இந்தியாவில் பலதரப்பட்ட காலச்சாரங்கள் மற்றும் அவற்றிற்குரிய சில கட்டுப்பாடுகள், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் உள்ளன. இன்று இந்தியாவில் கல்வி மற்றும் விழிப்புணர்வு அதிகமாக உள்ள காரணத்தால், கலப்புத் திருமணங்களுக்கு வரும் எதிர்ப்புகள் சற்று குறைந்துள்ளன. ஆனால் இன்னும் முழுமையாக குறையவில்லை என்பது தான் உண்மை.
கலப்பு திருமணங்களுக்கு பல பெற்றோர்கள் இன்னும் ஒரு சில காரணங்களுக்காக எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் கலப்பு திருமணங்களால் தவறுகள் எதுவும் இல்லை. என்ன தான் கலப்பு திருமணங்கள் இரண்டு குடும்பங்களுக்கு இடையே சண்டையை உருவாக்கினாலும், அதில் பல நிறைகள் உள்ளன.
சமூகத்தின் கண்களை திறந்து வைப்பதாகவும், பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைத்து சாதியே இல்லாத ஒற்றுமை இந்தியாவை உருவாக்கவும் இந்த கலப்பு திருமணங்கள் உதவுகின்றன. இந்த கலப்பு திருமணங்களினால் உண்டாகும் நிறைகளை பற்றி இந்த பகுதியில் காணலாம்.
புரிதல் அதிகரிக்கிறது!
பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் கலப்பு திருமணங்கள் குறைவு தான். பெரும்பாலான கலப்பு திருமணங்கள் கலப்பு திருமணங்களாக தான் உள்ளன. இந்த கலப்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளிடையே புரிதலும், அன்யோன்யம் அதிகமாக உள்ளது. அவர்கள் மற்றவர்களை காட்டிலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள்.
வரதட்சணை குறைவு!
கலப்பு திருமணங்களில் பெரும்பாலும் வரதட்சணையாக இது வேண்டும், அது வேண்டும் என்று பெண் வீட்டாரிடம் கேட்பதில்லை. இதனை ஒரு முக்கிய நிறையாக எடுத்துக்கொள்ளலாம்.
சமூகத்தில் மாற்றம்:
கலப்பு திருமணங்களில் மக்களுக்கு பரந்து விரிந்த மனதையும், தொலைநோக்குப் பார்வையையும் தருகிறது. அவர்கள் இருவருக்கும் பிடித்திருக்கிறது திருமணம் செய்து கொள்கிறார்கள், அவர்களது வாழ்க்கையை நமது கையில் எடுத்துக்கொள்ள கூடாது என்ற மனப்பான்மையை தருகிறது.
ஆரோக்கியம்!
கலப்பு திருமணங்கள் பொதுவாக இரத்தபந்தத்துடன் நடைபெற வாய்ப்புகள் இல்லை. இதனால் நெருங்கி சொந்தத்தில் திருமணம் செய்வதால் உண்டாகும் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாவதில்லை.
கலாச்சாரம், பண்டிகைகள்:
கலப்புத் திருமணங்கள் செய்து கொள்வதால் பல பண்டிகைகளையும், விழாக்களையும் கொண்டாடலாம். பல்வேறு விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். திருமணத்தன்று கூட பல்வேறு சடங்குகள் இருக்கும்.
அறிவான குழந்தைகள்:
ஒரு ஆராய்ச்சியில், கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள், ஒரே இனத்தில் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகளை விட அறிவானவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
சிறந்த பெற்றோர்கள்:
கலப்புத் திருமணம் செய்து கொண்ட பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை அனைத்து விஷயத்திலும் சிறப்பாக வளர்க்கிறார்களாம். அவர்கள் எதையும் தொலைநோக்கு பார்வையுடன் பார்க்கிறார்களாம். சமூகத்தில் தன் குழந்தை நன்றாக வர இவர்களது எண்ணங்களும் செயல்களும் பெரும் உதவியாக இருக்கிறது.
Boldsky உடனடி செய்தி அலர்ட் பெற | Subscribe to Tamil Boldsky.
Related Articles
இந்தக் கல்யாணம் வேண்டாம் கடைசி நிமிடத்தில் மணமகளின் திடீர் முடிவு! my story #235
நான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பே கிடையாது! My story #223
18 வருசம் கழிச்சு உசுரு திரும்ப கிடச்ச மாதிரி இருந்துச்சு! My story #208
உண்மைக்காதலாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்!
வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியும்ல! My Story #204
சினிமாவுல வாய்ப்புத் தேடுற பையன நம்பி எப்டி கல்யாணம் பண்றது? My story #199
யார வேணாலும் லவ் பண்ணு ஆனா என்னைய கல்யாணம் பண்ணிக்க! My story # 176
லவ் மட்டும் வேணாம் மச்சி....! காதலின் அபத்தங்கள்
இதுவரை பேசப்படாத மகாராணியின் இன்னொரு பக்கம்! My Story #170
தோழியால் சிதைந்து போன திருமண வாழ்க்கை! my story #154
இந்த மூனு ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டு காதல் பிரிவு உண்டாகலாம்! ஆனால், பயப்பட தேவையில்லை!
ஆச்சரியங்களை அள்ளித்தெளிக்கும் முதல் காதல்! காதலியை இப்படியா சந்திக்கணும்! my story #151
6 வருடக் காதல்! இப்படி பிரியும் என்று நினைக்கவில்லை!my story #214