நீங்கள் நேசிக்கும் ஒரு பெண் உங்களை தவிர்த்தால் என்ன செய்யணும்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ஆனால் அவள் உங்களை தவிர்த்துக் கொண்டேயிருக்கிறாள். பலரும் கடந்து வந்த கதையாகத்தான் இருக்கும். காதலில் இருக்கும் பெரிய சிக்கலே இது தான். நாம் நேசிக்கும் பெண்ணுக்கு நம்மை பிடிக்கிறதா என்று தெரியாது. அதை அவர்களிடம் சொல்லியாகவேண்டும் என்று நீங்கள் செய்யக்கூடிய தகிடதத்தங்களால் என்னென்ன பாதிப்புகளை சந்தித்திருப்பீர்கள்.

ஒருவர் நிராகரிப்பது, தவிர்ப்பது என்பது உங்களை தாழ்த்துவது போல நீங்கள் உணர்வீர்கள். இதலிருந்து வெளியே வர நினைப்பவர்கள் இதனை தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை :

உண்மை :

உண்மையிலேயே நீங்கள் அந்தப் பெண் மீது அன்பு வைத்திருக்கிறீர்களா என்பது அந்தப் பெண்ணுக்கு தெரியாது. ஒரு சந்தேகத்துடன் தான் உங்களை தவிர்த்திருப்பாள்.

எந்த அளவுக்கு நீங்கள் அந்தப் பெண்ணை நேசிக்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள். பேசும் சந்தர்ப்பங்கள் கிடைக்காத போது மெஸேஜ்,மெயில் போன்றவற்றை முயற்றிக்கலாம்.

இடைவேளி :

இடைவேளி :

உங்களுக்கு பிடித்தவிட்டால் அதே போல அவர்களுக்கும் பிடிக்க வேண்டும் உங்களுக்கு காதல் வந்த அதே தினத்தில் இவர்களுக்கு காதல் வர வேண்டும் என்று நினைக்காதீர்கள்.

ஒரு சின்ன இடைவேளி இருக்கட்டும். வழிய போய் பேசுவதை கொஞ்சம் தவிர்க்கப் பழகுங்கள் அவளாகவே வந்து பேசிடுவாள்.

கேள்வி :

கேள்வி :

அவள் தவிர்ப்பதற்கான காரணத்தை நீங்களாகவே ஒன்றை யூகித்து முடிவு செய்து கொள்ளாதீர்கள். தொடர்ந்து தவிர்க்கிறார்கள் என்றால் அதற்கான காரணத்தை கேளுங்கள்.

நீங்கள் கேட்கப்போகும் தொனியும் இடமும் இதில் முக்கியப்பங்காற்றுகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

நேரம் :

நேரம் :

நீங்கள் ஃப்ரீயாக இருக்கும் எல்லா நேரத்திலும் அவளும் ஃப்ரீயாக இருப்பாள் என்று நினைக்காதீர்கள்.

உங்களை தவிர்க்கிறார் என்றால் அங்கே அவருக்கு என்ன வேலை இருக்கிறதோ என்ன நெருக்கடியான சூழல் இருக்கிறதோ என்று நினைத்துப் பாருங்கள் அதை விடுத்து என்னை தவிர்க்கிறாள் என்று நீங்களாகவே கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.

ஒரே கேள்வி :

ஒரே கேள்வி :

அவர்களை முகம் சுழிக்க வைக்ககூடிய செயல்களை தொடர்ந்து செய்யாதீர்கள். தொடர்ந்து உங்கள் கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் காரணத்தை மட்டும் கேட்டுக் கொண்டேயிருக்காதீர்கள்.

அது எரிச்சலைத் தான் அதிகப்படுத்தும். மாறாக அவர்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக வேறு விஷயத்தை பேசுங்கள்.

நிறுத்தலாம் :

நிறுத்தலாம் :

உங்களின் எந்த முயற்சிக்கும் அவர்கள் செவி சாய்க்கவில்லை என்றால் சந்தோஷமாக விலகி வந்துவிடுங்கள். வற்புறுத்தலின் பேரில் உங்களை அன்புக் கொள்ளச் செய்ய வேண்டும் என்று நீங்கள் முயற்சிப்பது அத்தனையும் வீணானது என்பது புரிந்து பிறகு மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணை துன்புறுத்துவது தவறு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

what should you do when a girl ignores you

what should you do when a girl ignores you
Story first published: Thursday, September 7, 2017, 17:04 [IST]
Subscribe Newsletter