ப்ரோபோஸ் செய்தவரிடம் மனம் கோணாமல் "நோ" சொல்வது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

காதலில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் இது தான். நம்மிடம் வரும் ப்ரொபோசல்களை தவிர்க்கத் தெரியாமல் அல்லது விளையாட்டாய் நினைத்து துவங்குகிற விஷயங்கள் பெரிய சிக்கலில் கொண்டு போய் முடித்திடும்.

How to reject love proposals

ஓவியா காதலுக்கு நான் காரணமல்ல, காதலை தூண்டுகிற மாதிரி நான் எதுவும் சொல்லவில்லை என்று சொல்லும் ஆரவ் எப்படி ஓவியாவின் காதலை கையாண்டார் அதனை எப்படி தவிர்த்தார் என்பது தான் கேள்வி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உறுதி :

உறுதி :

இந்த உறவு வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா என்று பாருங்கள். பிறர் சொல்கிறார்கள் என்றோஅல்லது நீங்களாவே நினைத்துக் கொண்ட ஒரு விஷயத்திற்காக இந்த உறவை வேண்டாம் என்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பிறரின் உணர்வுகளோடு அணுகும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். யாருக்குமே வேண்டாம் என்று ஒதுக்கும் போது கோபம் வரும். சிலர் நம்மை தாக்குவது அல்லது அவர்களை தாக்கிக் கொள்வது என உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தலாம் அல்லது மன அழுத்தத்தால் மனரீதியாக பாதிக்கப்படலாம்.

அவாய்ட் பண்ணால் என்னவாகும் ? :

அவாய்ட் பண்ணால் என்னவாகும் ? :

பெரும்பாலானோர் செய்யும் தவறு இது. உங்கள் மீது விருப்பம் கொண்டிருக்கும் நபரிடம் உங்களுடைய பதிலை சொல்லாமல் தவிர்ப்பது என்பது தவறான போக்கு.

நீங்கள் எதுவும் சொல்லாத போது உங்களுக்கான பதில் இது தான் என்று தனக்கு ஏற்றதை நினைத்துக் கொள்வார்கள்.

கமிட்மெண்ட் :

கமிட்மெண்ட் :

வேண்டாம் என்று முடிவெடுத்தப் பிறகு சும்மா பேசிக் கொள்வோம் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காதீர்கள். நீங்கள் வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு நேரடியாக சொல்லாமல் சும்மா பேசலாம் என்று நினைத்து பேசினால், எதிர்தரப்பில் உள்ள நபர் உங்களுக்கும் இந்த உறவில் விருப்பம் என்று நினைத்துக் கொள்வார்.

அதே போல கொஞ்ச நாட்கள் கழித்து சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டே நட்பை தொடராதீர்கள். பின்னாட்களில் அதுவே பெரிய பாண்டிங்கை உருவாக்கிடும்.

பளீச் பதில் :

பளீச் பதில் :

ஆரோக்கியமான போக்கு இது. இது உங்களுக்கான பாதுகாப்பு மட்டுமல்ல எதிர்தரப்பில் உள்ள நபருக்கும் இது நல்லது. நேரடியாக உன்னை பிடிக்கவில்லை என்று சொல்வது கடினமாக இருந்தால் எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு சில நாட்களுக்கு பேச்சையும் தவிர்த்திடுங்கள்.

காதல் வேண்டாம் நண்பர்களாக பேசுவோம் என்றோ அல்லது, உங்களுக்கு ஏன் விருப்பமில்லை என்பதை அவருக்கு எடுத்துச்சொல்லி புரியவைக்க வேண்டும் என்றோ மெனக்கெட வேண்டாம்.

அவர் உங்களை சமாதானம் செய்வதில் மும்முரமாய் இருப்பார் என்பதால் இதில் கவனம் வேண்டும்.

நேரிலா? குறுஞ்செய்தியா? :

நேரிலா? குறுஞ்செய்தியா? :

ஒருவர் வெளிப்படுத்தும் அன்பை நாம் வேண்டாம் என்று சொல்லப்போகிறோம். இதனை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. பெரிதும் நம்பிக்கையுடனும் ஆசையுடனும் காத்திருக்கும் போது நெகட்டிவ் பதிலை சொல்லப்போகிறோம் என்றால் நேரில் சொல்வதை விட குறுஞ்செய்திகளில் உங்கள் பதிலை சொல்வதே சரியான முறை.

குற்ற உணர்வு வேண்டாம் :

குற்ற உணர்வு வேண்டாம் :

பெரும்பாலானோர் சறுக்கும் இடம் இது. என் மேல் இவ்வளவு காதல் கொண்டிருப்பவரை வேண்டாம் என்று சொல்கிறோமே என்ற குற்றவுணர்வில் தான் காதலே துவங்கும்.

இந்த உறவு வேண்டாம் என்று நினைத்த பிறகு, அதனை சொல்வதற்கு தயங்கியோ அல்லது பிறர் தவறாக நினைத்துக்கொள்வார்களோ என்று நீங்களாகவே நினைத்துக் கொள்ளாதீர்கள். இதில் குற்ற உணர்வு ஏற்பட அவசியமே இல்லை.

நிரூபிக்க தேவையில்லை :

நிரூபிக்க தேவையில்லை :

காதல் இல்லை. உன் மீது எனக்கு காதல் வரவில்லை என்று சொல்வது எவ்வளவு முக்கியமோ அதேயளவு இதுவும் முக்கியம். இந்தந்த காரணங்களால் தான் வேண்டாம் என்கிறேன் உங்கள் தரப்பு நியாயத்தை அடுத்தவரிடம் நிரூபிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.

தவிர்த்து விடுங்கள் :

தவிர்த்து விடுங்கள் :

நீங்கள் வேண்டாம் என்று சொன்னவுடன், அதற்கான காரணத்தை கண்டறிய பெரிய பிரயத்தனங்களை எடுப்பார்கள். ஏன் பிடிக்கவில்லை என்னை மாற்றிக் கொள்கிறேன் என்று உனக்கு ஏற்றார் போல மாற்றிக் கொள்கிறேன் என்று கேட்டால் விளக்கம் கொடுக்க ஆரம்பிக்காதீர்கள்.

போலி நம்பிக்கை :

போலி நம்பிக்கை :

உறுதியான பதிலைக் கொடுங்கள். வேண்டாம் என்று நீங்கள் முடிவெடுத்தப் பின்னர் இந்த முடிவு நாளை மாறலாம் என்ற நம்பிக்கையை கொடுக்காதீர்கள்.

கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் உங்கள் முடிவு மாறும் என்ற அடிப்படையில் உங்களை நெருக்குவதற்கான சந்தர்ப்பங்களை நீங்களே உருவாக்கி கொடுக்காதீர்கள்.

வேண்டாம் என்று சொல்லவது தவறல்ல :

வேண்டாம் என்று சொல்லவது தவறல்ல :

உங்களிடம் வரும் ஒரு வேண்டுகோளை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் ஒருவரின் கையில் தான் இருக்கிறது. வேண்டாம் என்று சொல்வதால் நீங்கள் தவறு செய்தவர் ஆகிவிட வில்லை.

உங்கள் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுத்து சரியான முடிவை எடுத்திருப்பதாக சந்தோஷம் கொள்ளுங்கள்.

அணுகுமுறை :

அணுகுமுறை :

பிடிக்கவில்லை என்பதால் ஆக்ரோஷமாக எதிர்ப்பை காட்டுவது, வந்தாலே ஓடி ஒளிந்து கொள்வது, நேரடியாக தவிர்ப்பது, போன்ற சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். இது அவர்களிடம் எதிர்மறையான எண்ணத்தையே ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to reject love proposals

How to reject love proposals
Story first published: Monday, August 7, 2017, 15:52 [IST]