இந்த 5 வகையான பெண்களில் உங்களுக்கு பிடிச்ச நபர் யார்?

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் தான் இருக்குமா மச்சி? இல்லவே இல்லை. எல்லாரிடமும் எல்லா ஃபீலிங்கும் இருக்கும். ஆனால், அந்தந்த சூழலில் அவர் எந்தெந்த ஃபீலிங்கை அதிகமாக வெளிப்படுத்துகிறாரோ, அதை வைத்து நாம் அவர் நல்லவர், கெட்டவர் என வகை பிரிக்கிறோம்.

அந்த வகையில், பெண்களில் இருக்கும் ஐந்து வகைகள், அவர்கள் குணாதிசயங்கள், பண்புகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். அவர்களில் எந்த வகையான பெண்களை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள், வெறுக்கிறீர்கள் என்பதை நீங்கள் எங்களிடம் கமெண்டுகளில் கூறுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூல்!

கூல்!

முகம் பார்க்கும் கண்ணாடி போல மனதில் பட்டதை முகத்திற்கு நேரே கூறிவிட்டு நகரும் நபர்கள். இவர்களிடம் ஒரு முதிர்ச்சி இருக்கும். எதையும் எளிதாக எடுத்துக்கொள்வார்கள்.

தலையில் கனத்தை ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். ஒரு செயலில் நிதானமாக இருப்பார்கள். பேசி சண்டையை பெரிதுப் படுத்துவதற்கு பதிலாக. அங்கே இருந்து அமைதியாக விலகி சென்றுவிடுவார்கள்.

ட்ரூ... ட்ரூ... ட்ரூ...

ட்ரூ... ட்ரூ... ட்ரூ...

அடிப்படையில் நல்லவர்களாக இருப்பினும், இவர்கள் சொல் புத்திக் காரர்கள். யார் என்ன கூறினாலும், அதை அப்படியே நம்பி ஆமாம் சாமி போடும் நபர்கள்.

இவர்களுக்கு எதுவும் பெரிதாக தெரியாவிட்டாலும், அதை தான் முழுதாக அறிந்தது போல நடந்துக் கொள்வார்கள். இவர்களால் எந்த பிரச்சனையும் வராது என்றாலும், இவர்கள் போடும் "ஆமாம் சாமி" மற்றவர்களுக்கு வலு சேர்க்கலாம்.

விஷம்!

விஷம்!

தன்னை பற்றி ஒருவர் விமர்சனம் செய்தால் அதை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. உடனே அவர்களுக்கு எதிராகவும், அவர்கள் தீயவர்கள், விஷம் என பரப்புரை பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

இவர்களை அருகில் வைத்துக் கொள்வதே தீங்கு விளைவிக்கலாம். கொஞ்சம் ட்ரிகர் செய்தாலும் 10,000 வாளா பட்டாசு போல வெடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

பிரேக் ஹர் ஃபேஸ்!

பிரேக் ஹர் ஃபேஸ்!

தன்னை பலசாலி என நினைத்துக் கொண்டிருக்கும் பயந்தாங்கொள்ளிகள். நான் எல்லாம் யாரு தெரியுமா? வெளிய வந்து பார்க்க சொல்லு, என் ஏரியாவுக்கு வா நீ என சவடால் விடும் இவர்கள், உண்மையில் அவ்வளவு வர்த் கிடையாது.

தான் ஒரு மாஸ் என்ற பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து வரும் அப்பிராணி ஜீவன்கள் இவர்கள்.

அக்கா...

அக்கா...

முகத்திற்கு நேராக ஒரு மாதிரியும், முதுகுக்கு பின்னே வேறு மாதிரியும் பேசும் பச்சோந்தி வகையறாக்கள். அந்தந்த உறவுகளுடன் ஒட்டி உறவாட, அவர்களிடம் இருந்து ஏதேனும் காரியங்கள் நிகழ்த்திக் கொள்ள என்ன வேண்டுமானாலும் பேசும் கூழைக்கும்பிடு போடும் ஆட்கள்.

சிம்பிளாக வடிவேலு காமெடி வைத்து சொல்ல வேண்டுமானால், இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kind of Girls Behavior and Their Characteristics!

Kind of Girls Behavior and Their Characteristics!
Story first published: Friday, July 21, 2017, 13:41 [IST]