For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலேஜ் போனா எல்லாம் என்ஜாய் பண்ணலாம்னு நினச்சுட்டேன்! my story #253

மகளுக்கு அட்வைஸ் சொல்வதற்கு பதிலாக பட்டால் தான் புரியும் என்று நினைத்த தந்தை...மகளுக்கு புரிந்ததா? தந்தை நினைத்த காரியம் நிறைவேறியதா என்பதை பற்றிப் பேசுகிறது.

|

என்ன தான் திருப்திகரமான வாழ்க்கை வாழ்ந்தாலும் இந்த கல்லூரிப் பருவத்தில் அந்த வாழ்க்கை எல்லாமே நமக்கு போதுமானதாக இருப்பதில்லை. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் வாழ்க்கை ஓடத்தில் ஓட ஆயுத்தமாக நம்மை தயார் படுத்திக் கொள்ளும் வேலை தான் நம் கல்லூரிப் பருவம்.

இப்படி யாரும் சொல்லவில்லை நானாகவே நம்பிக் கொண்டிருந்தேன். பன்னிரெண்டாம் வகுப்பு எல்லாம் வெளியில் எட்டிக் கூட பார்க்க விடாமல் ஓர் சிறைச்சாலையை கட்டமைத்து என்னை படிக்க வைத்தார்கள். வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் நேரம் கூட படித்துக் கொண்டே செல்ல வேண்டும், சில நேரங்களில் என்னை ஒப்புவிக்கச் சொல்லி அம்மா டாச்சர் செய்வார். இதோடு முடிந்ததா என்றால் விதவிதமான பெயர்களில் வைக்கப்படுகிற தேர்வுகளில் எல்லாம் முழு மதிப்பெண் பெற வேண்டும். குறைகிற ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் ஆசிரியரிடமும், அப்பாவிடமும் காரணம் சொல்ல வேண்டும்.

எல்லாம் இந்த எக்ஸாம் வைக்கும் தான். நல்ல மார்க் எடுத்து நீ நல்ல காலேஜ்ல சீட் வாங்கிட்டன்னா அவ்ளோ நீ ரிலாக்ஸ் ஆகிடலாம். ஜாலியா இருக்கலாம். உன்னைய யாரும் எதுவும் கேக்க மாட்டாங்க என்று சொல்லி சொல்லியே என் பள்ளிக்காலம் முழுவதும் கிட்டத்தட்ட என்னுடைய ஒன்பதாம் வகுப்பிலிருந்து இந்த மூளைச் சலவையை ஆரம்பித்திருந்தார்கள். அதனாலேயே காலேஜ் லைஃப் செம்மயா என்ஜாய் செய்திட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்டிப்பா ஹாஸ்டல் :

கண்டிப்பா ஹாஸ்டல் :

என்ஜாய் செய்ய வேண்டும் என்று முடிவான பின்பு ஹாஸ்டலில் வீட்டை விட்டு அம்மா அப்பாவின் கட்டுப்பாடுகளிலிருந்து வெளியேறவில்லை என்றால் எப்படி. வெளியூர் கல்லூரியில் தான் சேர்வேன்,ஹாஸ்டலில் தான் தங்குவேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தேன்.

முதலில் சம்மதிக்கவில்லை. பின்னர் சம்மதித்து ஹாஸ்டல் எல்லாம் வேண்டாம் நெருங்கிய உறவினர் இருக்கும் ஊராக பார்த்து சேர்த்துவிட அம்மா முயற்சித்தார். ஆனால் நண்பர்கள் எல்லாரும் சேருகிற கல்லூரியில் தான் சேர்வேன் என்று சொல்லி பெங்களூரில் இருக்கிற ஓர் கல்லூரியில் சேர்ந்து கொண்டேன்.

புதிய வாழ்க்கை :

புதிய வாழ்க்கை :

ஓரு கூண்டுக்குள் அடைத்து வைத்த கிளியை திடீரென்று திறந்து விட்டால் படபடவென்று பறக்கும் ஆனால் எந்த திசையில் பறக்க வேண்டும், இப்போது நாம் எங்கே செல்ல வேண்டும், நமக்கான இலக்கு என்ன என்று எதுவும் தெரியாமல் தடுமாறுமே அதுபோலத்தான்.

கல்லூரி வாழ்க்கை பயங்கர ஜாலியாய் போனது. நண்பர்களுடன் சேர்ந்து நிறைய ஊர் சுற்றினோம். அதுவும் புதிய ஊர், புதிய நண்பர்கள். அதுவரை அடைந்து கிடந்ததற்கு இப்போது சுற்றுகிறேன் இதிலென்ன தவறு... என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

எலெக்‌ஷன் :

எலெக்‌ஷன் :

இரண்டாம் ஆண்டு இறுதியில் கல்லூரியில் ஸ்டூடண்ட் எலெக்‌ஷன் நடந்தது. எங்களுக்கும் சீனியர்களுக்கும் பயங்கர சண்டை, அடிதடியெல்லாம் ஆகிவிட்டது. ஆசிரியர் வந்து சமாதனம் செய்து வைக்க எங்களில் மூன்று மாணவர்கள் சிக்கி விட்டார்கள்.

அவர்களுக்கு டிஸ்மிஸ் ஆர்டர் கொடுக்க மறுபடியும் பிரச்சனை சூடுபிடித்தது. நிலைமையை சுமூகமாக முடிக்க நினைத்த கல்லூரி நிர்வாகம். அவர்கள் மூவரும் இனி ஹாஸ்டலில் தங்க முடியாது என்றனர். ஒரு வாரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. மூன்று பேரும் ஹாஸ்டலை காலி செய்து விட்டார்கள்.

வீடு :

வீடு :

அவர்கள் சென்ற பிறகு சும்மா இருக்க முடியுமா? நாங்களும் அதே வீட்டில் சேர்ந்து கொண்டோம். இனி ஆட்டத்திற்கு அளவேயில்லை. ஹாஸ்டலில் இருந்த போதாவது. பத்து மணிக்குள் உள்ளே வர வேண்டும். சரக்கு அடிக்கக்கூடாது போன்ற சில கட்டுப்பாடுகள் இருந்தது. இப்போது அதுவும் இல்லை

என்ன பணத்திற்கு தான் கொஞ்சம் சிரமமாய் இருந்தது. அதை விட ஹாஸ்டலை விட்டு வெளியேறிவிட்டேன். நண்பர்களுடன் அறையெடுத்து தங்கியிருக்கிறேன் என்பதை வீட்டில் சொல்லி ஒகே வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

 சண்டை :

சண்டை :

சொல்ற பேச்சு கேக்காம இப்டி சுத்துறியா இனிமே என்கிட்ட பேசாத என்று சொல்லிவிட்டார் அப்பா.... அம்மா அதற்கு முன்பிருந்தே என்னிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார். அக்கா மட்டும் வாட்ஸப்பில் டிபி ஸ்டேட்டஸ் மாற்றும் போது கமெண்ட் செய்வாள்.

மற்றபடி அவளிடமும் பேச்சுவார்த்தை குறைந்திருந்தது. முதல் இரண்டு வருடங்கள் ஒரு வித மாய உலகத்திலேயே திரிந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். வீடு அல்லவா? யார் சமையல் செய்வது, கடைக்குச் செல்வது, சுத்தம் செய்வது, என ஒவ்வொரு வேலைக்கும் போட்டி ஷிப்ட் வைத்து செய்ய ப்ளான் செய்து ஒருமுறை கூட நிறைவேற்றவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்குள் சண்டை வர ஆரம்பித்தது. இனி வீட்ல சமைக்கவே வேண்டாம். அவங்க அவங்க வெளியே சாப்ட்டுக்கலாம் என்று தீர்மானித்தோம். அன்று கல்லூரிக்கு விடுமுறை எடுத்து வீட்டிலேயே தங்கியிருந்தேன்.

சமாதானம் :

சமாதானம் :

கொஞ்சம் சோர்வாக இருந்தது. மதியம் ஒரு நண்பன் வந்தான். அவன் பெட்டியிருக்கும் அறைக்குள் நுழைந்து எதோ துழாவினான். ஏய் ஏன் காலேஜ் வர்ல? என்ன பண்ற..... நீ தான் எடுத்தியா உள்ள வச்சிருந்த மூவாயிரம் பணத்த காணோம், ஏற்கனவே என்னோட ஒரு ஐபேட் காணோம் என்று கத்த ஆரம்பித்தான்.

தூக்க கலக்கத்தில் இருந்ததால் டேய் நல்லா தேட்றா நான் காலைல இருந்து சாப்ட கூட போகாம இங்கயே படுத்து கிடக்குறேன் என்றேன். அவனுக்கும் எனக்கும் வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் இந்த வீட்ட விட்டு நான் போறேன் என்று கிளம்பினான். வெள்ளிக்கிழமை நைட்டு இங்க தான வரணும்.... இப்ப கிளம்பு என்றேன்.

எங்கள் கூட்டத்திலேயே சற்று பணக்காரன், பணத்தை கணக்கில்லாமல் செலவழிப்பவன், பார்ட்டிகளின் போது மெயின் ஸ்பான்சர் எல்லாமே அவன் தான். அவன் வீட்டை விட்டு வெளியேறியது எல்லாருக்கும் சங்கடத்தை கொடுத்தது. என்னை ஜாடையாக பேச ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தனிமைபடுத்தப்பட்டேன்.

மிஸ் யூ ம்மா :

மிஸ் யூ ம்மா :

கல்லூரியிலும் சரியாக பேசவில்லை, வீட்டிற்கு தாமதமாக வந்தால் கூட யாரும் கேட்கவில்லை. அப்படியே என் உலகம் மாறியிருந்தது வீட்டிற்கு போன் செய்தாலும் என்ன இப்ப தான் அம்மான்னு ஒருத்தி இருக்குறது நியாபகம் வந்துச்சா? என்ன பணம் போடணுமா? என்ற மாதிரியான கேள்விகள்....

திடீரென்று மீண்டும் ஓர் சிறை. இந்த சிறையில் நான் மட்டுமேயிருந்தேன். தனிமைச் சிறை மிகவும் கொடுமையாக இருந்தது. சுற்றிலும் ஆட்கள் இருக்கிறார்கள் தான்.... ஆனால் இது மிகவும் கொடுமையாக இருந்தது.

சென்னையில் இருக்கிற தோழியின் வீட்டிற்கு சில நாட்கள் தங்கிவிட்டு வரலாம். இந்த சூழலிருந்து நான் தப்பிக்க வேண்டும் என்று சொல்லி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினேன்.

புதிய நட்பு :

புதிய நட்பு :

இரண்டு நாட்கள் கழித்து போன் வந்தது. எங்கயிருக்க? சொல்லிட்டு போக மாட்டியா? காலேஜ்ல லெட்டர் கேக்குறாங்க என்றார்கள்.... நான் பேசிக்கிறேன் என்று சொல்லி வைத்து விட்டேன். உடன் இருந்தவள் இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை என்ற பதட்டம் கொஞ்சம் கூட இல்லையே கல்லூரியில் கேட்கவில்லை என்றால் இந்த போனும் வந்திருக்காது....

தோழியிடம் நடந்த எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. சும்மா ஊர் சுற்ற வந்திருப்பதாக சொன்னேன். நண்பர்களை எல்லாம் அறிமுகப்படுத்தினாள்.... அவளின் அம்மா என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்.

இப்படியெல்லாம் என் அம்மா என்னிடம் ஒரு நாளும் பேசியதில்லையே என்று நினைத்துக் கொண்டேன். அவளும் என்னைப் போலவே பன்னிரெண்டாம் வகுப்பு வரை சிறையில் இருந்தவள் தான்.

ஆனால் அந்த சிறையை விட்டு வெளியேற அவள் முயற்சிக்கவில்லை. அதே சிறை தான். ஆனால் இப்போது அந்த சிறை அன்பாலும், சந்தோஷத்தாலும் நிறைந்திருக்கிறது.

எனக்காக யாருமேயில்ல :

எனக்காக யாருமேயில்ல :

எல்லாரும் சுற்றியும் இருப்பது போலவே ஓர் பிம்பத்திலேயே இவ்வளவு நாட்கள் காலத்தை ஓட்டியிருக்கிறோம். ஆனால் உண்மையில் எனக்காக இங்கு யாருமேயில்லை என்று நினைக்க நினைக்க அழுகை வந்தது.

நான் கல்லூரிக்குச் சென்று ஒரு வாரத்திற்கும் மேலாகியிருந்தது. கல்லூரியிலிருந்து வீட்டிற்கு போன் செய்திருக்கிறார்கள்.

அதிசயமாக அப்பாவிடமிருந்து போன்.... கேட்ட முதல் வார்த்தை எங்கயிருக்க? கல்லூரியிலிருந்து போன் செய்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. சென்னைல தோழியின் பெயரைச் சொல்லி அவ வீட்ல என்றேன்.

சொல்லிட்டு போகமாட்டியா எல்லாமே விளையாட்டா போச்சா உனக்கு என்று கத்துவார் என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தேன்.... ஆனால் எதுவும் சொல்லாமல் போனை வைத்துவிட்டார்.

வாழ்க்கைப் பாடம் :

வாழ்க்கைப் பாடம் :

அன்று இரவே அம்மாவும் அப்பாவும் கிளம்பி சென்னை வந்துவிட்டார்கள். அவர்களை அங்கே பார்த்த நேரத்தில் அதிர்ச்சியில் எனக்கு பேச்சே வரவில்லை அழுது கொண்டே போய் கட்டிபிடித்துக் கொண்டேன்.

எங்க போனாலும் இங்க தான் திரும்பி வரணும். ரொம்ப கட்டுப்பாடு விதிக்கிற மாதிரி தெரியும் ஆனா அந்த கட்டுப்பாடு அவசியம். அது இல்லன்னா நம்மலால தாங்க முடியாது என்று அன்றைக்கு ஒரே அட்வைஸ் மழை தான்.

ஓடிக் கொண்டிருக்கிறது :

ஓடிக் கொண்டிருக்கிறது :

மீண்டும் ஹாஸ்டலில் சேர்ந்தேன். அந்த நண்பர்கள் அவ்வப்போது வந்து பேசினார்கள்.... நீ அன்னக்கி சொல்லாம அப்பிடி போயிருக்கக்கூடாது நாங்க எங்க எல்லாம் தேடினோம் தெரியுமா? என்று செயற்கையாக விசாரித்தார்கள்.

இதுவும் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த ஓர் பாடம் அதுவே இறுதியானதல்ல என்று ஏற்றுக் கொண்டேன். வாழ்க்கை முழுக்கவே கொண்டாட்டமாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட்டுவிட்டு கொண்டாட்டம் வாழ்வின் ஓர் பகுதி என்பதை உணர்ந்து கொண்டேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life love my story relationship
English summary

Father Taught Her Daughter a Valuable Lesson

Father Taught Her Daughter a Valuable Lesson
Story first published: Monday, May 14, 2018, 13:47 [IST]
Desktop Bottom Promotion