For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சகோதரர்களாலே விலைப்பேசி விற்கப்பட்டேன்... - My Story #267

சகோதரர்களாலே விலைப்பேசி விற்கப்பட்டேன்... - My Story #267

By Staff
|

நான் இந்த காலத்து மனுஷி இல்ல. இன்னைக்கும் பெண்களுக்கு சுதந்திரமே இல்லன்னு சிலர் பேசுறத கேட்கும் போதே, அப்ப நான் வாழ்ந்தது ஒரு கற்காலம் இல்ல, அடிமை வாழ்க்கையான்னு மனசுல தோணும்.

இன்னிக்கு இந்த 2018ல சமூகத்தல வாழ்ந்துட்டு வர ஒரு பொண்ணுக்கும், 1980ல வாழ்ந்துட்டு வந்த ஒரு பொண்ணுக்கும் இருக்க ஒரே ஒற்றுமை... அவங்களும் கற்பழிக்கப்பட்டாங்க., இவங்களும் கற்பழிக்கப்படுறாங்க.

குறைந்தபட்சம் இந்த காலத்துல படிப்பு, வேலை, தனியா பயணிக்கிற வாய்ப்புன்னு நிறையா இருக்கு. 80ல வாழ்ந்த பொண்ணுக வாழ்க்கை எப்படி இல்லை. ஒரு பெண்ணியவாதிங்கிற பேருல நான் என் நண்பர்கள், தோழிகள் மத்தியில பல நிகழ்வுகள்ல நிறையா விவாதம் பண்ணியிருக்கேன்.

ஆனால், நான் இன்னும் பெண்ணியம் பற்றியோ, பெண்கள் அனுபவிச்ச கொடுமைகள் பற்றியோ இன்னும் முழுசா கத்துக்கலன்னு, தெரிஞ்சுக்கலன்னு புரிய வெச்சது இந்த கதை.

இது என்னோட வாழ்க்கை பாதை இல்ல. என் வாழ்க்கையில பயணிச்ச ஒரு சின்ன நபரோட வாழ்க்கை. அவங்க என் வீட்டுல வேலை பார்த்து வந்த, வர ஆயா. அவங்களுக்கு வயசு அறுபது பக்கம் இருக்கும். 80கள்ல அவங்க ஒரு இளம்பெண்ணா இருந்தப்ப அனுபவிச்ச கொடுமைகள்.

ஒருநாள் பவர் ஷட்-டவுன் ஆனப்ப, மொபைல், லேப்டாப் எல்லாம் பேட்டரி ட்ரை ஆயிடுச்சுன்னு... பொழுத போகாமா அவங்கள கூப்பிட்டு ஒரு கதை சொல்ல சொன்னேன்... அவங்க அவங்களோட கதையே சொன்னாங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படிச்ச அப்பா அம்மா...

படிச்ச அப்பா அம்மா...

நான் பொறந்து, வளர்ந்தது எல்லாம் ஒரு நல்ல குடும்பத்துல தான். எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே நல்லா படிச்சவங்க. 60, 70ல எல்லாம் எட்டாவது பத்தாவது, பி.யு.சி படிச்சிருந்தாலே கவர்மெண்டு உத்தியோகம் கிடைக்கும். என் அப்பா அந்த காலத்து பி.எ., ஒரு கவர்மெண்டு ஆபீசர். அம்மா பி.யு.சி வரைக்கும் படிச்சிருந்தாலும் வேலைக்கு போகல. ஏன்னா அப்போ எல்லாம் பொண்ணுகள படிக்க வைக்கிறது பயனில்லாத வேலை, காசு கரியாக்குறதுன்னு சொல்லுவாங்க.

கூட பொறந்தவங்க...

கூட பொறந்தவங்க...

என் கூட பொறந்தவங்க மொத்தம் மூணு பேரு. மூணு பேருமே ஆம்பள பசங்க. ரெண்டு மூத்த அண்ணன், ஒரு தம்பி. எப்பவுமே வாத்தியார் பிள்ளை மக்குன்னு சொல்லுவாங்க. ஆனா, எங்க வீட்டுல வாத்தியார் பிள்ளைங்க மட்டுமில்ல, திமிரு பிடிச்சிருந்தா எல்லா பிள்ளைகளும் மக்கா தான் இருக்கும்னு நிரூபிச்சாங்க.

நான் பொம்பள புள்ள, படிச்சு என்ன கிழிக்க போறேன்... அம்மாவ போல வீட்டு வேலை தான பார்க்க போறேன்னு அஞ்சாவதோட நிறுத்திட்டாங்க. அண்ணன், தம்பிகள அப்பா, அம்மா எவ்வளவோ படிக்க வைக்க முயற்ச்சி பண்ணியும் அவங்க மண்டையில படிப்பு ஏறல.

முரண்!

முரண்!

படிக்கனும்ன்னு ஆசைப்பட்ட எனக்கு படிப்பு கிடைக்கல. சினிமா, விளையாட்டுன்னு சுத்திட்டு இருந்த எங்க அண்ணன், தம்பிகளுக்கு வாய்ப்பு கிடைச்சும் அவங்க படிக்கல. அப்பா கவர்மெண்டு ஆபீசர்ங்கிறதுனால கொஞ்சம் சொத்து சேர்த்து வெச்சிருந்தார். அது போக பரம்பரை சொத்துன்னு ஒரு வீடு கொஞ்சம் நிலமும் இருந்துச்சு. அப்பா அம்மா உயிரோட இருக்குற வைக்கும் என் வாழ்க்கை கொஞ்சம் நல்லா தான் இருந்துச்சு.

அடுத்தடுத்து.

அடுத்தடுத்து.

என் வாழ்க்கையில திடீர் திருப்பம் ஏற்பட்டது அம்மா, அப்பா மறைவுக்கு அப்பறம் தான். நான் அவங்க அடுத்தடுத்து இறந்துடுவாங்கன்னும் எதிர்பார்க்கல.. கூட பொறந்த அண்ணன், தம்பிகளே என்ன காசுக்காக வித்திடுவாங்கன்னும் எதிர்பார்க்கல.

அம்மா, அப்பா இறந்த பிறகு பிஸ்னஸ் பண்றேன், அது பண்றேன்னு சொத்துக்கள் எல்லாம் கொஞ்சம் வருஷத்துலயே வித்து தீர்த்துட்டாங்க. மீதமிருந்தது. பரம்பரை சொத்தான வீடும், கொஞ்சம் நிலமும் தான். அதுல எனக்கான பங்கு கிடைக்காதுன்னு தெரியும்.

ஏன்னா, கொடுக்க மாட்டாங்க. ஆனா, ஊரார் எல்லாம் வயசு பொண்ண ஏண்டா இப்படி கொடுமை பண்றீங்க... அவள கரைசேர்க்க பாருங்கடான்னு சொந்த காரங்க.. ஊர் காரங்க எல்லாம் பேச ஆரம்பிச்சாங்க.

விலை பேசி கல்யாணம்...

விலை பேசி கல்யாணம்...

ரொம்ப நாளா எந்த பேச்சுக்கும் காது கொடுக்காம இருந்தவங்க... திடீர்ன்னு ஒரு நாள் மாப்பிளை பார்த்திருக்கோம்... உனக்கு கல்யாணம்ன்னு சொன்னாங்க. என்ன இருந்தாலும் பாசம் விட்டு போகுமான்னு நெனச்சேன். அது பாசம் இல்ல வெறும் வேஷம். எப்படியாவது என்ன வீட்டுல இருந்து துரத்தி விட்டுட்டு நிம்மதியா இருக்க நெனச்சிருக்காங்க.

இரண்டாவது கல்யாணம்.. அதுலயும் அந்த மாப்பிளை கிட்ட பணம் பேசி, என்ன வித்திருக்காங்க. ஏன்னா அவருக்கு வயசு ஐம்பது மேல இருக்கும். அவருக்கு பொண்ணு கொடுக்க யாரும் தயாரா இல்ல. அதனால, என் கழுத்துல சுருக்கு கயிறு மாட்ட என் அண்ணன், தம்பியே முயற்சி பண்ணாங்க.

தலைவிதி!

தலைவிதி!

மறுப்பு சொல்ல முடியல... அடிச்சு ஒத்துக்க வைச்சாங்க... மொத்தமே ஒரு இருபது பேரு சூழ என் கல்யாணம் நடந்து முடிஞ்சுது. இதுக்கப்பறம் தான் என் வாழ்க்கை இன்னும் திசை மாறி போச்சு.

எனக்கு கல்யாணம் ஆன ரெண்டே வருஷத்துல அந்த ஆளு செத்துட்டாரு. முதல் மனைவி பசங்க அவரோட சொத்து எல்லாம் பங்கு போட்டுக்கிட்டு என்ன வீட்டைவிட்டு வெளிய அனுப்பிட்டாங்க. வீட்டுக்கு வந்தா அண்ணன், தம்பியும் என்ன சேர்த்துக்கல.

வீட்டு வேலை!

வீட்டு வேலை!

அப்பறம் இத்தனை நாளா வீட்டுக்கு மட்டும் வேலை பார்த்துட்டு வந்த நான்... வெளியூருக்கு போய் எல்லார் வீட்டுலையும் வீட்டு வேலை பார்க்க ஆரம்பிச்சேன். ஒரே வீட்டுல மாச சம்பளம் வேலை எல்லாம் இருக்காது. கிடைக்கிற நேரத்துல, கிடைக்கிற இடத்துல வேலை பார்க்கனும்.

அப்படி தான் காலேஜ் படிச்சுட்டு இருந்த பேச்சுலர் பசங்க வீட்டுக்கு வேலைக்கு போனேன். அவங்க வீட்டுக்கு வாரம் ஒரு நாள் போய் வீடு சுத்தம் பண்ணி கொடுத்துட்டு, துணிமணி எல்லாம் துவைச்சு கொடுத்துட்டு வரனும்.

ஒரு நாள்...

ஒரு நாள்...

ஆரம்பத்துல நல்லா தான் நடந்துக்கிட்டாங்க. ஆனால், எதிர்பாராத சமயத்துல அந்த வீட்டுல இருந்து மூணு என்கிட்டே தவறா நடந்துக்கிட்டாங்க. ஒத்த பொம்பளையா என்னால ஒன்னும் பண்ண முடியல. ஒரு கட்டத்துக்கு மேல உடம்பு சோர்ந்து போச்சு... தடுக்க முடியல... செத்த பிணம் போல தரையில கிடந்தேன்.

அதுக்கப்பறம் நிஜமாவே என் வாழ்க்கை ஒரு பிணம் மாதிரி தான் இருந்துச்சு. கொஞ்ச நாள் வீட்டு வேலைக்கு போறதுக்கு கூட தயக்கம். எங்க திரும்ப இப்படியான சம்பவம் நடந்துருமோன்னு பயந்தேன். இத யார்க்கிட்ட சொல்றது... மானம் போயிடுமே.. போயிடுச்சு தான்.. ஆனா, ஊர் முழுக்க தெரிஞ்சா வேற எங்கயும் வேலையும் கிடைக்காதுன்னு யார் கிட்டையும் சொல்லல.

கொஞ்ச வருஷம் ஓடிப்போச்சு..

கொஞ்ச வருஷம் ஓடிப்போச்சு..

ஆம்பளைங்க ஆசையும், பசியும் பொண்ணுங்க உடல்ல அந்த வளைவு, நெளிவு இருக்குற வைக்கும் தான். என் உடம்பு பருமனாகி, கவர்ச்சி தொலைஞ்சு போனதுக்கு அப்பறம் என்ன சீண்ட யாருக்கும் விருப்பம் இல்ல. அப்ப இருந்து தான் என்ன வேலைக்கு போற இடத்துல பெயர் சொல்லி கூப்பிடாமா அக்கா, தங்கச்சி, அம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. இப்ப ஆயாவுல வந்து நிக்கிறேன்.

-- ஆயா, கதை சொல்லி முடிச்ச நேரத்துல கரண்ட் வந்திடுச்சு... ஆனா, அவங்க வாழ்க்கை இன்னுமே பவர் ஷட் டவுன்லையே தான் இருக்கு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: How This Stereotype Society Killed My Life

Real Life Story: How This Stereotype Society Killed My Life
Desktop Bottom Promotion