For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனுப்பின மெசேஜுக்கு ரிப்ளை வரலன்னா இப்டியா?

உங்களுடைய குறுஞ்செய்திகளுக்கு ரிப்ளை வரவில்லை என்றால் இதுவும் காரணமாக இருக்கலாம் என்பதற்கு சில உதாரணங்கள்.

|

இன்றைய காதலர்களுக்கு மத்தியில் நடக்கிற முக்கியமான பிரச்சனை, காதலர்கள் என்பதை விட இந்தப் பிரச்சனை நண்பர்களுக்கு மத்தியில் கூட அடிக்கடி நிகழும். இப்போதெல்லாம் டெக்னாலஜி வளர்ந்து விட்ட காரணத்தினால் கால் செய்து பேசும் வழக்கம் எல்லாம் மலையேறி விட்டது. எல்லாம் குறுஞ்செய்திகள் தான். அதுவே இப்போது பிரதானமாக இருக்கிறது.

அவசர தேவைக்காக என்று ஆரம்பிக்கப்பட்டு இன்று அவசர அவசரமாகத்தான் எல்லாருக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறோம். அதோடு இன்று வளர்ந்திருக்கும் டெக்னாலஜியினால் குறுஞ்செய்தி அனுப்பிய மறு வினாடி ரிப்ளை வந்தாகவேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு எல்லாரிடத்திலும் இருக்கிறது.

நான் அனுப்பி இன்னமும் ரிப்ளை வரவில்லை, அப்படியென்றால் எனக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை என்று நினைத்து சண்டை ஆரம்பித்து பின் அதுவே பூதகரமாக வெடித்து விடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பதில் இல்லை :

பதில் இல்லை :

ஒருவரிடமிருந்து பதில் வரவில்லை என்றாலே அது ஏதோ மிகப்பெரிய தவறாக எடுத்துக் கொண்டு மனஸ்தாபங்களை வளர்த்துக் கொள்கிறோம். தொலைதூரத்தில் இருக்கும் இருவருக்கும் தங்களிடம் பேசுபவர் எந்த சூழ்நிலையில் இருக்கிறார் என்பது தெரியாது என்பதை நாம் தெளிவாக மறந்து விடுகிறோம்.

இதையும் தாண்டி நீங்கள் அனுப்பிய மெஸேஜுக்கு ரிப்ளை வராததற்கு இருக்கிற காரணங்களை இங்கே பட்டியிலிட்டிருக்கும். அவசியம் படியுங்கள்.

வேலை :

வேலை :

முன்னரே குறிப்பிட்டது போலத் தான். சூழல், எந்நேரமும் போனும் கையுமாய் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது அல்லவா? அவர்களுக்கு என்று சில வேலைகள் இருக்கலாம். இந்த நேரத்தில் ஆன்லைனிலேயே இருக்கிறாய் ஆனால் எனக்கு மட்டும் பதில் வரவில்லை என்ற புகார் பலருக்கும் எழுந்திருக்கும்.

இதற்கு அந்த நபர் மட்டுமே காரணம் என்றும், உங்களை வேண்டுமென்றே தவிர்க்கிறார், உதாசீனப்படுத்துகிறார் என்று சொல்ல முடியாது. வீண் காரணங்களை ஆராய்ந்து டென்ஷனாகாமல் கூல்....

போன் :

போன் :

சந்தையில் புதுப் புது வெர்ஷன் போன் அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதற்காகவோ அல்லது நாம் புதிய போன் வாங்கி விட்டோம் என்பதற்காகவும் சாட்டிங்கில் வரிசையாக மெசேஜாக அனுப்பி தொல்லை பண்ணக்கூடாது.

பேட்டரி பிரச்சனை, போன் ஹேங் ஆவது என ஏராளமான குழறுபடிகளுடன் தான் போன் பயன்படுத்தப்படுகிறது என்பதை அவசியம் நாம் உணர்ந்து தான் ஆக வேண்டும்.

 சோம்பல் :

சோம்பல் :

என்ன இருந்தாலும் அந்த பக்கம் இருக்குறதும் மனுஷன் தானே... அவர்களுக்கும் சோம்பல்,தூக்கம் ஆகியவை இருக்கத்தானே செய்யும். அல்லது போனை விடவும் மிகவும் முக்கியமான வேலை வந்திருக்கும். என்னைய விட உனக்கு என்ன முக்கியமான வேல என்று கேட்டு பாவம் அவர்களை கார்னர் செய்ய வேண்டாமே...

யோசனை :

யோசனை :

நம்மிடம் உரையாடுவது மட்டுமே எதிரில் இருப்பவருக்கான வேலையாக இருக்காது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவருக்கான பொறுப்புகள் வீடு, அலுவலகம், நண்பர்கள், படிப்பு,எதிர்கால லட்சியம் என பல நட்புகள் இருக்கும். அவற்றிற்கும் சமமான கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். இது அவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நன்மையையே ஏற்படுத்தும்.

என்னத்த சொல்ல :

என்னத்த சொல்ல :

பல நேரங்களில் ரிப்ளை வராததற்கு இது கூட காரணமாக இருக்கலாம். நீங்கள் கேட்ட கேள்விக்கு எப்படி பதில் சொல்வது, அதைவிட என்ன பதில் சொல்வது என்ற குழப்பமே முக்கிய காரணியாக இருக்கும். ஒற்றை வரியில் சொன்னாலும் நமக்கு திருப்தியாக இருக்காது. சிறிது நேரம் யோசிக்க அவகாசம் கொடுக்கலாமே....

சொன்னாலும் புரியாது :

சொன்னாலும் புரியாது :

சில சென்ஸிடிவான விஷயங்களை காரசரமாக விவாதித்துக் கொண்டிருக்கும் போது சொன்னால் புரியாது. அதை விட மெசேஜில் அதை சொல்லி புரியவைப்பதை விட நேரில் சொன்னால் தான் சற்று விரிவாக பேச முடியும் என்று நினைத்தும் கூட உங்களுடைய மெசேஜுக்கு ரிப்ளை அனுப்பாமல் இருக்கலாம்.

அதே போல உடனே கிடைத்திட வேண்டும், பிரச்சனை ஆரம்பிக்கும் முன்பே அதற்கான தீர்வு என்னவாக இருக்கும் என்ற சிந்தனையை முதலில் நிறுத்துங்கள்.

அதோடு அவருடைய போனை அவர் வீட்டில் இருப்பவர்கள் அல்லது நண்பர்கள் யாராவது கையில் வைத்திருக்கலாம், அல்லது அருகில் இருக்கலாம்.

பாட்டு :

பாட்டு :

போனை குறுஞ்செய்திகளுக்காக மட்டுமே பயன்படுத்துவதில்லை.கேம்ஸ், பாடல்,போன் கால்,கூகுள் சேர்ச் உட்பட பலவாறாக பயன்படுத்தப்படுகிறது.

பல நேரங்களில் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிட்டு இருந்தேன் அதான் ரிப்ளை பண்ண முடியல என்ற பதில் நமக்கு கிடைத்திருக்கும். ஆன்லைன் காட்டுகிறது ஆனால் ரிப்ளை வரவில்லை என்று மேலே பார்த்தோமே... அதற்கு இதுவும் ஓர் காரணியாக இருக்கலாம்.

அதே போல ஹெட்போன் போட்டுக் கொண்டு பாடல் கேட்கும் போது மெசேஜ் டோன் நடுவில் வந்து எரிச்சலாக்கும் என்பதால் அதை சைலண்ட்டில் போட்டிருக்கலாம்.இதைவிட பாக்கெட்டில் வைத்திருக்கும் போன் சத்தம் கேட்காமலும் இருந்திருக்கலாம்.

என்னால் முடியுமா ?:

என்னால் முடியுமா ?:

உங்களை ஹேண்டில் செய்ய என்னால் முடியாது என்று அவர்கள் உணர்ந்திருக்கலாம். அதோடு உங்களை பிடிக்காமலும் இருக்கலாம். இதுவும் ஒர் காரணமாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை முதலில் உணருங்கள். உங்களிடம் எதிரில் இருப்பவரை பிடிப்பதற்கான காரணங்கள் ஆயிரம் இருப்பது போலவே, அவர்களிடம் உங்களை பிடிக்காததற்கு பல காரணங்கள் இருக்கும்.

ஆக, நாம் அனுப்பிய குறுஞ்செய்திக்கு ரிப்ளை வரவில்லை என்று சொன்னால் உடனேயே வரிசையாக மெசேஜ் அனுப்பி ப்ளாக் செய்வேன் என்று மிரட்டாமல் இந்த காரணங்களில் ஏதேனும் ஒன்றாக இருக்குமோ என்று ஆராய்ந்திடுங்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

If you Dont get reply for your messages

If you Dont get reply for your messages
Story first published: Tuesday, June 5, 2018, 17:42 [IST]
Desktop Bottom Promotion