ஆச்சரியங்களை அள்ளித்தெளிக்கும் முதல் காதல்! காதலியை இப்படியா சந்திக்கணும்! my story #151

Subscribe to Boldsky

வாழ்க்கையில் மிகவும் பிடித்தமான நாட்கள் என்றால் நான் கண்டிப்பாக என்னுடைய பள்ளி நாட்களை குறிப்பிடுவேன்... நண்பர்கள் கூட்டம் அப்போது தான் சேர ஆரம்பிக்கும். வாழ்க்கை குறித்த எந்த பயமோ... திட்டமோ முன் யோசனையோ எதுவும் இருக்காது. 

வாழ்க்கையை எந்த வித முன் அபிப்ராயங்களின்றி அணுகுவோம். அப்படியான இளம் வயதில் ரசித்தவற்றை இருபது வருடங்கள் கழித்து ஏன்.... அறுபது வருடங்கள் கழித்து நம்முடைய முதுமைப் பருவத்தில் நினைத்தால் கூட மிகவும் சுவாரஸ்யமானதாய் இருக்கும். 

Boy Meets Here First Love who Loved at her school class
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கெட் டூ கெதர் :

கெட் டூ கெதர் :

இந்நேரம் என்னுடன் படித்த பலரும் வேலை... குடும்பம் என்று செட்டிலாகி இருப்பார்கள். பலரும் வெளியூர்களுக்கு வந்துவிட்டோம். இந்நிலையில் நாங்கள் படித்தப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னால் மாணவர் சங்கம் சார்பாக எல்லாருக்கும் அழைப்பு வந்திருந்தது.

Image Courtesy

போய் பார்க்கலாம் :

போய் பார்க்கலாம் :

யாரை எங்கிருந்து பிடித்தார்கள்... என்னுடைய தொடர்பு எண் எப்படி கிடைத்தது என்று எதுவும் புரியவில்லை... யார் யாரோ பேசினார்கள். அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பள்ளியில் செய்த சேட்டைகளை, வாங்கிய திட்டுக்களை, அடிகளை எல்லாம் நினைவூட்டி மறந்துட்டியாடா என்று பேசினார்கள்.. ஏதோ எனக்கே இருபது வயது குறைந்து மீண்டும் பள்ளிக்குச் சென்ற உணர்வு.

 நண்பர்கள். :

நண்பர்கள். :

இப்போது நான் படித்த பள்ளி எப்படியிருக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று தோன்றியது. அதைவிட உடன் படித்த நண்பர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எப்படியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று ஆர்வத்துடன் கண்டிப்பாக சொல்லிவிட்டான்.

அங்கே வேறு யார் வருவார்கள் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டது... யார் பெயர் விடுபட்டுள்ளது... அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் என்று தேடி அவர்களையும் அழைக்கும் வேலை மும்முரமாக நடந்தது.

சத்யா :

சத்யா :

பேச்சுவாக்கில் சத்யா பெயரும் அடிப்பட்டது.... சத்யா மறக்க முடியுமா இந்தப் பெயரை... என் வாழ்க்கையில் வந்த முதல் தேவதையாயிற்றே... எட்டாம் வகுப்பிலிருந்து அவள் மீது ஒரு மையல்...

அவளுக்காக அவளை பார்க்க வேண்டும் என்பதற்காக சைக்கிளை உருட்டிக் கொண்டு பன்னிரெண்டு கிலோமீட்டர் அவளுக்கு பின்னால் சென்றிருக்கிறேன். பதினோராம் வகுப்பில் தான் பிறருக்குத் இந்த விஷயம் தெரிந்தது. அப்போதும் சத்யாவிடம் நேராக சென்று பேசும் தைரியம் எனக்கு இருக்க வில்லை.

கடைசி நாள் :

கடைசி நாள் :

பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித்தேர்வு முடிந்து எல்லாரும் கிளம்பிய நேரம். என்னுடைய கூட்டாளிகள் சிலர்... மாப்ள இதவிட்டா நீ சத்யா பாக்கமுடியாதுடா ஒழுங்கா போய் உன் லவ்வ சொல்லு என்று கிளப்பிவிட்டார்கள்.

தயங்கி தயங்கி சென்றேன்.

தயங்கி தயங்கி சென்றேன்.

அவளை பள்ளி முழுவதும் தேடினேன்.... எங்கும் ஆளில்லை. இரண்டாவது மாடி வகுப்பறையில் ஒவ்வொரு அறைக்குச் சென்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

போகாத சத்யா :

போகாத சத்யா :

மேலேயிருந்து எதேச்சையாக கீழே பார்க்க.... வாசலில் ஒருவர் டிவிஎஸ் 50யில் வந்தார். அவரின் பின்னால் ஓடிச்சென்று ஒருத்தி ஏறுகிறாள்....

சத்யா... அது சத்யா தான். மேலேயிருந்து சத்யா... நில்லு போகாத சத்யா என்று கத்திக் கொண்டே ஓடினேன்.... ஆனால் அவள் மறைந்து விட்டாள். நான் வருவதற்குள்ளாக அவள் சென்றுவிட்டாள். கடைசியாக அவளுக்கு ஒரு பாய் கூட சொல்ல முடியவில்லை ஏன் அவளின் முகத்தைக் கூட சரியாக பார்க்க முடியவில்லை.

நண்பர்களின் வாக்கு :

நண்பர்களின் வாக்கு :

எந்த நேரத்தில் வாய் வைத்தார்களோ நண்பர்கள் சொன்னது போல அதற்க்குப்பிறகு சத்யாவை சந்திக்கவே முடியவில்லை.

இத்தனை ஆண்டுகள் கழித்து நிகழப்போகும் கெட் டூ கெதரில் மீண்டும் அவள் பெயர்.... சத்யா... அவள் வருவாளா? இத்தனை ஆண்டுகள் கழித்து என்னை அடையாளம் கண்டு கொள்வாளா?எதுவும் தெரியவில்லை.

தொடர்பில் இல்லை :

தொடர்பில் இல்லை :

சத்யாவை அழைக்க வேண்டும் என்று பேச்சு எழுந்தவுடன் சொல்லி வைத்தாற் போல எல்லாரும் இவனிடமே வந்து சத்தியாவின் தொலைபேசி எண்ணை கேட்டார்கள் .

அவ்வளவு நம்பிக்கையா? ஒவ்வொருரிடமும் சத்தியாவைப் பற்றி எனக்குத் தெரியாது.... என்று சொல்லி சொல்லியே அவனுக்கு பாதி உயிர் கழண்டு விடும் போலிருந்தது.

அந்த நாள் :

அந்த நாள் :

திட்டமிட்டபடி எல்லாரும் தங்களது குடும்பத்தினருடன் பள்ளிக்குச் சென்றார்கள். சட்டை கிழித்து சண்டையிட்டவன். இன்று வந்து தோல்தட்டி கைகுலுக்கி வரவேற்கிறான்.அழுக்கச்சட்டையோடு வந்து ஆசிரியரிடம் அடி வாங்கியவன். இன்று ப்ராண்டட் ஷர்ட் அணிந்திருந்தான். மாடு மேய்க்க கூட லாயிக்கில்ல என்று புகழ்ப்பெற்ற நண்பன் வங்கியொன்றில் உயர்பொறுப்பிலிருந்தா.

எவ்வளவு மாற்றங்கள்.... எத்தனை முகங்கள். எத்தனை விசாரிப்புகள்.

ஆசிரியர் :

ஆசிரியர் :

மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் அங்கே வந்திருந்தார்கள் பிடி வாத்தியார் . வருவதைக் கண்டாலே பயந்து நடுங்கி ஓடும் மாணவர்கள் இப்போது அவருக்கு சமமாக நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இவருக்கு என்னா வயசிருக்கும்டா.... எங்க பெரியண்ணன் படிக்கிறதுல இருந்து இந்த வாத்தி இப்டியேதாண்டா இருக்காரு என்று நாங்கள் பேசிய தமிழ் வாத்தியார். இப்போதும் அப்படியே தான் இருக்கிறார். ஆனால் கொஞ்சம் தளர்ந்திருந்தார்.

அறிமுகம் :

அறிமுகம் :

ஒவ்வொரு நண்பரிடத்திலும் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டான். மனைவியையும் மகளையும் அறிமுகப்படுத்தினான். சிலரை உடனேயே அடையாளம் கண்டுகொண்டாலும் பலரை யாரென்று அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன் இதே பள்ளியில் நடந்த சம்பவங்களை விவரித்தப் பின்னர் லேசாக நினைவுக்கு வந்தது.

சத்யா :

சத்யா :

எங்கே என் முதல் காதலி? என் தேவதை.... பார்த்தவுடன் அவளை அடையாளம் காண்பேனா அல்லது அவள் ரொம்பவே மாறியிருப்பாளா யாரிடம் கேட்க... யாரிடமாவது கேட்டாள்.. மச்சி நீ இன்னும் சத்தியாவ மறக்கலையா என்று பிடித்துக் கொள்வார்களோ என்று பயமாகவும் இருந்தது.

யாரிடமும் கேட்கக்கூடாது நாமே கண்டுபிடிக்கணும். என்று யாருக்கும் தெரியாமல் தேட ஆரம்பித்தான்.

மகள் :

மகள் :

பல நிகழ்சிகள், பல போட்டிகள்... பேச்சாளர்கள்... விருதுகள்... என்று களைகட்டிய விழாவில் இவன் மட்டும் இறுக்கமாய் இருந்தான். ஓரிடத்தில் நின்றிருந்தாலும் கண்கள் முழுக்க சத்தியவைத் தேடி அலைந்து கொண்டிருந்தது.

மகள் பசிக்காக அழ... அவளை சமாதனப்படுத்த நிகழ்ச்சி நடக்கும் அரங்கிலிருந்து வெளியே கூட்டி வந்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.

ஒரு குரல் :

ஒரு குரல் :

ஸ்பீக்கரில் பாட்டு போட்டு அலறவிட்டிருந்தார்கள். அதற்காகவே பயந்து அழுதாள் மகள்.

சற்றுத் தள்ளி வண்டிகள் நிற்குமிடத்தில் நின்று கொண்டு போடப்பட்டிருந்த சீரியல் லைட்டுகளை காட்டி பேசிக்கொண்டிருந்தான் மகளுடன்.

லவ் பண்ணது உண்மை தான் ;

அப்போது ஹாய்... என்றது ஒரு குரல்.

திரும்பிப் பார்க்க ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள்.

ஐயோ யாருன்னு தெரியலையே.... நம்ம கிளஸா பக்கத்து கிளாஸா? என்று யோசித்துக் கொண்டே ஹாய் என்றான்.

அருகில் வந்து சத்யா என்று அந்தப் பெண் ஆரம்பிக்க....

குட்டி சத்யா :

குட்டி சத்யா :

அடடா.. இன்னும் எத்தன பேர் கேப்பீங்க.... ஆமா... எட்டாவது ல இருந்து அவள லவ் பண்ணேன் தான். கடைசி நாள் அவள பாக்கக்கூட இல்லங்க சத்தியமா அவளோட காண்டாக்ட் நம்பர் என்ட்ட இல்லங்க என்று கொட்டினான்.

வெயிட்... வெயிட்.....

ஐ.. ம் சத்யா என்றாள்.

ஒரு கணம் திக்குமுக்காடி.... அவனக்கு பேச்சே வரவில்லை... சத்யா நீ... சாரி நீங்க அடையாளமே தெரியல... உங்களத்தான் தேடிட்டு இருந்தேன்

ம்ம்ம்.... பாத்தேன் பாத்தேன் நீங்க தேடுறத அதான் நானே வந்தேன்.

அப்றம் குட்டி சத்யா எப்டியிருக்காங்க? என்று மகளைக் கொஞ்சினாள்.

பொண்ணு பேரு.... எப்டி உங்களுக்குத் தெரியும்.

முதல் காதல் எப்போதும் ஆச்சரியத்தை தெளித்துக் கொண்டேயிருக்கும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Boy Meets Here First Love who Loved at her school class

    Boy Meets Here First Love who Loved at her school class
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more