For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல ஆண்டுகள் கழித்து, காதலை சொல்ல போகும் போது அவனை பிணமாக தான் பார்த்தேன்!My Story #90

என் காதலை அவனிடம் சொல்ல முடியவில்லை

By Lakshmi
|

நான் அப்போது +12 படித்துக் கொண்டிருந்தேன்.. அந்த கால கட்டத்தில் வந்த காதல் தான் இது.. அவன் என் வீட்டிற்கு எதிர்வீட்டில் வசித்து வந்தான்..! அவன் நன்றாக பாட்டு பாடுவன்..! தினமும் காலையில் அவனது குரல் தான் எங்களுக்கு சுப்ரபாதமாக ஒலிக்கும்.. அவன் பாடுவது பக்கத்து வீட்டிற்கு எல்லாம் கேட்கும் என்று அவனுக்கு தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது...!

ஆனால் என் தோழி அடிக்கடி அந்த பையன் நல்லா பாடறான் என்று புகழ்ந்து தள்ளுவாள்...! என்னமோ தெரியாது அவனை பற்றி யாராவது பேசினால் எனக்கு ரொம்ப பிடிக்கும்...! கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும்..! அடிக்கடி அவன் வீட்டை வெளியே வரும் போது எல்லாம் நான் வேகமாக ஓடி சென்று மிகவும் சாதாரணமாக ஓரக்கண்ணால் பார்ப்பேன்...! யாருக்கும் தெரியாதவாறு ஜன்னல் வழியாக அவன் என்னென்ன செய்கிறான் என்பதை எல்லாம் கண்காணிப்பேன்...! அப்படி கண்காணிக்கும் போது யாராவது என்னை பார்த்துவிடுவார்களா என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே தான் இருக்கும்.. இதயம் எல்லாம் துடிதுடிக்கும்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மழை

மழை

பல நாட்கள் அவனை ஒளிந்து நின்று பார்ப்பேன்..! அவன் எனது பள்ளிக்கு அருகில் இருக்கும் கல்லூரியில் தான் படிக்கிறான்..! சரியாக அவன் புறப்படும் நேரத்தில் தான் நானும் பள்ளிக்கு புறப்பட்டு செல்வேன்..! அவன் பின்னாலேயே செல்வேன்..! அது ஒரு மழைக்காலம்..! அன்று மாலை நல்ல மழை..! பள்ளி விட்டு வீட்டிற்கு திரும்பும் போது திடிரென மழை பெய்ந்தது..!

 உரையாடல்

உரையாடல்

அவன் எனக்கு அருகில் தான் நடந்து வந்து கொண்டிருந்தான்.. அவனிடம் குடை இல்லை.. நான் அவனுக்கு குடை கொடுத்தேன்..! இருவரும் ஒரே குடையை பிடித்து நடந்தோம்.. எங்களை சேர்த்து வைத்த மழைக்கு மனதிற்குள் ஒரு நன்றியை சொல்லிக் கொண்டேன்...! எங்களது உரையாடல் ஆரம்பமானது...!

நீங்களும் நல்ல பேசறீங்க

நீங்களும் நல்ல பேசறீங்க

நீங்க நல்லா பாட்டு பாடறீங்க என்பதில் ஆரம்பித்து அவனுடன் பேசிக்கொண்டே இருந்தேன்..! அவனும் நான் பேசுவதிற்கு எல்லாம் ம்..ம் என்று சொல்லிக் கொண்டும், ஒரிரு வார்த்தைகளில் பதிலளித்துக் கொண்டும் வந்தான்.. கடைசியில் நாங்கள் வீட்டை அடைந்தோம்...! ஒகே பாய் என்று கூறிவிட்டு சில அடிகள் நகர்ந்த என்னை ஹலோ...! என்று அழைத்தான்.. நீங்களும் நல்ல பேசறீங்க.. என்று கூறினான்.. தேங்ஸ் என்று சிரித்துக் கொண்டே செல்லிவிட்டி நகர்ந்தேன்...!

நேசித்து வாழ்க்கிறான்

நேசித்து வாழ்க்கிறான்

அந்த உரையாடலுக்கு பிறகு நான் பள்ளிக்கு செல்லும் போது அவனுடன் தான் நடந்து செல்வேன்..! அவன் எப்போதும் வாழ்க்கையில் உயர வேண்டும்.. அனைவரிடமும் நல்ல உறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது போலவே தான் பேசுவான்.. அவனது பேச்சிலேயே அவன் வாழ்க்கையை எவ்வளவு நேசித்து வாழ்க்கிறான் என்பது தெரியும்...!

மனைவியை போல தான் பார்த்துக் கொண்டான்...!

மனைவியை போல தான் பார்த்துக் கொண்டான்...!

எனது பள்ளி படிப்பு முடிந்து கல்லூரி காலம் வந்தது...! நான் அவன் படிக்கும் அதே கல்லூரியில் சேர்ந்தேன்...! எனக்கு அவன் மீது உள்ள காதல் அதிகரித்து கொண்டே போனது.. அதனால் அவனிடம் என் காதலை தெரிவித்தேன்.. அவனும் என் காதலை ஏற்றுக் கொண்டான்... என் மீது அவன் அத்தனை அன்பையும் அக்கறையையும் காட்டினான்.. அவனை தவிர வேறு யாராலும் அந்த அளவுக்கு என்னை காதலிக்க முடியாது...! என்னை அவனது மனைவியை போல தான் பார்த்துக் கொண்டான்...!

சண்டை

சண்டை

எனக்கு காதலில் அடிக்கடி சண்டைகளும் சமாதானமும் இருக்க வேண்டும் என்று ஆசை.. ஆனால் அவனுக்கோ உறவுகளுக்குள் சண்டையே இருக்க கூடாது என்று ஆசை.. அவனுடன் நான் அடிக்கடி சண்டை போடுவேன்.. ஆனால் உடனே சேர்ந்து கொள்வேன்... இது எல்லாம் அவனுக்கு நல்ல உறவின் அடையாளமாக தெரியவில்லை போல இருந்தது...! இப்படி எல்லாம் சண்டை போட்டுக் கொண்டு இருப்பது நல்ல உறவுக்கு அடையாளம் கிடையாது என்று அவன் என்னிடம் கூறினான்...! நானும் சாதாரணமாக சண்டை போடறதும், சேர்ந்து கொள்வதும் கூட காதல் தான் என்று கூறுவேன்...!

வயது வித்தியாசம்

வயது வித்தியாசம்

எனக்கும் அவனுக்கும் 5 வருட வயது வித்தியாசம் இருந்தது.. அதனால் அவன் ஒரு விஷயத்தை எதற்காக சொல்கிறான் என்று கூட என்னால் யோசிக்க முடியவில்லை.. நான் ஒரு குழந்தையின் மனநிலையில் தான் இருந்தேன்.. என்னை உயிரினும் மேலாக பார்த்துக் கொண்ட அவனை என்னால் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவே முடியவில்லை.. எங்களுக்குள் பல கருத்து வேறுபாடுகள் உண்டாகின...!

 பிரச்சனை

பிரச்சனை

எங்களது காதல் பல பிரச்சனைகளால் உடைந்து போனது.. பிரிவுக்கு பிறகு தான் காதலின் வலி என்ன என்பதை உணர்ந்தேன்.. அவனிடம் நான் கெஞ்சினேன்...! ஆனால் அவனோ உன்னால் எனக்கு உண்டான காயங்கள் போதும்...! இனி உனக்கும் எனக்கும் செட்டாகாது என்று கூறிவிட்டான்...! அந்த சமயத்தில் அவனது கல்லூரி காலம் முடியவே, அவன் அவனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டான்...

உன்னை பார்க்க வேண்டும்

உன்னை பார்க்க வேண்டும்

எனக்கு அவன் சொந்த ஊருக்கு சென்றவுடன் அவனை பார்க்கும் வாய்ப்போ அல்லது பேசும் வாய்ப்போ எதுவுமே கிடைக்கவில்லை... எனக்கு அவனை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.. பக்கத்து வீட்டு பையனிடம் அவனது விலாசத்தை வாங்கிக் கொண்டு அவனை சந்திக்க அவனது சொந்த ஊருக்கு புறப்பட்டேன்... அவனது ஊருக்கு 10 மணிநேரம் பேருந்தில் பயணம் செய்து தான் சென்றேன்.. எனக்கு பரிட்சையம் இல்லாத ஒரு நகரம்.. நான் அவனது வீட்டை கண்டு பிடித்து செல்வதற்குள் மாலை நேரம் ஆகிவிட்டது..! அவன் என்னை கண்டாதும் திட்டி என்னை ஊருக்கு போ என்று பேருந்தில் ஏற்றி விட்டுவிட்டு என்னை திரும்பி கூட பார்க்காமல் சென்றுவிட்டான்...!

பேசாமல் சென்று விட்டான்

பேசாமல் சென்று விட்டான்

எனக்கு அழுகை அழுகையாக வந்தது...! என்னுடன் ஒற்றை வார்த்தை கூட பேசாமல் சென்றுவிட்டான் அவன்...! நான் அவனது நினைவிலேயே நான்கு வருடங்களை கழித்தேன்...! எனக்கு வேலைக்கு செல்லும் வயதில் தான், அவன் என்னை காதலிக்கும் போது சொன்ன ஒவ்வொரு விஷயத்தின் அர்த்தமும் புரிந்தது.. அவன் சொன்னது எல்லாம் சரி தான்.. நான் தான் அவனை காயப்படுத்திவிட்டேன் என்று தோன்றியது...!

வருந்தாத நாள் இல்லை

வருந்தாத நாள் இல்லை

ஒவ்வொரு நாளும் நான் செய்த தவறை நினைத்து வருந்தாமல் இல்லை... அவனை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது... எனக்கு அந்த வயதில் நீ கூறிய எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.. எனக்கு இப்போது தான் நீ கூறியது எல்லாம் சரி என்பது புரிகிறது.. இப்போது நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணற... நான் சரியான வயசுல காதலிக்காதது தான் தவறு.. உன் மீது உள்ள காதல் என்றைக்குமே மறையாது... என்னை திருமணம் செய்து கொள் என்று எல்லாம் அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன்...!

விபத்து

விபத்து

அந்த சமயத்தில் எனக்கு ஒரு போன் கால் வந்தது...! என் காதலன் பைக் விபத்தில் இறந்துவிட்டான் என்று...! நான் பதறிப்போய் எங்களது காதல் விஷயத்தை எல்லாம் என் வீட்டில் சொல்லி.. நான் அவனை பார்க்க வேண்டும் என்று கதறி அழுதேன்.. என் அம்மா என் வேதனையை புரிந்து கொண்டு என்னை அழைத்து சென்றார்...! அவனை ஒரு பிணமாக இத்தனை ஆண்டுகள் கழித்து பார்ப்பேன் என்று துளியும் நான் நினைக்கவில்லை....! அவன் மீது படுத்துக் கொண்டு அழுதேன்....!

காதல்

காதல்

அங்கே இருந்தவர்கள் கூறிய விஷயங்கள் எல்லாம் என்னை கலங்க வைப்பதாக இருந்தது.. என்னை அவனும் காதலித்துக் கொண்டு தான் இருந்திருக்கிறான்.. எனக்கு அனைத்தையும் புரிந்து கொள்ளும் வயது வந்தவுடன் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வீட்டில் அனுமதி வாங்கி வைத்திருந்திருக்கிறான்.. மேலும் எனக்காக அவன் பல பரிசுகளையும், கடிதங்களையும் எழுதி அவனது அறையில் வைத்திருந்தான்... அதை எல்லாம் கண்டு அவனை மிஸ் செய்து விட்டோமே என்று என் மனம் பதறியது... அந்த எமனிடம் சண்டை போட்டாவது அவனை திரும்ப கூட்டிக் கொண்டு வர வேண்டும் என்று துடித்தது.. மனது..! ஆனால் எனக்கு அந்த சக்தி எல்லாம் தான் இல்லையே.....!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

I can not say my love to him

I can not say my love to him
Desktop Bottom Promotion