Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
நண்பர்கள் தினத்தன்று ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய காதலர் தினம் நடிகை!
நண்பர்கள் தினத்தன்று ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய காதலர் தினம் நடிகை!
எத்தனை கடுமையான காலமாக இருந்தாலும், உடன் நண்பர்கள் இருந்தால் அந்த சோகம் தெரியாது. வீட்டில், அலுவலகத்தில் எத்தனை பிரச்சனை இருந்தாலும் நண்பர்களுடன் செலவிடும் அந்த சிறிது நேரம் நாம் அனைத்தையும் மறந்து, நம்மையும், நம்மை சூழ்ந்திருக்கும் பிரச்சனைகளை மறந்து நிம்மதியாக, சந்தோஷமாக வாய்விட்டு சிரித்து மகிழ்வோம் அல்லவா... அது தான் நட்பு.

இதிகாசங்களில், புராணங்களில் நிறைய வரலாற்று காதலும் நட்பும் கண்டிருப்போம், படித்திருப்போம். அதில் பிரிந்த காதல்கள் நிறைய இருக்குமே தவிர, பிரிந்த நண்பர்கள் மிகமிக குறைவே. ஒரு காதல் தோல்விக்கு பிறகு வேறொரு சிறந்த காதல் கூட கைகூடலாம். ஆனால், ஒரு உன்னதமான நண்பனிடம் இருந்து நாம் பெற்ற நட்பினை வேறு யாராலும் கொடுக்க இயலாது. நட்பின் சிறப்பே அதுதான்.

புற்றுநோய்!
சில வாரங்களுக்கு முன்னர் காதலர் தினம் படத்தில் நடித்த நடிகை சோனாலி பிந்த்ரே தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அது அபாயமான கட்டத்தை அடைந்த பிறகு தான் கண்டறியப்பட்டதாகவும் கூறி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறி இருந்தார்.
பிறகு, சிகிச்சைக்காக தனது கூந்தலை கட் செய்த படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். ஆனால், இன்று நண்பர்கள் தினத்தன்று அவர் தனது முழு கூந்தலையும் இழந்த நிலையில் ஒரு வலிமிகுந்த, அழகான நட்பு குறித்த வாழ்த்து செய்தியை பதிவிட்டிருக்கிறார்.
இது அவரது ரசிகர்கள் மற்றும் அவர்மீது அக்கறை கொண்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும். அவரது மனவலிமையானது அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது. இதோ! தனது நட்பு / நண்பர்கள் குறித்து சோனாலி பிந்த்ரே இன்று பதிவிட்டிருந்த தகவல்...

செய்தி!
இது நான் தான். இந்த தருணத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மக்கள் என்னை வினோதமாக காண்கிறார்கள். ஆனால், இது தான் உண்மைகள். அது ஏன் என்று உங்களிடம் கூற விரும்புகிறேன். நான் இப்போது எனது வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் அதிக கவனம் செலுத்துகிறேன், மகிழ்ச்சியை அளிக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் எதிர்கொள்ள விரும்புகிறேன். ஆம்! இந்த சூழலில் நான் மிகுந்த வலியுடனும், சக்தி இன்றியும் தான் இருக்கிறேன்.

பிடித்தவை!
ஆனால், இப்போது நான் எனக்கு என்ன பிடிக்குமோ அதை செய்கிறேன். நான் எனது நண்பர்களுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அவர்கள் தான் எனது பலம், வலிமை. அவர்களது பிஸியான தருணங்களிலும் என்னிலை அறிந்து என்னுடன் நேரம் செலவழிக்க அவர்கள் வந்திருக்கிறார்கள்.
அவர்களது பிஸியான நிகழ்சிகளை எல்லாம் தள்ளி வைத்து என்னுடன் நேராக, அழைப்புகள், ஃபேஸ் கால், மெசேஜ் என எப்படி எல்லாம் என்னை தொடர்புக் கொள்ள முடியுமா... அப்படி எல்லாம் என்னுடன் எப்போதும் இருக்க முயற்சிகிறார்கள். என்னை ஒருபோதும் தனிமையாக உணரவிடாமல் அவர்கள் என்னுடன் துணை நிற்கிறார்கள்.
உண்மையானவர்கள்!
உண்மையான, உன்னதமான நட்பை வெளிப்படுத்தும் என் நண்பர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள். (இந்த படத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே)

இதுவும் அழகுதான்!
இப்போதெல்லாம் நான் எங்கேனும் செல்ல வேண்டும் என்றால், மிக குறைந்த நேரமே எடுத்துக் கொள்கிறேன். ஏனெனில், அதை நேரம் சிகை அலங்காரம் செய்துக் கொள்ள, அதில் கவனம் செலுத்த இப்போது தேவையில்லை. முடி இல்லாமல் இருப்பதும் அழகு தான். நேர்மறை எண்ணங்களை தேடி வளர்த்துக் கொள்ளுங்கள்., என நண்பர்கள் தினத்தன்று நட்பு மற்றும் தனது நண்பர்கள் குறித்து சோனாலி பிந்த்ரே இன்ஸ்டாகிராம் பதிவில் தனது சமீபத்திய படத்துடன் தெரிவித்துள்ளார்.
விரைவில் புற்றுநோயில் இருந்து பூரண குணமடைந்து, நல்வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப சோனாலி பிந்த்ரேவுக்காக பிரார்த்தனை செய்துக் கொள்வோம்.



Click it and Unblock the Notifications
