For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அறம் படத்துல நீங்க இதெல்லாம் கவனிச்சிங்களா?

அறம் திரைப்படத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

|

அறம்! 'அவள்'-ஐ கண்டத்தில் அச்சம் தொற்றிக்கொண்டது. அறத்தை கண்ட போது பதட்டம் பற்றிக் கொண்டது. விண்ணுக்கு சாட்டிலைட் அனுப்பி என்ன பயன். 36 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற வெறும் கயிறை தவிர நம்மிடம் வேறேதும் இல்லையே.

அறம் அரசிற்கு மட்டும் பாடம் கற்பிக்கவில்லை. இந்த சமூகத்தின் கூட்டமைப்பில் சமப்பங்கு கொண்டிருக்கும் ஒவ்வொரு தனிமனித வாழ்வு குறித்தும், பெற்றோர் - குழந்தை உறவு குறித்தும், ஒன்று சேர்ந்து வாழும் ஊர் குறித்தும் பல கருத்துக்கள், பாடங்கள் எடுத்துரைத்துள்ளது.

உறவுகள், வாழ்க்கை, சமூகம் என அறத்தில் நீங்கள் கூர்மையாக கவனித்திருக்க வேண்டியவை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கனவுகள்!

கனவுகள்!

தான் ஒரு சிறந்த கபடி வீரனாக வர வேண்டும் என்ற கனவு கொண்டிருந்த தந்தை. அது கானலாய் போனதன் காரணத்தால். இந்த சமூகம் மற்றும் அரசால் கனவு தகர்ந்ததால். இது எப்படிப்பட்டதான விளைவு அளிக்கும் என அறிந்தே, தனது குழந்தை நீச்சலில் சிறந்த திறன் பெற்றிருந்த, அவனை கல்வியையும் சேர்த்து பிடித்துக் கொள், ஒன்று கைவிட்டாலும், மற்றொன்று உன்னை தாங்கிப் பிடித்துக் கொள்ளும் என கூறுவது, தனது பிள்ளையின் கனவை தகர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. ஒரு போதும் தனது பிள்ளை வீழ்ந்துவிட கூடாது என்ற பாசத்தில்.

தாய் பாசம்!

தாய் பாசம்!

அவன் ஐ.டி-யில் வேலை செய்பவனாக இருந்தாலும் சரி, தின கூலியாக இருந்தாலும் சரி. தந்தை, தாயானவர் ஓவர் டைம் பார்ப்பது. அவரவர் நகைநட்டு செய்து மாட்டிக் கொள்வதற்கு அல்ல. தங்கள் குழந்தைகளின் கனவுகள், ஆசைகள், எதிர்காலத்தை வலுவாக்க மட்டுமே. வேகாத வெயிலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போதும். இடையே கிடைக்கும் டீ, பிஸ்கட்டுக்கு அனைவரும் முந்தியடிக்கும் போது, அதைவிடுத்து எங்கே எனது குழந்தை என தேடுவது தான் தாயின் பாசம்.

அதிகாரி எனிலும்...

அதிகாரி எனிலும்...

ஐ.ஏ.எஸ்-ஆக இருந்தாலும் சரி, விவசாயம் செய்பவராக இருந்தாலும். உலகே போற்றும் பெரிய அதிகாரியாக இருந்தாலும். மனித நேயம் இருந்தால் மட்டுமே அவர்கள் மனிதர்கள். இல்லையேல், வரும் சடலம் அவ்வளவு தான். அரசாங்கம், மருத்துவர்கள், தொழில்நுட்பம் என அனைத்தும் கைவிட்ட பிறகு, அந்த பிஞ்சு குழந்தையை காத்தது மனித நேயம் தான்.

குழந்தை செல்வம்!

குழந்தை செல்வம்!

எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத செல்வம் குழந்தை செல்வம். மகன் அருகே இருக்கும் போது, நீ (ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த மகளிடம்) இல்லை என்றால் நானும், உன் அப்பனும் செத்திடுவோம். எங்கக்கிட்ட வந்திடு என கதறும் தாயின் அழுகையில் புரியும். குழந்தை செல்வதின் மதிப்பு என்னவென்று.

ஆணின் கண்ணீர்!

ஆணின் கண்ணீர்!

தனக்கு உயிர் கொடுத்தவர்கள் இறக்கும் போது கூட ஆண் பெரிதாக கண்ணீர் சிந்துவதில்லை. ஆனால், தனது உயிரில் இருந்து பிறந்த தன் மக்கள் கஷ்டத்தில், வறுமையில் வாடும் போதும், உடல்நலம் குன்றியோ, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் போதோ தான், ஆணின் விலைமதிப்பற்ற கண்ணீர் இமை எனும் மடைகளை உடைத்துக் கொண்டு பீறிட்டு வந்துவிடுகிறது.

சமூகம்!

சமூகம்!

வாழ்க்கை என்பது அம்மா, அப்பா, மகள், மகன் மட்டும் வாழ்வதல்ல. தன்னை சுற்றி இருப்பவருடன் சேர்ந்து கூட்டாக வாழ்வது தான் வாழ்க்கை. உதவ இயலவில்லை எனிலும், கஷ்டம் எனும் போது ஆறுதல் கூறவும். வெற்றிப்பெறும் போது மகிழ்ந்து பேசவும் நம்மை சுற்றி நல்லவர்கள் நால்வர் இருக்க வேண்டும். ஒரு குழந்தையின் உயிர் காக்க ஓர் ஊரே போராடுவது தான் மனித வாழ்க்கை. ஒன்று கூடி வாழாத வாழ்க்கை இருந்தென்ன பயன், இறந்தென்ன பயன்.

நீர்!

நீர்!

நீர் இன்றி அமையாது உலகு என்பார்கள். ஆம்! நீர் இன்று இவ்விலகில் எந்த தாவரமும், விலங்கும், மனிதரும் உயிர் வாழ்ந்துவிட முடியாது. அதே போல, மனித நேயமும் வேண்டும். சென்னை, கோவை, தென் மாவட்டங்கள் என தமிழகத்தில் தண்ணீர் பஞ்சத்தில் வாடாத இடமே கிடையாது. ஆனால், எந்நாளும் வாட்டர் பாட்டில்களும், கேன்களும், தண்ணீர் லாரிகளும், எங்களிடம் தண்ணீர் இல்லை என கூறியதே இல்லை.

நீர் விற்பனைக்கு வந்தது, மனித நேயம் கேட்பாரற்று போனது.

அரசு!

அரசு!

வாழ்க்கை என்பது சமூகம் எனும் வட்டத்திற்குள் அமைந்துள்ளது. அந்த சமூகத்தை வெயிலிலும், மழையிலும் வாடாமல் பார்த்துக் கொள்ளும் குடை தான் அரசு. மக்களுக்கு தேவைப்படும் போது, உண்ட மயக்கத்தில் தரையில் பிரண்டு படுத்துறங்கும் மக்களின் பணியாளுக்கு வியர்க்காமல் இருக்கவல்ல குடை. அரசு மக்களுக்கானது. அந்த அரசை நல்லதாக அமைப்பதில் மக்களுக்கும் பங்கிருக்கிறது.

கேள்வி!

கேள்வி!

பெற்றோர், ஆசிரியரிடம் கேள்வி கேட்காத குழந்தை புத்திசாலியாகாது. தனது அரசிடம், தனக்காக வேலை செய்யும் அதிகாரியிடம் கேள்வி கேட்காத ஊர் வளர்ச்சி அடையாது. கேள்வி கேட்க வேண்டியது நமது உரிமை, அதற்கு பதில் அளிக்க வேண்டியது உத்தியோகத்தில் இருக்கும் அனைவரின் கடமை. ஒருவர் மட்டுமே கேள்வி கேட்டால் மாற்றம் வந்துவிடாது.

ஒன்று சேர்வோம்!

ஒன்று சேர்வோம்!

சாதாரண கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்றால் கூட 11 பேரும் சிறந்து ஒன்றுகூடி செயல்பட வேண்டும் எனில், நமது சமூகம், சமூகத்தில் அடங்கியிருக்கும் ஒவ்வொரு தனிமனித வாழ்வில் மாற்றம்,முன்னேற்றம் அடைய வேண்டும் எனில் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுகூடி சேர்ந்து ஒருசேர நமது குரலை உயர்த்த வேண்டும். அது இடியாய் அரசின் தலைமேல் அதிரும்படி ஒலிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Relationship Tips From The Movie Aram

Relationship Tips From The Movie Aram
Desktop Bottom Promotion