தமிழகத்தின் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கு நடந்த கொடுரம்! - My Story #98

Written By:
Subscribe to Boldsky

நான் எழுதுவது எனது பக்கத்துவீட்டு பெண்ணின் கதை..! அவளது பெயர் சீமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)... அவள் சின்ன பெண்ணாக இருந்த பொழுதில் இருந்து அவளை எனக்கு அவளை நன்றாக தெரியும்.. அவள் ஒரு சுட்டித்தனம் குறும்புத்தனம் செய்யும் பெண் என்பதையும் தாண்டி அவளது குறும்புத்தனங்கள் விசித்திரமானவையாக இருக்கும். அவளுக்கு அப்போது நான்கு வயது தான் இருந்திருக்கும், ஆனால் அவள் நான்கு வயது குழந்தையை போலவே நடந்துகொள்ளமாட்டாள்..

I am not interested in marriage but my parents push me into marriage life

அவளது குடும்பம் முதலில் ஒரு சாதாரணமான குடும்பமாக தான் இருந்தது.. அவர்கள் தங்க வேலை செய்பவர்கள்.. தங்களிடம் தங்கம் செய்ய சொல்லி தருபவர்களிடம் இருந்து சிறிதளவு தங்கத்தை ஏமாற்றி எடுத்து வைத்துக் கொள்வார்கள். இப்படி செய்தே அவர்கள் பெரும் செல்வந்தர்களாக மாறிவிட்டார்கள்...! முதலில் ஒரு சிறு ஓட்டு வீட்டில் ஆரம்பித்த அவர்களது வாழ்க்கை இப்போது ஒரு பெரிய பங்களாவில் தான் தொடந்து கொண்டு இருக்கிறது..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீமாவின் குடும்பம்

சீமாவின் குடும்பம்

சீமாவிற்கு ஒரு அண்ணாவும், ஒரு அக்காவும் இருக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் இருவரும் சீமாவை போல குறும்புத்தனம் செய்பவர்கள் அல்ல.. குழந்தைகள் என்றாலே குறும்புத்தனம் இருக்கத்தானே செய்யும் என்று நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் சீமாவின் குறும்புத்தனமோ எல்லை தாண்டிய குறும்புத்தனமாக தான் இருந்தது...!

பயங்கரமானவள்

பயங்கரமானவள்

நான்கு வயது குழந்தையாக இருந்த போதே அவள் ரோட்டில் செல்பவர்கள் மீது கற்களை கொண்டு எறிவாள்.. சுவற்றில் இருக்கும் பல்லி என்றால் அனைவருக்குமே அந்த வயதில் பயமாக தான் இருக்கும். ஆனால் இவள் அப்போதே பல்லியை தன் கரங்களால் பிடித்து முத்தமிடுவாள்..! வகுப்பில் ஆசிரியருக்கு அடங்கமாட்டாள். ஒரு நாள் ஆசிரியர் ஏன் ஒழுங்காக படிப்பதில்லை என்று கேள்வி கேட்டதற்கு கூட ஆசிரியரை இரும்பு கம்பியால் தாங்கிவிட்டாள். அவருக்கு மண்டை ஒடைந்து இரத்தம் வெளிப்பட்டது...!

ஆண்களே நடுங்குவார்கள்

ஆண்களே நடுங்குவார்கள்

இப்படி பல ரகளைகளை செய்து வளந்தவள் தான் சீமா...! அவளுக்கு படிப்பில் கொஞ்சம் கூட ஆர்வமே கிடையாது..! விளையாட்டில் தான் பெரும் ஆர்வம் இருந்தது.. அவள் ஆண்களை போல கம்பீரமாக தான் நடந்து கொண்டாள். ஆண்கள் எதை எல்லாம் விரும்பி செய்வார்களோ அவை எல்லாம் தான் அவளின் விரும்பமாக இருந்தது..!

பைக் ரேசர்

பைக் ரேசர்

அவளுக்கு அப்போது 11 வயது இருக்கும் அவளுக்கு அவளுடைய அப்பாவின் மோட்டர் பைக்கை ஓட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும்.. அந்த வயதில் ஆண்களே மோட்டர் பைக் எல்லாம் ஓட்டியிருக்க மாட்டார்கள்.. ஆனால் அவள் ஓட்டினாள்.. கூந்தலை பாய் கட் செய்திருப்பாள்.. அவளை கண்டால் ஆண்களே மிரண்டு போவார்கள்....!

படிப்பு வரவில்லை

படிப்பு வரவில்லை

அவள் நன்றாக படிக்காத காரணத்தால் அவளது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர் அவளது வீட்டில்... அவளுக்கு பிடித்த விளையாட்டு துறையிலேயே அவள் சாதிக்கட்டும் என்று அவளை அவளது விருப்பத்திற்கு விட்டுவிட்டார்கள்....! அவளும் ஒரு பெரிய விளையாட்டு பள்ளியில் சேர்ந்தாள்... பெரியவள் ஆனாலும் அவளது குறும்புத்தனங்கள் குறைந்ததாக தெரியவில்லை...!

சாதனை பெண்

சாதனை பெண்

சின்ன வயதில் இருந்தே அவளுக்கு பைக் ஓட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவளுக்கு பைக் ரேசில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசை... அவள் ஒரு பைக் ரேசர் ஆனாள்.. அப்போது நமது தமிழ்நாட்டிலேயே வைத்து அவள் ஒருத்தி தான் மிகச்சிறந்த பைக் ரேசராக இருந்தாள்...!

புகழ்..!

புகழ்..!

அவளது புகழ் நாடு முழுவதும் பரவியது... அவளது முகம் பத்திரிக்கைகளில் கவர் பக்கமாக வந்தது..! பல பத்திரிக்கைகளும், டிவி சேனல்களும் அவளை பேட்டி எடுக்க போட்டி போட்டுக் கொண்டன.. எங்களது ஊரே அவளை நினைத்து பெருமைப்பட்டது.. அவளுக்கு சாம்பியன் ஆக வேண்டும் என்பது தான் நீண்ட வருட கனவாக இருந்தது...!

சடங்குகள்

சடங்குகள்

அவள் ஒரு வட இந்திய பெண்.. அவர்களது சமூகத்தில் ஒரு பெண்களை திருமணமாகிவிட்டால், வீட்டை விட்டு வெளியே விட மாட்டார்கள்.. வீட்டிற்குள்ளேயே தான் இருக்க வேண்டும். முகத்தை கூட வெளியில் காட்ட கூடாது என்ற சம்பிரதாயம் கொண்டவர்கள்.. திருமணம் போன்ற சடங்குகள் அவளையும் விட்டு வைக்கவில்லை...!

திருமணம்

திருமணம்

குறிப்பிட்ட வயதிற்குள் அவர்களது மரபில் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்றிருந்தது.. அவள் சாதனை செய்து விட்டு திருமணம் செய்து கொள்கிறேன் என்று எவ்வளவோ பெற்றோர்களிடம் கொஞ்சினாள்.. கதறினாள்.. ஆனால் யாரும் அவளுடைய பேச்சை கேட்கவில்லை.. அவளை திருமணம் செய்து கொள்ள ஒரு மாப்பிள்ளையை கொண்டு வந்து நிறுத்தினார்கள்...!

சிதைந்த கனவுகள்

சிதைந்த கனவுகள்

திருமணம் என்பது அவளுக்கு ஒரு கூண்டுக்குள் அடைபட்டு கிடப்பதை போலவே ஆனது...! திருமணம் அவளது கனவுகளை சிதைக்க போகிறது என்பதை அவள் உணர்ந்தாள்.. அன்று அவளுக்கு நிச்சயதார்தம் நடைபெற்றது..! அனைவரும் நிச்சயதார்த்த வேலையில் பிஸியாக இருக்க, அவள் ஒரு அறைக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள்...!

இறப்பு

இறப்பு

அவள் கேட்டது எல்லாம் ஒருவருடத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என்ற ஒரு வேண்டுகோள் தான்..! அவள் ஒரு சாதனை பெண்ணாக வாழ ஆசைப்பட்டாள்.. ஆனால் அவளது வாழ்க்கை இப்படி முடியும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.. இப்போது அவர்களது பெற்றோர்கள் வருத்தப்பட்டு என்ன பலன்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

I Have to Live My Life I Do not Want Marriage

I am not interested in marriage but my parents push me into marriage life
Story first published: Wednesday, December 6, 2017, 16:30 [IST]