For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  என் தோழியின் வருங்கால கணவருக்கு இந்த கடிதம் - My Story #256

  By Staff
  |

  அவன் சரி! என்று சொன்னதுமே... அவளது கனவுகள் எல்லாம் ஒட்டுமொத்தமாய் ஒரே நொடியில் பலித்தது போன்ற உணர்வு அவளுக்குள்.

  என் தோழி மிகவும் எளிமையானவள், ஆக்டிவாக செயற்பட கூடியவள், கொஞ்சம் பப்ளி... பாரம்பரியத்தை பின்பற்றும் மதிப்பிற்குரிய குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவள். தோழியின் வீட்டில் அவளுக்கான முக்கியத்துவமும், மரியாதையும் அதிகம் என்று கூறலாம்.

  பிறந்ததில் இருந்து அவள் வாழ்க்கை ஸ்மூத்தாக தான் பயணித்து வருகிறது, குடும்பத்தார், படிப்பு, தோழமை என அனைத்துமே அவள் விரும்பியது போலவே அமைந்தது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஒரு நாள்...

  ஒரு நாள்...

  எல்லா பெண்களின் வாழ்விலும் இந்த ஒரு நாள் நிச்சயம் வரும். திருமண பேச்சு அடிப்படும் அந்த ஒரு நாள். இந்த நாள் எப்போது வரும், எப்படி வரும், எந்த சூழலில் வரும் என்றெல்லாம் தெரியாது. ஆனால், வர வேண்டிய நேரத்தில்... கண்டிப்பாக வரும். திருமணம் என்பது பெற்றோர் மற்றும் பிள்ளைகள் இருவரின் ஒருசேர்ந்த கனவு. இது எப்போதும் இருவருக்கும் சமநிலையான உணர்வை அளிக்கும் வகையில் நிகழ வேண்டும்.

  தேடுதல் வேட்டை!

  தேடுதல் வேட்டை!

  தோழியின் வீட்டில் அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மணமகன் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். இவளுக்கு மறுப்பு என்று ஏதும் இல்லை. எப்படி மணமகன் தேடிப்பிடிக்க ஆறேழு மாதம் ஆகும் என்று நினைத்திருந்தாள்.

  அப்போது தான் எங்கள் கல்லூரி இறுதி தேர்வும் முடிவடைந்திருந்தது. பெற்றோருக்கு நோ சொல்ல வேண்டிய அவசியம் இவளுக்கு இல்லை. ஆனால், சினிமா மீது பேரார்வம் கொண்ட என் தோழியிடம் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் இருந்தது.

  மணி அடிக்கணும்!

  மணி அடிக்கணும்!

  மொழி படத்தில் கூறுவது போல, தனக்கான துணையை கண்ட அந்த நொடியில் மணி அடிக்க வேண்டும், சுற்றிலும் ஒரு இசை ஒலிக்க வேண்டும் என்ற நிபந்தனை கொண்டிருந்தாள் என் தோழி. இப்படியான ஒரு மாயையால் பல வரன்களை புகைப்படத்தை பார்த்த நொடியிலேயே ரிஜக்ட் செய்து பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த துவங்கினாள் என் தோழி.

  குழப்பம்!

  குழப்பம்!

  இவளுக்கு என்ன வேண்டும், எப்படியான மாப்பிளை வேண்டும். காதல், கீதல் என்று ஏதாவது செய்து வருவதால் இப்படி தொடர்ந்து ரிஜக்ட் செய்கிறாளா என்று பல குழப்பங்கள் என் தோழியின் பெற்றோர் மனதில். கண்டதும் காதல் என்பது சினிமாவில் மட்டும் தான் வரும். நிஜத்தில் புரிந்து கொண்ட பிறகு தான் காதல் வரும் என்று பலமுறை எடுத்து கூறிய போதிலும் கூட... என் தோழியின் மனதில் ஆழமாக புதைந்த அந்த மாயை அகலவில்லை.

  ரிஜக்ஷன்!

  ரிஜக்ஷன்!

  இவள் சிலரை ரிஜக்ட் செய்தாள் எனில், மறுபுறம் பார்க்க பெண் பப்ளியாக இருக்கிறாள் என்று கூறி மறுபுறம் மணமகன்கள் இவளை ரிஜக்ட் செய்து வந்தனர். இப்படியாக சில காலம் ரிஜக்ஷனில் சென்றுக் கொண்டிருந்தது. இந்த காலக்கட்டத்தில் தன் மீது வெறுப்பு கொண்டிருந்தாள் என் தோழி. எனக்கான சரியான துணையை என் கடவுள் ராமார் காண்பிப்பார் என்று நம்பி வந்தாள். ஆம்! என் தோழி ஒரு ராமர் பக்தை.

  வேலை!

  வேலை!

  இப்படியான சூழலில் தான் என் தோழிக்கு சென்னையில் வேலை கிடைத்தது. இடம் மாறி செல்ல வேண்டிய சூழல். மகிழ்ச்சியாக சென்றால். புதிய இடம் , புதிய வேலை என அவளுக்கும் அந்த ரிஜக்ஷன் நேரத்தில் ரிலாக்ஸாக இருக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது அந்த வேலை.

  அவள் சென்னையில் இருந்த போதிலும், இங்கே வரன் தேடும் படலம் நின்றதாக இல்லை. வயது வித்தியாசம், ஜாதக பொருத்தம் இல்லை என ஏதேதோ காரணங்களால் திருமணம் தடைப்பட்டு கொண்டே போனது.

  அக்காவிடம் இருந்து அழைப்பு...

  அக்காவிடம் இருந்து அழைப்பு...

  ஒரு நாள் என் தோழிக்கு அவளது அக்காவிடம் இருந்து அழைப்பு வந்தது. ஒரு வரன் முடிவாகி இருப்பதாகவும். அவர்கள் இரண்டு நாட்களில் பெண் பார்க்க வீட்டுக்கு வருகிறார்கள் என்றும் கூறினார். உடனே என் தோழி ஃபேஸ்புக் ஐடி இருந்தா கொடேன்.. நான் அவர் எப்படி இருக்கிறார் என்று பார்க்க வேண்டும் என்று விரும்பினாள்.

  சினிமா போல...

  சினிமா போல...

  அந்த சமயம் பார்த்து சினிமாவில் வருவது போல இன்டர்நெட் ஸ்லோ, இமேஜ் லோட் ஆவதற்கு நேரமானது.

  ஒருவழியாக இமேஜ் ஓபன் ஆனது. என் தோழியின் தலையில் மணி அடித்தது. சுற்றிலும் யாரோ இசை வாசித்துக் கொண்டிருந்தனர். ஆம்! அந்த வரனை உடனே ஓகே செய்துவிட்டாள் அவள்.

  இங்கே தான் திடீர் பதட்டம் தொற்றி கொண்டது. மற்ற வரன்களை போல இவரும் தன்னை பப்ளி என்று கூறி ரிஜக்ட் செய்துவிட்டால் என்ன ஆவது என்று இரண்டு நாட்கள் சரியாக தூங்காமல் தவித்தாள்.

  ஓகே!

  ஓகே!

  மணமகன் வீட்டார் வந்தனர். இரு வீட்டாரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். உடனே, பெண்ணை எங்களுக்கு பிடித்திருக்கிறது. எப்போது திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டனர். என் தோழிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சந்தோசத்தில் துள்ளி குதித்தால்.

  சிறு வயதில் இருந்தே... அவள் நினைத்தது எல்லாம் உடனக்குடன் அவளுக்கு கிடைத்தது. அவள் விரும்பியது போலவே அவள் வாழ்க்கையும் அமைத்தது. இன்னும் சில மாதங்களில் இருவரும் திருமண பந்தத்தில் இணைய போகிறார்கள்.

  நிச்சயம் அந்த வரன் என் தோழியின் மனம் புண்படும் படி நடந்துக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன். அவள் வாழ்க்கை அவள் விருப்பம் போலவே, அவள் மனதை போலவே இனிமையாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துக் கொள்கிறேன்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Real Life Story: A Heartwarming Letter To The Future Husband of My Dear Most Friend!

  Real Life Story: A Heartwarming Letter To The Future Husband of My Dear Most Friend!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more