹ்ம்ம்.... அப்ளை பண்ணியிருக்கு... ரெண்டு, மூணு மாசத்துல கிடைச்சிடும்''னு சொன்னா...

முன்னாடி நான் சொன்னதுக்கு பதிலே வரலயேன்னு கேட்டேன்...

ஹ்ம்ம்ன்னு சொன்னேனே... சொல்லி சிரிச்சா...

அவளுக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆனது பத்தி எனக்கு பெருசா கவலை இல்ல. ஏன்னா... அவ சொன்ன அந்த விஷயங்கள் (நான் இங்க குறிப்பிடாத சில விஷயங்கள்), கொடுமைகள் எல்லாம் ரொம்பவே கடினமானது. நான் என்னமோ அதுவரைக்கும் என் வாழ்க்கையில நான் இழந்த சின்ன, சின்ன விஷயம் தான் பெரிய இழப்புன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.

என்னவோ தெரியல.. அவமேல ஒரு ஈர்ப்பு... காதல்..

சம்மதம்!

சம்மதம்!

எங்க வீட்டுல அம்மா மட்டும் தான்... அவங்க கொஞ்சம் ஓல்ட் டைப்... அதனால... அவளுக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆன விஷயத்த எல்லாம் சொல்லாம... கூட வர்க் பண்ற பொண்ணுன்னு அறிமுகம் செஞ்சு வெச்சேன். நீ இந்த லவ்வு, கிவ்வு எல்லாம் பண்ணலையான்னு அதுவரைக்கும் கேட்டுட்டு இருந்த என் அம்ம்மா... அன்னிக்கி "உன்ன எப்படிடா இந்த பொண்ணு லவ் பண்ணுச்சுன்னு" கேட்டு நச்சரிச்சு கொன்னுட்டாங்க.

எப்படியோ... அம்மா, தங்கச்சிங்க.. எல்லாருக்கும் அவள பிடிச்சுப் போச்சு.

கேம் ஸ்டார்ட்ஸ்!

கேம் ஸ்டார்ட்ஸ்!

இப்ப தான் பிரச்சனையே... அவங்க வீட்டுல பேசணும். அதுக்கு முன்னாடி டிவோர்ஸ் வாங்கணும். காலம், கொஞ்சம் வேகமாவே ஓடிச்சு... ஒரு நாள் வந்து டிவோர்ஸ் வாங்க போறேன்னு சொன்னா... ரெண்டு பேருக்குமே செம்ம ஹேப்பி... நானும் கூட வரேன்னு சொன்னேன்.. இல்ல அவங்க வீட்டாளுங்க.. எங்க வீட்டாளுங்க எல்லாம் இருப்பாங்க... அப்பறமா பார்த்துக்கலாம்னு சொல்லிட்டா. அவ சொல்றது தான் சரின்னு பட்டுச்சு.. ஓகேன்னு சொல்லி அனுப்பி வெச்சேன்.

ஒரு வாரம்!

ஒரு வாரம்!

ஏறத்தாழ ஒரு வாரம் கழிச்சு தான் திரும்பி ஊருக்கு வந்தா. டிவோர்ஸ் பேப்பர் எல்லாம் எங்கன்னு கேட்டதுக்கு அம்மாக்கிட்ட இருக்குன்னு சொன்னா. போட்டோ காபி கேட்டதுக்கும் எடுக்கல. இப்ப தரேன், அப்ப தரேன்.. அம்மா ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்டு டார்ச்சர் பண்றாங்கன்னு பல சாக்குப் போக்கு பதில்கள்.

சரி! நம்ம கல்யாணம் பத்தியாவது உங்க வீட்டுல பேசலாம்னு கேட்டேன்... அழுக ஆரம்பிச்சுட்டா...

Most Read:விந்தணு எண்ணிக்கையையும், அதன் நீந்தும் திறனையும் மேம்படுத்துவதற்கான சில வழிகள்!

புது ட்விஸ்ட்!

புது ட்விஸ்ட்!

எங்க வீட்டுல லவ் பண்றது பத்தி பேசினேன்.. அவங்க ஒத்துக்கல. ஏதோ, சொந்த கார பையன் அமெரிக்காவுல இருக்கான். அவன் எல்லாம் தெரிஞ்சும் கல்யாணம் பண்ணிக்க ஒகே சொல்லிட்டான்னு சொல்றாங்க. அதான் நான், ஒருவாரம் சண்டைப் போட்டு பார்த்துட்டு... முடியாம திரும்பி வந்துட்டேன்னு சொன்னா..

இப்படி ஒரு ட்விஸ்ட் வரும்னு நான் எதிர்பார்கவே இல்ல. அவங்க வீட்டுக்கு எகைன்ஸ்டா வெளிய வந்து கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு ஒகேவான்னு கேட்டேன். தலைய, தலைய ஆட்டுனா...

ஏற்பாடுகள்!

ஏற்பாடுகள்!

கிட்டத்தட்ட ஒரு மாசம் கூட இல்ல. நானே ஒத்த ஆளா கல்யாணத்துக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளும் பண்ண ஆரம்பிச்சேன். எதிர்பாராத நேரத்துல கல்யாண ஏற்பாடுகள் பண்ணதுனால... கொஞ்சம் கடன் வாங்க வேண்டிய சூழல்.

எங்க சைடுல நெருங்குன சொந்தக் காரங்க மட்டும் கொஞ்சம் பேர கூப்பிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு பிளான்.

ஒரு மெயில்...

ஒரு மெயில்...

கல்யாணத்துக்கு ஒரு வாரம் தான் இருக்கும்.. எனக்கு ஒரு மெயில் வந்துச்சு...

டிவோர்ஸ் வாங்காத பொண்ண கல்யாணம் பண்றது சட்டப்படி குற்றம் தெரியுமான்னு.... தூக்கிவாரிப் போட்டுச்சு...

ஒரு மணிநேரம் கழிச்சு ஒரு போன் கால்... அவளோட ஹஸ்பென்ட்னு சொல்லி ஒருத்தன் கால் பண்ணான். எங்களுக்கு இன்னும் டிவோர்ஸ் ஆகவே இல்ல... எப்படி நீ அவள கல்யாணம் பண்ணுவன்னு கேட்டான். அவன்கிட்ட என்ன பேசுறதுன்னு தெரியல.

பொய் சொல்லி கல்யாணத்த நிறுத்த பாக்குறியான்னு திட்டுனேன்..

வேணும்னா... அவங்க அம்மாக்கிட்ட பேசுன்னு சொல்லி நம்பர் கொடுத்தான்...

(அதுவரைக்கும் அவங்க அம்மா நம்பர் என் கிட்ட இல்ல...)

எது உண்மை..?

எது உண்மை..?

அவங்க அம்மாவும் அதே தான் சொன்னாங்க. இன்னும் ரெண்டு மாசம் ஆகும் டிவோர்ஸ் வாங்கன்னு...

அவ வீட்டுல டிவோர்ஸ் வாங்குனதும் அந்த அமெரிக்கா பையனுக்கு கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ண ரெடியா இருந்திருக்காங்க. அதுக்கு பயந்துட்டு வாங்காத டிவோர்ஸ வாங்கிட்டேன்னு அவ சொன்னதுனால... தேவையில்லாம கல்யாண ஏற்பாடு எல்லாம் வேற பண்ணிட்டேன்.

பயம்!

பயம்!

அவ என்ன ஏமாத்தணும்னு நெனச்சு எல்லாம் இப்படி பொய் சொல்லல. ஏற்கனவே ஒருமுறை ஏமார்ந்து போனதுனாலயும், என்ன இழந்திட கூடாதுன்னும் தான் பொய் சொன்னா.

இப்பவும் வெயிட் பண்ணிட்டு தான் இருக்கோம். என் ஃபிரெண்ட்ஸ் சிலர் இதெல்லாம் உனக்கு தேவையா... உனக்கு எதுக்கு இந்த தியாக உள்ளம்னு எல்லாம் கிண்டல் பண்ணாக, திட்டுனாங்க. காதலுக்கு இனம், ஜாதி, மாதம், மொழி போன்ற தடையே இல்லன்னு சொல்லலும் போது.. இது ஒண்ணும் எனக்கு பெரிசா தெரியால.

அது ஒரு ஆக்ஸிடென்ட்... ஒருவேளை நாம காதலிச்ச பொண்ணுக்கு ஆக்ஸிடென்ட்ல காலோ, கையோ போயிட்டா விட்டுடுவோமா... அப்படி தான் இதுவும்.. என்ன..., நான் காதலிச்ச பொண்ணு, காதலிச்சிட்டு இருக்குற பொண்ணு ஒரு ஆக்ஸிடென்ட்க்கு அப்பறமா என் வாழ்கையில வந்தா... அவ்வளவு தான் வித்தியாசம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: Just Few Days Before Our Marriage Only, I Found Out That She was Already Married

Real Life Story: Just Few Days Before Our Marriage Only, I Found Out That She was Already Married, and Not Divorced Her First Husband.
Desktop Bottom Promotion