பொறாமையில், காதலனிடம் என்னை பற்றி தவறாக கூறும் அம்மா - உண்மை கதை!

Posted By:
Subscribe to Boldsky

என் தாயே என்னை ஏன் வெறுக்கிறார் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. தினம், தினம் என் மீது அவர் எரிமலை போல வெடிப்பது ஏன் என்பது நான் வளர, வளர தான் அறிந்துக் கொள்ள துவங்கினேன். தவறான தருணத்தில் பிறந்து, என் தாயின் வேலையை நான் கெடுத்துவிட்டேன் என்பது தான் அதன் காரணம்.

சிறுமியாக இருந்த போதே, நான் எனது அன்னையிடம் இருந்து பெரிதாக எந்த அரவணைப்பும், அன்பும் பெற்றது இல்லை. இன்னும் தெளிவாக கூற வேண்டும் எனில், நான் அழகாக இருப்பதால் கூட அவர் என் மீது பொறாமை கொண்டிருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என் நண்பர்கள்...

என் நண்பர்கள்...

சில சமயம் என் வீட்டுக்கு வரும் தோழர்கள், தோழிகள்... "ஆன்டி, அனுஸ்ரீயை விட நீங்கள் அழகாக இருக்கீங்க.." என்று கூறிவிட்டால் போதும். அவர் ஏதோ பெரும் போரில் வெற்றி பெற்றது போல ஒரு கம்பீரமான புன்னகையை என்மீது எறிந்து செல்வார்.

அப்பா பிஸி!

அப்பா பிஸி!

நான் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் எனது அப்பா வேலையில் மிகவும் பிஸியாக இருந்தார். எனது அப்பாவின் உலகம் அவரது அலுவலகம் மற்றும் நண்பர்களாக இருந்தது. ஆகையால், தாய் - மகளுக்கு மத்தியில் என்ன நடக்கிறது என்பது குறித்து அவர் பெரிதாக அறிந்திருக்கவில்லை.

டாப்பர்!

டாப்பர்!

என் வகுப்பில், பள்ளியில் நான் தான் டாப்பர். ஆனால், எனது வாழ்வில் நான் ஒரு போதும் அதை பெரிதாக உணர்ந்ததும் இல்லை, பெருமைக் கொண்டதும் இல்லை. ஏனெனில், நான் முதல் ரேன்க் வாங்கி வந்தாலும், அதை பாராட்டவோ, அதை மகிழ்ந்து கொண்டாடவோ வீட்டில் யாரும் இல்லை. அப்பாவிற்கு வேலை பிஸி, அம்மாவிற்கு பொறாமை, போர் குணம்.

முதல் காதல்...

முதல் காதல்...

க்ரஷ், பாஸிங் க்ளவுட் போன்ற கனவு நாயகர்களை எல்லாம் தாண்டி, எனக்கொரு முதல் காதல் இருந்தது. என் காதலன் வீட்டிற்கு வரும் போது மட்டிலும், என் மீது அளவுகடந்த அன்பை பொழிந்து, ஓர் சிறந்த தாய் போல தன்னை காண்பித்துக் கொள்வார் எனதருமை தாயார்.

போட்டு வாங்குதல்...

போட்டு வாங்குதல்...

அதே போல நான் இல்லாத போது, எனது காதலனை போன் காலில் அழைத்து நான் என்ன செய்கிறேன், எனது வாழ்க்கை எப்படி நகர்கிறது என அனைத்து செய்திகளையும் கேட்டறிந்து கொள்வார். அதன் பின்னணியல் என்ன நோக்கங்கள் இருந்தன என்பதையும் நான் மிக தெளிவாக உணர்ந்தேன்.

குறைபாடுகள்!

குறைபாடுகள்!

என் காதலன் முன்பு எப்போதும் எனது குறைகள் பற்றியே பேசுவார். நான் மிகவும் வலுவிழந்தவள், நான் எதற்கும் லாயக்கில்லை என்பது போன்ற பிம்பத்தை உருவாக்குவார். என் காதலன் முன்பு நான் தரமற்றவள் என்பது போல நிற்க வேண்டும் என்பதே எனது அம்மாவின் ஆசை, எண்ணம் எல்லாம்.

அப்பா ரிட்டையர்ட்!

அப்பா ரிட்டையர்ட்!

அப்பா வேலையில் இருந்து ரிட்டையர்ட் ஆனார். அப்போது தான் கொஞ்சம், கொஞ்சம் எனது சூழ்நிலையை உணர ஆரம்பித்தார் அப்பா. ஆனால், எனது அப்பாவிற்கு நான் ஒரு நல்ல ரிசல்ட் கொடுக்க வேண்டிய மெஷினாக மட்டுமே தெரிந்தேன். எனது ஆரோக்கியம் கெடுதல், எனது தேவைகள், எனக்கான ஷாப்பிங் என முற்றிலும் அனைத்திற்கும் நானே கடமைப்பட்டவள், அவரிடம் எதையும் எதிர்பார்க்க கூடாது.

மிக அரிதாக எனக்காக அவர் செலவு செய்வார். அப்படி அவர் செய்யும் செலவிற்கும், என்னிடம் இருந்து ஒரு பெரிய ரிசல்ட் எதிர்பார்ப்பார்.

மெண்டல் பிரஷர்!

மெண்டல் பிரஷர்!

இது அனைத்தும் எனக்கு பெரியளவில் மெண்டல் பிரஷர் கொடுக்க ஆரம்பித்தது. இதனால் மன அழுத்தம், ஸ்ட்ரெஸ் அதிகரித்து நிறைய மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். சொந்த வீட்டில், எனை பெற்ற தாய், தந்தையிடம் இருந்தே இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும், இன்று வரை நான் தான் படிப்பில் டாப்பராக இருக்கிறேன். என ஒரே வலிமை, நான் மட்டுமே.

பெற்றோர்களே!

பெற்றோர்களே!

அனுஸ்ரீ எனும் இளம்பெண்ணின் இந்த வாழ்க்கை சம்பவம் மற்றும் அவர் எதிர்கொள்ளும் தாக்கங்கள் இன்றைய பல மாடர்ன் பெற்றோர்களால் பல குழந்தைகள் தினம், தினம் எதிர்கொள்ளும் விஷயமாக இருக்கிறது.

ஒருவேளை வேலை தான் முக்கியம் என்றால், லட்சியம் அடையும் வரை திருமணம் செய்துக் கொள்ளாதிருக்க வேண்டும். இல்லையேல், குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டிருக்க வேண்டும்.

உங்கள் ஆசைக்கு திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொண்டு, பிறகு இந்த குழந்தையால் தான் எனது கனவுகள், ஆசைகள் தகர்ந்தன. குழந்தை தான் எனது வெற்றிகளுக்கு, வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என கருதுவது பெரிய முட்டாள்த்தனமான செயல்.

புரிந்துக் கொள்ளுங்கள்!

புரிந்துக் கொள்ளுங்கள்!

குழந்தைகள் பெரிதும் உறவு சார்ந்தும், நல்லவை கற்றுக் கொள்வதும் அவரவர் பெற்றோரிடம் இருந்து தான்.நீங்களே அவர்களுக்கு ஒரு தவறான முன்மாதிரியாக இருப்பது அவர்களது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தம்.

பணம் சம்பாதிக்க வேண்டும், கார், வீடு வாங்க வேண்டும், வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வேண்டும் என்பது மட்டுமே வாழ்க்கையின் இலட்சியமாக கொள்ளாதீர்கள். அல்ல, இது தான் முக்கியம் எனில், குழந்தை பெற்றுக் கொள்ளாதீர்கள்.

சமூகத்தை பாதிக்கும்!

சமூகத்தை பாதிக்கும்!

குழந்தை வளர்ப்பு என்பது பெற்றதால் வரும் கடமை அல்ல, இது ஒரு பெரிய சமூக கடமை. உங்கள் வளர்ப்பிலும், நல்வழிப்படுத்தும் முறையிலும் தான் உங்கள் பிள்ளைகள் நாளைய சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்படுத்த போகிறார்களா? பத்தோடு பதினொன்றாக இருக்க போகிறார்களா? அல்ல தவறான உதாரணமாக இருக்க போகிறார்களா? என்பது அடங்கியிருக்கிறது.

எனவே, குழந்தை வளர்ப்பில் கோட்டைவிட்டுவிட வேண்டாம். இது உங்கள் குடும்பத்தையும் பாதிக்கும், சமூதாயத்தையும் பாதிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Even My Mom Does not Like Because of This - Real Story!

Even My Mom Does not Like Because of This - Real Story!